ரஃபேல் விமானங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமா சிபிஐ ? உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அனில் அம்பானியிடம் இருந்து ஆதாயங்கள் அடைய தங்களின் பதவிகளை தவறாக பயன்படுத்துகிறார்கள் மக்கள் பிரதிநிதிகள்

By: Updated: April 22, 2019, 03:14:35 PM

ரஃபேல் போர் விமான ஊழல் சிபிஐ விசாரணை : காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி, மற்றும் வழக்கறிஞர் ப்ரஷாந்த் பூஷன் மூவரும் அக்டோபர் 4ம் தேதி சிபிஐ அலுவலகம் சென்றுள்ளனர்.

அங்கே தலைமை இயக்குநராக செயல்பட்டு வந்த அலோக் வர்மாவிடம் ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக 132 பக்க அளவில் புகார் ஒன்றினை கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் புலனாய்வுத் துறை இயக்குநர்கள் மீது தரப்பட்டிருக்கும் அழுத்தம் காரணமாக அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை போடவில்லை.

மேலும் படிக்க : அலோக் வர்மா விசாரணை செய்து வந்த வழக்குகள்

ரஃபேல் போர் விமான ஊழல் சிபிஐ விசாரணை வேண்டும்

இதனைத் தொடர்ந்து நேற்று (24/10/2018) அன்று இம்மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளர். அதில் “உயர்ந்த பதவியில் இருக்கும் மக்கள் பணி செய்யும் ஊழியர்கள் குற்றங்களை செய்திருக்கிறார்கள் என்பதை தக்க ஆதாரங்களுடன் தந்திருக்கிறோம்” என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மேலும் அந்த புகாரில், உயர் பதவி வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் பதவியை தவறாக பயன்படுத்தி, ரஃபேல் டீலின் ஆஃப்செட் ஒப்பந்த மூலமாக, திரு. அனில் அம்பானியிடம் இருந்து ஆதாயங்கள் அடைய முற்பட்டிருக்கிறார்கள்” எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிபிஐ இந்த புகாரினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Yashwant sinha arun shourie prashant bhushan move sc seek cbi probe into rafale jet deal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X