Exclusive: பிரதமர் முதல் தலைமை நீதிபதி வரை… 10,000 இந்தியர்களை வேவு பார்க்கும் சீனா

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, மற்றும் அமீரகம் நாட்டினரையும் வேவு பார்க்கிறது.

By: Updated: September 14, 2020, 05:54:51 PM

P Vaidyanathan Iyer , Jay Mazoomdaar , Kaunain Sheriff M

China watching: President, PM, key Opposition leaders, Cabinet, CMs, Chief Justice of India :  யுத்தம் மற்றும் சீன தேசத்தின் பெரும் புத்துணர்ச்சி போன்ற திட்டங்களுக்காக மிகப்பெரிய தரவுகளை பயன்படுத்துகிறோம் என்று கூறும் ஷென்சனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், சீன கம்யூனிச கட்சிக்கும், சீன அரசுக்கும் அதிக அளவில் தொடர்பில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 10 ஆயிரம் நபர்களை வேவு பார்த்து வருகின்றது. உலகளாவிய தரவுகளில் இருக்கும் வெளிநாட்டு இலக்குகளில் இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இடம் பெற்றுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.  ஜென்ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் (Zhenhua Data Information Technology Co. Limited) இந்தியாவில் இருக்கும் இலக்குகளை அடையாளம் கண்டு கண்காணித்து வருகிறது.

இந்த கட்டுரையை விரிவாக ஆங்கிலத்தில் படிக்க

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், முதல்வர்களில் மம்தா பானர்ஜி, அஷோக் கெலாத், மற்றும் அம்ரிந்தர் சிங், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதே போன்று, மத்திய கேபினெட் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முப்படை தளபதி பிபின் ராவத், முன்னாள் ராணுவ, விமானப்படை, கப்பற்படை தளபதிகள் 15 பேர்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் போப்டே, நீதிபதி ஏம்.எம். கான்வில்கர், லோக்பால் நீதிபதி பி.சி. கோஷ், மத்திய கணக்கு தணிக்கையாளர் ஜி.சி. முர்மு, தொழில் முனைவோர்கள் நிபுன் மெஹ்ரா(பாரத் பே செயலியின் நிறுவனர்), அஜய் டெஹ்ரான், ரத்தன் டாட்டா மற்றும் கௌதம் அதானி ஆகியோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

அரசியல் தளத்தில் இருக்கும் முக்கியமான நபர்கள் மட்டுமின்றி பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும் பலரையும் அவர்கள் வேவு பார்த்து வருகின்றனர். முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள்ள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மதத்தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. மேலும், நிதி மோசடி, ஊழல், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்துபவர்கள், காட்டில் இருக்கும் பொருட்களை கடத்துபவர்கள், தங்கம் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றவாளிகளின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்திய சீன எல்லையில் சீனா தொடர்ந்து லடாக் மற்றும் அண்டை நாடுகளில் மேலும் முன்னேறி செல்லும் இந்த நேரத்தில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், ஜென்ஹுவா நிறுவனம் சீனாவின் உளவுத்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையுடன் பணியாற்றி வருகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Express Exclusive : 3 பிரதமர்கள், 2 முதல்வர்கள், 350 எம்பி.க்கள்… அரசியல் நகர்வுகளை வேவு பார்க்கும் சீனா!

இரண்டு மாதங்களுக்கும் மேலாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பெரிய தரவுக் கருவிகளைப் பயன்படுத்தி, ஜென்ஹுவாவின் நடவடிக்கைகளில் இருந்து மெட்டா தரவை ஆராய்ந்தது. இது இந்திய நிறுவனங்களை பிரமாண்டமான பதிவுக் கோப்புகளிலிருந்து பிரித்தெடுப்பதற்காக Overseas Key Information Database (ஓ.கே.ஐ.டி.பி) என்று அழைக்கப்பட்டது. இந்த தரவுத்தளம், அட்வான்ஸ்ட் லாங்குவேஜினை பயன்படுத்துகிறது. மேலும், இலக்கு மற்றும் வகைப்பாடு கருவிகளைப் பயன்படுத்துகிறது. வெளிப்படையான குறிப்புகள் ஏதும் இல்லாமல் நூற்றுக்கணக்கான உள்ளீடுகளை உள்ளடக்கியது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, மற்றும் அமீரகம் நாடுகளின் உள்ளீடுகளும் உள்ளது. இந்த தரவுகள் அனைத்தும் ஷென்சன் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் பெறப்பட்டது. ஆபத்து மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, தகவல்கள் அளித்தவரின் பெயர் மேற்கோள்காட்டப்படவில்லை.

ஷென்சனில் பணியாற்றிய, தற்போது வியட்நாமில் இருக்கும் பேராசிரியர், கிறிஸ்டோஃபர் பல்டிங் மூலம் பணியாற்றியவர் இந்த தரவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆஸ்திரேலியன் ஃபினான்சியல் ர்வியூ, இத்தாலின் ஐல் ஃபோக்லியோ, மற்றும் லண்டனில் உள்ள டெய்லி டெலிகிராஃப் போன்ற ஊடகங்களுடன் தரவுகளை பகிர்ந்துள்ளார்.

ஜெஹுவாவின் தரவுகள் கண்காணிப்பு செயல்முறை தான் இலக்கு. ஹைப்ரிட் வார்ஃபேர் எனப்படும் இதில் ராணுவமல்லாத கருவிகளை கொண்டு ஆதிக்கம் அல்லது சேதம், தகர்த்து அல்லது செல்வாக்கை அடைய உதவும். இதன் சொந்த மொழியில் information pollution, perception management and propaganda என்ற அர்த்தம் கொண்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜென்ஹுவா ஒரு நிறுவனமாக தன்னை பதிவு செய்து கொண்டது. உலகம் முழுவதும் 20 இடங்களில் இந்நிறுவனம் 20 ப்ரோசசிங் நிறுவனங்களை வைத்தது. தனது வாடிக்கையாளராக சீன அரசு மற்றும் ராணுவத்தையும் பட்டியிலிட்டுள்ளது.
செப்டம்பர் 1 அன்று நிறுவனத்தின் வலைத்தளமான http://www.china-revival.com இல் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட விரிவான கேள்விகள் எதற்கும் பதிலும் பெறவில்லை. உண்மையில், இந்த நிறுவனம் தனது இணைய தளத்தை செப்டம்பர் 9 அன்று முடக்கியது. அதை இனி அணுக முடியாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஷென்செனில் இருக்கும் ஜென்ஹுவா டேட்டாவின் தலைமையகத்திற்கு சென்ற நிரூபர், இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளையும் உள்ளடக்கிய கேள்விகளை முன்வைத்த போது, பெயர் கூற விரும்பாத ஊழியர் ஒருவர், “எங்களின் வர்த்தக ரகசியங்கள் தொடர்பானதாக இருக்கிறது. இதனை கூற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருக்கும் சீன தூதரகத்திடம் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பதிலில் “சீனா எந்த ஒரு நிறுவனம் மற்றும் தனிநபர் தரவுகள், செய்திகளை சேகரிக்கவோ, அளிக்கவோ கூறவில்லை. கூறவும் செய்யாது. மேலும் அந்த தரவுகளை வேறெந்த நாடுகளிலும் சேகரிக்கவில்லை” என்றும் கூறியுள்ளது. அந்நிறுவனம் கூறியிருப்பது போல சீன அரசும் ராணுவமும் ஜென்ஹுவாவின் வாடிக்கையாளர்களா என்ற கேள்விக்கு ”ஆதாரத்திடம்” சரியான பதில் இல்லை. “நான் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், சீன அரசாங்கம் சீன நிறுவனங்களை வெளிநாடுகளில் வர்த்தகம் செய்யும் போது உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது; இந்த நிலை மாறாது, ”என்று தூதரக வட்டாரம் தெரிவித்துள்ளது. இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் இருந்து தகவல்களை பெறுதல், ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள், காப்புரிமைகள், ஆட்சேர்ப்பு நிலைகள் ஆகியவற்றைக் கண்காணித்தல் ஆகியவற்றை வரைபடமாக்குகின்றன. இதனை தனிமனித தகவல்கள் மற்றும் ரிலேஷன்சிப் மைனிங் என்று கூறுகின்றோம். தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கிடையேயான நெட்வொர்க்குகள் மற்றும் அவர்களின் தலைமை நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் பல மூலங்களிலிருந்து பெறப்படுகிறது.

ஒ.கே.ஐ.டி.பி. மூலம் கண்காணிக்கப்படும் நபர்களின் குடும்ப உறுப்பினர்களின் தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி (மனைவி யசோதாபென்), ராம்நாத் கோவிந்த் (மனைவி சவிதா கோவிந்த்); முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (மனைவி குர்ஷரன் கௌர் மகள்கள் உபிந்தர், தாமன், அம்ரித்) சோனியா காந்தி (கணவர், மறைந்த பிரதமர் ராஜீவ், மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி வத்ரா), ஸ்மிரிதி இரானி (கணவர் ஜுபின் இரானி), ஹர்ஸிம்ரத் கௌர் (கணவர் சுக்பிர் சிங் பதல், சகோதரர் பிக்ரம் சிங் மஜிதியா, அப்பா சத்யஜித் சிங் மஜிதியா); அகிலேஷ் யாதவ் (தந்தை முலாயம், மனைவி டிம்பிள், மாமனார் ஆர்.சி. ராவத், உறவினர்கள் (ஷிவ்பால் சிங் மற்றும் ராம் கோபால்)

கண்காணிக்கப்படுபவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் முன்னாள் முதல்வர்கள் ராமன் சிங், அசோக் சவான், சித்தராமைய்யா; அரசியல் கட்சி தலைவர்கள் திமுகவின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதி, மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கன்ஷிராம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ். இந்த தரவில் 250க்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா, நிதி அயோக் சி.இ.ஒ அமிதாப் காந்த் ; 23 முன்னாள் மற்றும் இந்நாள் தலைமை செயலாளர்கள்; டஜனுக்கும் மேற்பட்ட மாநில காவல் தலைவர்கள் ஆகியோர்களும் இந்த பட்டியலில் அடங்குவார்கள்.

ஊடகவியலாளர்கள் பட்டியலில் என். ரவி, இந்து குழுமத்தின் சேர்மனாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டவர். ஜி நியூஸ் எடிட்டர் சுதிர் சௌத்ரி, இந்தியா டுடே குரூப் கன்சல்டிங் எடிட்டர் ரஜ்தீப் சர்தேசாய்; பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சயா பாரு; இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் ராஜ் கமல் ஜா ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. விளையாட்டு, கலாச்சாரம், மற்றும் மத தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. கிரிக்கெட் வீரர் சச்சின். இயக்குநர் ஷியாம் பெனேகல், நடன கலைஞர் சோனல் மன்சிங், சில தேவாலயங்களின் பாதிரியார்கள்; மத குருமார்கள் ராதே மா, பிபி ஜாகிர் கௌர், ஹர்தேவ் சிங் ஆகியோரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க : இந்திய முப்படை தளபதி, ராணுவம், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் … யாரையும் விட்டு வைக்காத சீனா!

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் இதே போன்று செய்து வருகிறது. உளவுத்துறையின் வேலை இதுவாகும். ஆனால் பெரிய அளவில் தரவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தும்போது பெய்ஜிங் அடுத்த நிலையை எட்டியுள்ளது என்று ரோபர்ட் பாட்டர், கான்பெர்ராவை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி வல்லுநர் கூறியுள்ளார். அவர்கள் கண்காணிக்கும் மக்களின் பட்டியலை பார்க்கும் போது ஹைப்ரிட் வார்ஃபேரை மிகவும் தீவிரமாக காண்கின்றனர் என்று தெரிய வருகிறது. இவை அவற்றின் தகவல் சொத்துக்கள் மற்றும் தொடர்ச்சியான அடிப்படையில் கண்காணித்தல், அவர்களின் பணி, அவர்களின் குடும்பங்கள், அவர்களின் இயக்கங்கள், அவர்களின் தலைமைப் பாத்திரங்கள், அவற்றின் நிறுவனங்கள் எண்ணற்ற வழிகளில் அந்நியப்படுத்தக்கூடிய விலைமதிப்பற்ற தரவு, ”என்று பாட்டர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:China watching president pm key opposition leaders cabinet cms chief justice of india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X