Advertisment

ரஃபேல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்தியதற்கு வருந்திய ராகுல் !

உச்ச நீதிமன்றமே, பாதுகாவலர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் திருடர்கள் என்று கூறிவிட்டது என விமர்சனம் செய்திருந்தார் காங்கிரஸ் தலைவர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rahul Gandhi meeting with congress CM's

Rahul Gandhi

Chowkidar Chor Hai comment Rahul Gandhi Regrets : இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு இடையில் போடப்பட்ட ரஃபேல் பேர ஒப்பந்தம் தொடர்பாக முக்கியமான தரவுகளை வெளியிட்டது தி இந்து ஆங்கிலப்பத்திரிக்கை.

Advertisment

இந்த பேரத்தில் ஊழல் நடத்திருப்பதாக ஏற்கனவே காங்கிரஸார், மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தொடுத்திருந்த வழக்கில், நீதிமன்ற விசாரணைக்காக அந்த தரவுகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 10ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த தரவுகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி, மத்திய அரசின் கோரிக்கைகளையும் நிராகரித்துவிட்டது.

வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி

செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி “உச்ச நீதிமன்றமே, பாதுகாவலர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் திருடர்கள் என்று கூறிவிட்டது” என  கூறினார். இதனை எதிர்த்து பாஜக தரப்பில் மீனாட்சி லெகி என்ற அமைச்சர் வழக்கு பதிவு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பான விளக்கத்தினை அளிக்கக் கோரி உத்தரவிட்டது.

இன்று உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி. மேலும், இனிமேல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள், பார்வைகள், மற்றும் விசாரணைகள் தொடர்பான எந்த விதமான பொது அறிக்கையையும், மக்கள் மத்தியிலோ, பிரச்சாரத்திலோ, ஊடகங்களிலோ தெரிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க : “தயவு செஞ்சு எங்க கிராமத்து பேர மாத்துங்க” ரஃபேலால் நொந்து போன கிராமத்தினர்!

India Rahul Gandhi Rafale Deal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment