Advertisment

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஏற்றுக் கொண்டது சீனா!

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை 2002ம் ஆண்டே சர்வதேச பயங்கரவாத அமைப்பு என்று சீனா ஏற்றுக்கொண்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
China signals shift: UNSC condemns Pulwama terror attack, names Jaish

pulwama, புல்வாமா

China signals shift: UNSC condemns Pulwama terror attack : புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஜெய்ஷ் - இ -முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா முறையிட்டது.

Advertisment

தற்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றனர்.  இந்தியாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதர நாடுகள் தங்களின் ஆதரவை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

மேலும் படிக்க : நாங்களும் எங்களின் அப்பாவை இப்படியான சூழலில் தான் இழந்தோம்... ராகுல் உருக்கம்

China signals shift: UNSC condemns Pulwama terror attack

ஆனால் 2009, 2016,2017 ஆகிய வருடங்களில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா மறுப்பு தெரிவித்த நிலையில், இந்த கவுன்சிலில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்திருகிறது சீனா.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை 2002ம் ஆண்டே சர்வதேச பயங்கரவாத அமைப்பு என்று சீனா ஏற்றுக்கொண்டது. ஆனாலும் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதை சீனா ஏற்றுக் கொண்டதே இல்லை. இந்த தீர்மானமே மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது என்று தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நேற்று நடந்த கவுன்சில் முடிவில், அனைத்து நாடுகளும் தங்களின் கண்டனங்களையும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அறிவித்தது.

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment