ரபேல் விமான ஒப்பந்த ஆவணங்களை 10 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றம் உத்தரவு

அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு...

By: Updated: October 31, 2018, 04:09:08 PM

ரபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு : வாங்குவதில் ஊழல் நடைபெற்றதாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி வந்தது காங்கிரஸ் கட்சி.  காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி, மற்றும் வழக்கறிஞர் ப்ரஷாந்த் பூஷன் மூவரும் அக்டோபர் 24ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டுமென மனு ஒன்றினை தாக்கல் செய்தனர். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

ரபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு விசாரணை

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறி இதற்கு முன்பு வைக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகன், நீதிபதிகள் யூ யூ லலித் மற்றும் கே.எம். ஜோசப் அடங்கிய அமர்வு இன்று தொடங்கியது.

இன்னும் 10 நாட்களில் ரபேல் போர் விமானங்கள் வாங்க இதுவரை எடுத்து வந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முறையாக சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. பொது வெளியில் மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அதில் இடம் பெற்றிருக்க வெண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் தொழில்நுட்பம் மற்றும் ராணுவ ரகசியங்கள் குறித்த விளக்கங்கள் அதில் தேவையில்லை என்பதையும் கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட இயலாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகின்ற 14ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Centre should file an affidavit on rafale fighter jet deal between india and france within 10 days says sc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X