Central Government Budget Preparation to begin on October 16 : ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் இறுதியில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான பணிகள் அக்டோபர் மாதம் 16ம் தேதியில் இருந்து துவங்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணியில் மத்திய அரசின் நிதி அமைச்சகம் கீழ் பணியாற்றும் நிதி செயலாளர்கள், செலவுச் செயலாளர்கள், மற்றும் நிதி ஆலோசகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சரி செய்யும் வகையில் பட்ஜெட் தயாரிப்புகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : புதிய ஆய்வு: கோவிட்-19 பரவலில் காற்றோட்ட அமைப்புகளின் பங்கு
இந்த கொரோனா ஊரடங்கால் பெரும் பொருளாதார சரிவை சந்திந்துக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு நல்ல செய்திகள் வருமா என்பதை இந்த பட்ஜெட் அறிவிப்புகள் நமக்கு விவரிக்கும். நவம்பர் முதல் வாரம் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil