scorecardresearch

குடியுரிமை திருத்தம் சட்டத்தை விளக்கும் கேள்வி/பதில்கள்

தற்போது இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தம் சட்டம், 1985ம் ஆண்டில் போடப்பட்ட  அசாம் ஒப்பந்தத்தை மீறுகிறது என்பது அசாம் எதிர்ப்பாளர்களின் வாதம்.

குடியுரிமை திருத்தம் சட்டத்தை விளக்கும் கேள்வி/பதில்கள்
Tamil nadu news today live

அபுர்வா விஸ்வநாத், கபீர் ஃபிராக்

பாராளுமன்றத்தில் கடுமையான விவாதத்திற்கு பின்பு  வியாழக்கிழமை ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் குடியுரிமை திருத்த மசோதா (சிஏபி) சட்டமாக மாறியது.

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், அஸாம் வன்முறையில் மூழ்கியது. கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புதிய குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியான சவால்களும்  செய்யப்பட்டுள்ளன.

 

குறிப்பாக அசாம் மாநிலத்தில் ஏன் இத்தகைய வலுவான எதிர்ப்பு ? 

அசாம் மாநிலத்தில் எலும்பும் வலுவான எதிர்ப்புக்கு காரணம்,   ஒரு குறிப்பிட்ட  மக்கள் விலக்கப்படுகிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, குடிமக்களாக நிறைய மக்கள் சேர்க்கப்படவுள்ளனர் என்பதற்காக. அசாமின் மிகத் தீவிரமான அரசியல் புலம்பெயர்ந்தோரைப் பற்றியது. எனவே, மதத்தைத் தாண்டி அதிகமான புலம்பெயர்ந்தோரின் வருகையைப் பற்றி  எதிர்ப்பாளர்கள் கவலைப்படுகிறார்கள்.

வங்கதேசத்தில் இருந்து குடியேறுவதை தடுப்பதற்காக கட்டமைக்கப்பட்ட  அசாம் இயக்கம் (1979-85) , வங்கதேச மக்களால் அஸ்ஸாமியர்களின் கலாச்சாரத்திற்கும் மொழிக்கும் அச்சறுத்தல் இருப்பதாக கருதுகிறது. நில வளங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு அழுத்தம் இருப்பதையும் உணருகிறார்கள்.

தற்போது இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தம் சட்டம், 1985ம் ஆண்டில் போடப்பட்ட  அசாம் ஒப்பந்தத்தை மீறுகிறது என்பது எதிர்ப்பாளர்களின் வாதம்.  இந்த ஒப்பந்தத்தின் கீழ் மார்ச் 24, 1971 அசாமில் இந்திய குடியுரிமைக்கான கட்- ஆப் தேதியாக  அமைகிறது. இதுவே, அசாமில் உள்ள தேசிய குடிமக்களின் பதிவிற்கான (என்.ஆர்.சி) கட்-ஆஃப் தேதியும் ஆகும். இதன் இறுதி பதிப்பு இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், புத்திஸ்டுகள் , சமணர்கள் போன்ற ஆறு சமூக மக்கள் இந்தியாவில் குரியுரிமை பெறுவதற்கான கட்-ஆஃப் தேதி டிசம்பர் 31, 2014 ஆகும். இந்த சட்டம் இஸ்லாம் மக்களை விலக்குவதால், சர்ச்சைக்குரியதாகவும் போனது.

 

முந்தைய சட்டத்தின் கீழ், இந்த வகை மக்கள் இந்திய குடியுரிமைக்கு எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?

இந்திய அரசியலமைப்பு விதி 6-ன் கீழ், 1948 ஜூலை 19 க்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து குடியேறியவர் (அதன் ஒரு பகுதி இப்போது பங்களாதேஷ்) இந்தியாவுக்குள் நுழைந்தால் இந்திய குடியுரிமை வழங்கப்படல் வேண்டும். கிழக்கு பாகிஸ்தானில் இருந்து (தற்போதைய பங்களாதேஷ்) பெரிய அளவில் குடியேறியதைக் கண்ட அசாமில், அஸாம் ஒப்பந்தத்தின் கீழ்   1971 முன்னர் மாநிலத்திற்குள் நுழைந்தால் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும்.

சட்டவிரோத குடியேறியவர்களைப் பொருத்தவரை, புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்குவதில் தேசிய கொள்கை என்று இந்தியாவுக்கு எதுவும் இல்லை. எவ்வாறாயினும், அகதிகள் எனக் கூறும் வெளிநாட்டினரைக் கையாள்வதற்கான ஒரு இயக்க நடைமுறையை மட்டும் உள்துறை அமைச்சகம் கொண்டிருந்தது. அகதிகளுக்கு பணி அனுமதி (அல்லது) நீண்டகால விசா போன்றவைகள் குறித்த முடிவுகளை ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் தனிப்பட்ட விதமாகத் தான் கையாண்டு வந்தது.  ( ஏனெனில், இந்தியாவில் புலம்பெயர்ந்தவருக்கான ஒரு பொதுவான கொள்கை இல்லை).

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சிறுபான்மையினர் அல்லது அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இந்திய குடியுரிமைச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை (இந்த சட்டம் திருத்தம் வருவதற்கு முன்பாக)

மற்றவர்களுக்கான குடியுரிமைச் சட்டங்கள் பற்றி ?

குடியுரிமைச் சட்டம், 1955 ன் கீழ், குடியுரிமை பெற நான்கு வழிகள் உள்ளன.

பிறப்பால் குடியுரிமை: 1950 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்த எவரும் பிறப்பால் குடிமகனாக கருதப்படுவார்கள் என்று  இந்திய குடியுரிமை சட்டம்,1955 கூறுகிறது.  பிறகு, ஜனவரி 1, 1950 முதல் ஜனவரி 1, 1987 க்கு இடையில் பிறந்தவர்களுக்கு பிறப்பால் குடியுரிமையை கிடைக்கும் வகையில் இந்த 1955  சட்டம் திருத்தப்பட்டது.

