Advertisment

ஜம்மு & காஷ்மீர் குறித்து பேசிய சீன அமைச்சர்; பதிலடி கொடுத்த இந்தியா

ஜம்மு & காஷ்மீர் குறித்து பாகிஸ்தானில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர்; இந்தியா அவர்களின் உள் விவகாரங்களில் பொதுத் தீர்ப்பைத் தவிர்க்கிறது என இந்தியா பதிலடி

author-image
WebDesk
New Update
ஜம்மு & காஷ்மீர் குறித்து பேசிய சீன அமைச்சர்; பதிலடி கொடுத்த இந்தியா

Shubhajit Roy 

Advertisment

Wang Yi’s J&K remark: India hits back, names him: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயின் இந்திய வருகை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பாகிஸ்தானில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பற்றி சீன அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கள் "தேவையற்றவை" என்று இந்தியா "நிராகரித்தது".

இது சீனாவில் உள்ள தலைமைக்கு "இந்தியா அவர்களின் உள் விவகாரங்களில் பொதுத் தீர்ப்பைத் தவிர்க்கிறது" என்பதை நினைவூட்டியது. ராஜதந்திர அலுவலகம் மூலம் அனுப்பப்பட்ட கோரிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிந்துக் கொண்டது.

இந்த வாரம் எதிர்பார்க்கப்படும் சீன அமைச்சர் வாங்கின் இந்திய வருகையை இது பாதிக்கலாம். அவர் மார்ச் 25 முதல் 27 வரை நேபாளத்தில் இருக்க திட்டமிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற OIC கூட்டத்தில் வாங், “காஷ்மீர் தொடர்பாக, நமது இஸ்லாமிய நண்பர்கள் பலரின் அழைப்புகளை இன்று மீண்டும் கேட்டுள்ளோம். சீனாவும் அதே நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கிறது என்று கூறினார்.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. MEA வின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "OIC கூட்டத்தின் தொடக்க விழாவில் தனது உரையின் போது, ​​சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்தியாவைப் பற்றிய கூறிய தேவையற்ற குறிப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்." என்றார்.

ஒரு அறிக்கையை விமர்சிக்கும் போது வெளிநாட்டு அமைச்சரின் பெயரைக் குறிப்பிடுவது மிகவும் அசாதாரணமானது, மேலும் இது இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.

“ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விஷயங்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரங்கள். சீனா உட்பட மற்ற நாடுகளுக்கு கருத்து தெரிவிக்க எந்த இடமும் இல்லை. இந்தியா அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றிய பொதுத் தீர்ப்பிலிருந்து விலகி இருப்பதை அவர்கள் கவனிக்க வேண்டும்,” என்று அரிந்தம் பாக்சி கூறினார்.

ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் "உள் விவகாரங்கள்" என்றும், சீனாவிற்கு "உள்நாட்டு விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை" என்றும் இந்திய அரசாங்கத்தின் பதில்கள் வழக்கமான எதிர்வினைகள் என்றாலும், இந்தியா "தங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றிய பொதுத் தீர்ப்பிலிருந்து" விலகி இருக்கிறது என்ற நினைவூட்டல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லை.

இதையும் படியுங்கள்: நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.விடம் கொண்டு சென்றிருக்கக் கூடாது – நிர்மலா சீதாராமன்

தைவான், திபெத், ஹாங்காங், மனித உரிமை மீறல்கள் மற்றும் சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் உள்ளிட்ட சீன உள்நாட்டுப் பிரச்னைகள் குறித்து இந்தியா பொதுவாக சீனாவை விமர்சிப்பதில்லை. எனவே, இந்தியாவிலிருந்து சீனாவிற்கு இது ஒரு கடுமையான செய்தி.

சீனா, லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் இரண்டு வருட இராணுவ முட்டுக்கட்டைக்குப் பிறகு, இருதரப்பு உரையாடலை மீண்டும் தொடங்கவுள்ள நிலையிலும் மற்றும் பிரிக்ஸ் (பிரேசில்- ரஷ்யா-இந்தியா-சீனா-தென்னாப்பிரிக்கா) உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் நடைபெற உள்ள நிலையிலும், வாங்கின் கருத்துக்களுக்கு வெளியுறவுத்துறையின் கடுமையான எதிர்வினை வந்துள்ளது.

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் சாத்தியமான உயர்மட்ட வருகைகளுடன் தொடங்கி, உரையாடலை தொடங்க சீனா தொடர்ச்சியான நிகழ்வுகளை முன்மொழிந்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்துகொள்ளும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை வரவழைப்பதே சீனாவின் இறுதி மற்றும் தெளிவான நோக்கமாகும். இந்த ஆண்டு RIC (ரஷ்யா-இந்தியா-சீனா) முத்தரப்புக்கான தலைவராகவும் இருக்கும் சீனா, BRICS உச்சிமாநாட்டைத் தொடர்ந்து RIC தலைவர்களின் உச்சிமாநாட்டையும் நடத்தலாம்.

மார்ச் 19 அன்று, லடாக்கில் எல்லைப் பிரச்சனை தீர்க்கப்படும் வரை சீனாவுடனான உறவுகள் "வழக்கம் போல்" இருக்க முடியாது என்று இந்தியா கூறியது. இது இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பதில் அளிக்கும் விதமாக வந்த முதல் கருத்து. இது சீனாவின் வெளிப்பாட்டிற்குப் பிறகு வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவால் கூறப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Jammu And Kashmir China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment