Mumbai Plane Crash: மும்பையில் சார்டர்ட் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தில் உயிர் பலி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
மும்பையில் கட்கோபார் பகுதியில் சார்டர்ட் விமானம் விபத்துக்கு உள்ளானதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
To Read, Mumbai plane crash: மும்பையில் சோதனை ஓட்டத்தில் சிதறிய விமானம்- காரணம் என்ன? Click Here
மும்பை, கட்கோபார் பகுதிக்கு உட்பட்ட சர்வோதயா நகர் ஜக்ருதி கட்டட வளாகம் பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியது. விமானம் வெட்ட வெளியில் விழுந்ததாக தகவல்கள் வருகின்றன. இதில் ஒருவர் பலியானதாக முதல்கட்ட தகவல் கூறுகிறது.
தரையிறங்க முயற்சித்தபோது விபத்துக்கு உள்ளானதாகவும் தெரிய வருகிறது. கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
5:30 PM: விபத்தில் சிக்கிய விமானத்தை ஓட்டிய இரு பைலட்களுமே மிகுந்த அனுபவம் பெற்றவர்கள் என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவித்தனர். விபத்தில் பலியான பொறியாளர்கள் சுரபி குப்தா, மனிஷ் பாண்டே ஆகியோரின் படங்கள் வெளியிடப்பட்டன.
5:15 PM: மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
5:10 PM: விமானம் மோதி வெடித்து சிதறுவதற்கு முந்தைய கடைசி காட்சி வெளியாகியிருக்கிறது.
#mumbaiplanecrash– Minutes before the ill-fated craft owned by U.Y Aviation Pvt Ltd. took off from the Juhu airport.@IndianExpress pic.twitter.com/iah0F197Ze
— Rashmi Rajput (@RashmiRajput123) 28 June 2018
5:00 PM: மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மும்பை விமான விபத்து குறித்து அறிந்து கவலை அடைந்தேன். அதிகாரிகளை அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். அங்குள்ள நிலவரம் குறித்து தொடர்பில் இருக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.
4:30 PM: விமானம் தீப்பிடித்து சிதறுவதற்கு முன்பாக அங்கு ஒரு மரத்தில் மோதியதாக அருகில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கூறினர்.
4:10 PM: விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து கருப்புப் பெட்டி சிக்கியது. அதிகாரிகள் அதை ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் விபத்துக்கான காரணம் தெரிய வரும்.
Mumbaiplanecrash- Black box found. This is critical to the investigation and will help find the last communication the pilot had with the ATC before the plane crashed.@IndianExpress pic.twitter.com/KJgD8nW4Ej
— Rashmi Rajput (@RashmiRajput123) 28 June 2018
3:40 PM: விமானத்தை ஓட்டியவர் கேப்டன் பி.எஸ்.ராஜ்புத். சக பைலட்டாக இருந்தவர், மரிய ஸுபெரி. பராமரிப்பு பொறியாளர் சுர்பி, டெக்னீசியன் மனிஷ் பாண்டே ஆகியோரும் விபத்தில் பலியானார்கள்.
3:00 PM: விபத்துக்கு உள்ளான விமானத்தில் 2 பைலட்கள், 2 பராமரிப்பு பொறியாளர்கள் இருந்தனர். கட்டுமானப் பணி நடந்து வந்த கட்டடத்தில் மோதியதில் இவர்கள் 4 பேரும் பலியானார்கள். மேலும் அங்கு சென்று கொண்டிருந்த பயணி பாதசாரி ஒருவரும் இறந்தார். மேலும் இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
2.45 PM: சோதனை ஓட்டத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட பீச்கிராஃப்ட் கிங் ஏர் சி – 90 ரக விமானத்தில் இரண்டு விமான ஓட்டிகளும், இரண்டு பொறியாளர்களையும் ஏற்றிக் கொண்டு சென்றது.
2:43 PM: 2015 வரை உத்திரப் பிரதேச மாநில அரசாங்கத்திற்கு சொந்தமாக இருந்த விமானம் இது. பின்னர் ‘ஏஒய்’ என்ற தனியார் ஏவியேசன் நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருக்கின்றது.
2:39 PM: ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானம் இது.
2:20 PM: மும்பை விமான விபத்தில் குறைந்தபட்சம் 5 பேர் இறந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Chartered plane crash in mumbai