scorecardresearch

இந்திய முப்படை தளபதி, ராணுவம், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் … யாரையும் விட்டு வைக்காத சீனா!

ரா, உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு படை தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் வேவு பார்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

China is watching — On list: Chief of Defence Staff; military, science top brass

 Jay Mazoomdaar

China is watching — On list: Chief of Defence Staff; military, science top brass : இந்திய இலக்குகளை கண்காணிப்பதில் சீனாவின் ஷென்குவா டேட்டா நிறுவனத்திற்கு முக்கியமான கட்டாயம் உள்ளது என்பதை அப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ராணுவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் நிரூபிக்கிறது. இந்த பட்டியலில் முப்படை தளபதி பிபின் ராவத் முதல் 60க்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் 14 முன்னாள் படைகளின் தலைவர்கள், இஸ்ரோ மற்றும் அணு ஆராய்ச்சி கமிஷனில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. நியூக்ளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா, அட்டோமிக் எனெர்ஜி ரெகுலேட்டரி போர்ட் (AERB), அட்டோமிக் எனெர்ஜி கமிஷன் (AEC); அட்டோமிக் மினரெல்ஸ் டிரைக்டரேட் ஆஃப் எக்ஸ்ப்ளோரேசன் அண்ட் ரீசர்ச் (AMD) மற்றும் இஸ்ரோவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பலரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

To read this article in English

இஸ்ரோவில் குறைந்த விலையில் நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பயணங்கள், விண்வெளி பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக சர்வதேச சந்தையில் இருக்கும் இந்தியாவின் நிலை, இந்தியாவின் நீண்ட நாள் நியுக்ளியர் விண்டரை அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மூலம் உடைத்தது மூலம் இந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் வலையமைப்பு போன்றவை நாட்டின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்களுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியது. சென்ஹூவாவின் இந்த பட்டியலை ஆராய்ந்தால், அந்நிறுவனம் தேர்வு செய்திருக்கும் ஆட்களின் மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையே இது காட்டுகிறது.

China is watching — On list: Chief of Defence Staff; military, science top brass

என்.பி.சி.ஐ.எல், சதீஸ் ஷர்மா, கடந்த வருடம், இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு வாங்கியவர். இவருடன் இந்த பட்டியலில் சுதீந்தர் தாக்கூரும் இடம் பெற்றிருந்தார். இவர் என்.பி.சி.ஐ.எல். ஆராய்ச்சியாளர் மேலும் டெக்னிக்கல் கமிட்டீ ஃபார் எக்ஸ்ப்ளோரேசன் ஆஃப் சைட்ஸின் சேர்மேனாக நியமிக்கப்பட்டார். வருங்காலத்தில் வர இருக்கும் அணு ஆயுத திட்டங்களுக்காக அணுசக்தி துறை உருவாக்கிய பதவியாகும் இது.

China is watching — On list: Chief of Defence Staff; military, science top brass

அட்டோமிக் எனெர்ஜி கமிஷனின் முன்னாள் தலைவர் மற்றும் இயற்பியலாளர் அனில் ககோத்கர், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் முன்னாள் துணை தலைவர் டாக்டர் ஆர். பட்டாச்சாரியா, இஸ்ரோவின் முன்னாள் ஆராய்ச்சியாளர் ராஜ்மால் ஜெய்ன், அட்டோமிக் மினரல்ஸ் டிரைக்டரேட் ஃபார் எக்ஸ்ப்ளோரேசன் அண்ட் ரிசர்ச் இயக்குநர் லலித் நந்தா ஆகியோர் பெயர்களும் இதில் இடம் பெற்றிருந்தது.

மேலும் படிக்க : Express Exclusive : 3 பிரதமர்கள், 2 முதல்வர்கள், 350 எம்பி.க்கள்… அரசியல் நகர்வுகளை வேவு பார்க்கும் சீனா!

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் (என்.எஸ்.சி.எஸ்) உட்பட, நான்கிற்கும் மேற்பட்ட முன்னாள் தூதர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய சிவ்ஷங்கர் மேனன், சைபர் செக்யூரிட்டி பிரச்சனைகளை கையாண்ட துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, சிவசங்கருக்கு கீழே பணியாற்றிய லதா ரெட்டி, யூ.பி.ஏ – முதல் ஆட்சியில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய லீலா பொன்னப்பா, 2014 – 2017 வரை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய அரவிந்த் குப்தா ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க : பிரதமர் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை ; 10 ஆயிரம் இந்தியர்களை வேவு பார்க்கும் சீனா!

பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர்களில் முன்னாள் ரா தலைவர் விக்ரம் சூட்; முன்னாள் ஐபி கூடுதல் இயக்குநர் குர்பச்சன் சிங் மற்றும் மத்திய பொருளாதார புலனாய்வு பணியகத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் கைலாஷ் சேத்தி இவர்களும் அடங்குவார்கள். பாதுகாப்பு படையில் பணியாற்றி பின்னர் அரசியல் மற்றும் திங்டேங்குகளில் இடம் பெற்றவர்கள், ஓய்வுக்கு பிறகு அரசு அலுவல் பணிகளை மேற்கொண்டவர்கள் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 2014ம் ஆண்டு ஏற்பட்ட அதிக அளவில் கப்பல்கல் நீர்மூழ்கி கப்பல்கள் விபத்துகளுக்கு பொறுப்பேற்று பணியில் இருந்து விலகிய முன்னாள் கப்பற்படை அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி , ஏர் மார்ஷல் அஜித் சங்கராவ் போன்ஸ்லே (யு.பி.எஸ்.சி உறுப்பினர்), முன்னாள் ராணுவ துணை எல்.ஜி. சரத் சந்த் 2018ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் இணைந்தார்; முன்னாள் கப்பற்படை அட்மிரல் எல். ராம்தாஸ், ஆம் ஆத்மி கட்சியின் இண்டெர்நெல் லோக்பால் உறுப்பினராக பணியாற்றினார்; முன்னாள் ராணுவ தலைவர் ஜெனரல் என்.சி. விஜ் மற்றும் லெஃப்டினெண்ட் ஜெனரல் ஹர்சரண்ஜித் சிங் பனாங், 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.China is watching — On list: Chief of Defence Staff; military, science top brass

இந்திய – திபெத்திய எல்லை காவல்படையின் முன்னாள் இயக்குநர், இந்திய கடலோர காவல்படை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்கள், மத்திய பொருளாதார உளவுப்பிரிவு, ரா, உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு படை தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் வேவு பார்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: China is watching on list chief of defence staff military science top brass

Best of Express