ஒரே அணியில் திரளும் எதிர்க்கட்சிகள் : மு.க. ஸ்டாலினை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு

09/11/2018 அன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து பேச உள்ளார் சந்திரபாபு நாயுடு

முக ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு சந்திப்பு : பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இது தொடர்பாக கடந்த வாரம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்துத்து பேசினார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

முக ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

அந்நிகழ்வின் போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, நேசனல் கான்ஃபிரன்ஸ் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாதக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷரத் பவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் நாளை (08/11/2018) திமுக கட்சித் தலைவரான முக ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. சென்னையில் நடக்கும் இந்த சந்திப்பினைத் தொடர்ந்து நாளை மறுநாள் (09/11/2018) அன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து பேச உள்ளார் சந்திரபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close