Advertisment

குடியுரிமைச் சட்டம், என்ஆர்சி பற்றி இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட வேண்டாம்: பிரதமர் மோடி

நாங்கள் ஒருபோதும் மக்களை அவர்களின் மதத்தின் அடிப்படையில் கேள்வி கேட்கவோ பாகுபாடு காட்டவோ இல்லை. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் மசோதாவால் பயனடைந்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Citizenship law and NRC have nothing to do with Muslims: pm modi - குடியுரிமைச் சட்டம், என்ஆர்சி பற்றி இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட வேண்டாம்: பிரதமர் மோடி

Citizenship law and NRC have nothing to do with Muslims: pm modi - குடியுரிமைச் சட்டம், என்ஆர்சி பற்றி இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட வேண்டாம்: பிரதமர் மோடி

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

Advertisment

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்திலும் திமுக போராட்டங்களை முன்னெடுத்தி நடத்தி வருகிறது.

இந்நிலையில், குடியுரிமைச் சட்டம் தொடர்பாக விளக்கக் கூட்டம் பாஜக சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடந்தது.

ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

"சில எதிர்க்கட்சிகள் அனைத்து வகையான வதந்திகளையும் பரப்புகின்றன, மக்களை தவறாக வழிநடத்துகின்றன. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அவர்கள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. அவர்களிடம் எனக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது: மோடியை வெறுக்கவும், ஆனால் இந்தியாவை வெறுக்க வேண்டாம். என்னை குறி வைக்கவும், ஆனால் பொது சொத்துக்களுக்கு தீ வைக்க வேண்டாம்.

மக்களின் உரிமைகளை பறிக்க நான் சட்டத்தை கொண்டு வந்தேன் என்று பொய் பரப்பப்படுகிறது. அது நிலைக்காது. என்னுடைய அரசின் நலத்திட்டங்களான எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம், காப்பீடு திட்டம் ஆகியவை ஒருபோதும், மக்கள் கோயிலுக்குப் போகிறார்களா, மசூதிக்குப் போகிறார்களா என்று பார்த்து வழங்கியதில்லை.

காங்கிரசும் அதன் கூட்டாளிகளும், நகரங்களில் வசிக்கும், நகர்ப்புற நக்சல்களும் வதந்திகளை பரப்புகின்றனர். தடுப்புக்காவல் நிலையங்கள் குறித்து அவர்கள் பொய்களை பரப்புகிறார்கள். CAA க்கும் NRC க்கும் இந்திய முஸ்லிம்களுடன் எந்த தொடர்பும் இல்லை.

பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்த தலித்துகளும் குடியுரிமைச் சட்டத்தின் பயனாளிகளில் ஒருவர் ஆகிறார். அவர்களின் வலியை நீங்கள் ஏன் பார்க்கவில்லை.

நாங்கள் ஒருபோதும் மக்களை அவர்களின் மதத்தின் அடிப்படையில் கேள்வி கேட்கவோ பாகுபாடு காட்டவோ இல்லை. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் மசோதாவால் பயனடைந்தனர், இங்கு வாழும் அனைவருக்கும் நன்மை கிடைத்தது. நாங்கள் இதை ஏன் செய்தோம்? ஏனென்றால் நாங்கள் நாட்டின் அன்பிற்காக வாழ்கிறோம்.

என்னுடைய எதிரிகள் தேர்தலில் போட்டியிடத் துணிச்சல் இல்லாமல், நாட்டைத் துண்டாடும் வதந்திகளில் ஈடுபடுகிறார்கள்"

என்று பேசினார்.

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment