/tamil-ie/media/media_files/uploads/2019/06/13512029_1399118486772045_3603707082726036280_n-horz.jpg)
Chennai boy KB Shyam bags Rs 60 lakh job
Chennai boy KB Shyam bags Rs 60 lakh job at Google : சென்னை மேற்கு அண்ணாநகரில் வசிப்பவர் கே.என்.பாபு. ரயில்வே துறையில் பணியாற்றும் இவரின் மகன் கே.பி. ஷியாம். சென்னையில் 12ம் வகுப்பு வரை படித்த அவர் ஜே.இ.இ. தேர்வு எழுதி, இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்லூரியான ஐ.ஐ.டி பெங்களூரில் பட்டப்படிப்பை படித்தார். 2014ம் ஆண்டு அந்த கல்லூரியில் சேர்ந்த அவருக்கு கூகுளில் வேலை பார்க்க வேண்டும் என்பது கனவு.
அதற்காக தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்த அவர், ஏற்கனவே கூகுளில் வேலையில் இணைந்த சீனியரின் உதவியுடன் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த வருடம் ஜனவரி மாதம் ஆன்லைன் மூலம் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றார். பிற்கு ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நடைபெற்ற நேர்முகத் தேர்விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி வெற்றார்.
அக்டோபர் மாதம் அவர் போலந்து நாட்டில் உள்ள மார்ஷவில் கூகுளில் இணைகிறார். அவரின் ஆண்டு சம்பளம் ரூ. 60 லட்சம் ஆகும். கூகுள் நிறுவனத்தின் க்ளவுட் பிரிவில் ( Google cloud platform) வேலை பார்க்க உள்ளார் அவர். ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இண்டெர்னாக லண்டனில் கடந்த வருடம் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிக சம்பளத்திற்கு இளைஞர்களை கூகுள் வேலைக்கு எடுப்பது இது ஒன்றும் முதல்முறையில்லை. மும்பையைச் சேர்ந்த அப்துல்லா கான் என்பவருக்கு இந்த வருடத்தின் தொடக்கத்தில் கூகுளில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவருடைய ஆண்டு சம்பளம் 1.2 கோடியாகும். கடந்த வருடம் 22 வயது மிக்க ஐ.ஐ.டி மாணவருக்கு 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பினை வழங்கியது கூகுள்.
மேலும் படிக்க : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.