மும்பையில் சிதறிய விமானம், உ.பி. அரசிடம் வாங்கப்பட்டது!
Mumbai, Ghatkopar chartered plane crash, fire brigade: மும்பை ஜூகு விமான நிலையத்தில் இருந்து பரிசோதனை முயற்சியாக இந்த விமானம் எடுத்து வரப்பட்டிருக்கிறது.
Mumbai, Ghatkopar chartered plane crash, fire brigade:
Chartered plane crashes in Mumbai: மும்பையில் 5 பேர் பலியான விபத்தில் சிக்கிய விமானம் உத்தரப்பிரதேச அரசாங்கத்திடம் இருந்து வாங்கப்பட்டது.
மும்பையில் இன்று (ஜூன் 28) பிற்பகலில் ஜன நடமாட்டம் மிகுந்த காட்கோபார் பகுதியில் சார்டர்ட் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. சர்வோதயா மருத்துவமனை அருகே கட்டடப் பணி நடந்து வந்த இடத்தில் மோதியதில் விமானத்தில் இருந்த நால்வர் மற்றும் நடந்து சென்ற உள்ளூர்வாசி ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியானார்கள்.
மும்பை விமான விபத்து குறித்து, கிடைத்த கூடுதல் தகவல்கள் வருமாறு: விபத்தில் சிக்கிய விமானம் யு.ஒய் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான கிங் ஏர் சி-90 வி.டி-யு.பி.இசட் ரக விமானம் ஆகும். உத்தரபிரதேச அரசாங்கத்திடம் இருந்த இந்த விமானத்தை மேற்படி தனியார் நிறுவனம் வாங்கியது.
மும்பை ஜூகு விமான நிலையத்தில் இருந்து பரிசோதனை முயற்சியாக இந்த விமானம் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அதில் 2 பைலட்களும், விமான பராமரிப்பு பொறியாளர்கள் இருவரும் இருந்தனர். இவர்கள் நால்வரும் இந்த விபத்தில் பலியானார்கள். தவிர, உள்ளூர் பாதசாரி ஒருவரும் விமானம் மோதியதில் இறந்தார்.
விமானத்தை ஓட்டியவர் கேப்டன் பி.எஸ்.ராஜ்புத். சக பைலட்டாக இருந்தவர், மரிய ஸுபெரி. பராமரிப்பு பொறியாளர் சுர்பி, டெக்னீசியன் மனிஷ் பாண்டே ஆகியோரும் விபத்தில் பலியானார்கள்.
விமான விபத்து நடந்த இடம், மும்பை காட்கோபார். சம்பவ இடத்திற்கு விமான விபத்துகளை ஆய்வு செய்யும் சிறப்பு படையினர் விரைந்தனர். விமான கருப்புப் பெட்டி கிடைத்திருக்கிறது. அதை முழுமையாக ஆய்வு செய்ததும் விபத்துக்கான முழு காரணங்களும் தெரியவரும்.
பரபரப்பாக ஏரியாவில் பட்டப்பகலில் இந்த விபத்து நிகழ்ந்ததால் பெரும் கூட்டம் திரண்டது. அதிகாரிகள் துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.