2003ம் ஆண்டுல் இந்த சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது. 2003 சட்டத்தின் கீழ், டிசம்பர் 3, 2004க்குப் பிறகு பிறந்த ஒருவர் பிறப்பால் இந்திய குடிமகனாக கருதப்படுவார்கள். இருந்தாலும், 2004 ஆண்டிற்கு பிறகு பிறந்த குழந்தையின் பெற்றோர் ஒருவர் கட்டாயம் இந்திய குடிமகனாகவும், மற்றொருவர் சட்டவிரோதமாக குடியேறாதவராகவும்  இருத்தல் வேண்டும் .    எனவே, 2004க்குப் பின் இந்தியாவில் பிறந்த ஒரு குழந்தையின் பெற்றோர் சட்டவிரோதமாக குடியேறியவராய் இருந்தால், அக்குழந்தை பிறப்பால் குடிமகனாக முடியாது. சட்டத்தில் குறிப்பிடப்பட்ட, வேறு சில நெறிமுறைகளின் மூலமாகத்தான் குடிமகனாக முடியும்.

(i) பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியா  நாட்டிற்குள் நுழைந்தவர், அல்லது (ii) செல்லுபடியாகும் ஆவணங்களுடன் இந்தியாவிற்கு வந்தாலும், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பிறகும் இந்த நாட்டில் தங்குபவர்  என்று சட்டவிரோதமாக குடியேறிய ஒரு வெளிநாட்டவர் என்று சட்டம் சொல்கிறது.

மற்ற வகையான குடியுரிமை:

வம்சாவளியைச் சேர்ந்த குடியுரிமை: இந்திய நாட்டிற்குள் வெளியே பிறந்த ஒரு  குழந்தை வம்சாவளிக் குடியுரிமையின் மூலம் இந்தியாவின் குடிமக்களாக ஆகலாம். இருந்தாலும்,  அந்த குழந்தையின் பெற்றோர் ஒருவர் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும், குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் அந்த நாட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பதிவு மூலம் குடியுரிமை: திருமணம், வம்சாவளி போன்றவைகளின் மூலம் பதிவு செய்து குடியுரிமை அடையலாம்.

அயல் நாட்டினருக்கான குடியுரிமை: குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ், சட்டவிரோதமாக குடியேற்றம் செய்யாத ஒருவர், இந்த முறையின் மூலம்  குடியுரிமை அடையலாம். அந்த நபர்,  இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்வதற்கு முன்பு தொடர்ந்து 12 மாதங்கள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.  கூடுதலாக, இந்த 12 மாதங்களுக்கு முன்பாக , குறைந்தபட்சம் 11 வருடமாவது இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும். ( புதிதாய் வந்த குடியுரிமை திருத்தம் சட்டத்தால் தற்போது இந்த 11 ஆண்டும் ஐந்து ஆண்டுகளாக குறைக்கபட்டுள்ளது)

தள்ளுபடி: மத்திய அரசின் கருத்தில், விண்ணப்பதாரர் பொதுவாக அறிவியல், தத்துவம், கலை, இலக்கியம், உலக அமைதி அல்லது மனித முன்னேற்றம் ஆகியவற்றின் காரணத்திற்காக தனித்துவமான சேவையை வழங்கியிருந்தால், மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைத்து (அல்லது ) ஏதேனும் நிபந்தனைகளைத் தள்ளுபடி செய்யலாம். பாகிஸ்தான் பாடகரான அட்னான் சாமி, தலாய் லாமா போன்றோருக்கு இந்தியா குடியுரிமை வழங்கியது இப்படித்தான்.

புதிய சட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு இப்போது இந்திய குடியுரிமை வழங்க முடியும்?

பாராளுமன்றத்தில் இந்த சட்ட  திருத்தம் மசோதா பற்றி பேசுகையில் , இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த லட்சம் மற்றும் கோடிக்கணக்கான இஸ்லாம்  அல்லாத அகதிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தார்.

உள்துறை அமைச்சகம் 2016ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வழங்கிய தரவுகளின்படி, இந்தியாவில்  டிசம்பர், 31  2014ம் ஆண்டு வரையில் 2,89,394 “நாடற்ற அகதிகள்” உள்ளனர்.

இதில், பெரும்பான்மையானவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்களாய் இருக்கின்றனர் . அனைத்து மதங்களையும் உள்ளடிக்கிய நாடற்ற மக்களின் வரிசை பின்வருமாறு :

வங்கதேசம் (1,03,817), இலங்கை (1, 02,467), திபெத் (58,155), மியான்மர் (12,434), பாகிஸ்தான் (8,799), ஆப்கானிஸ்தான் (3,469).

டிசம்பர் 31, 2014 க்குப் பிறகு, இந்தியாவில் அகதியாய் வந்தவர்களுக்கு பொதுவான நடைமுறை மற்றும் பின்பற்றப்படும். அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று நிருபிக்கப்பட்டால்,  குடியுரிமைக்கு விண்ணப்பம் கூட செய்ய முடியாது.

குறிப்பிடப்பட்ட சமூகங்கள் உண்மையில் இந்த மூன்று நாடுகளில் துன்புறுத்தப்படுகிறதா?

மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் ஊடக  செய்தி அறிக்கைகளை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிரான மதத் துன்புறுத்தல்களைப் பற்றி பேசினார். கட்டாய மத மாற்றம், இந்து கோயில்கள் இடிக்கப்படுவது போன்றவைகளை கூறியிருந்தார்.உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் எட்டு ஆண்டுகள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்தவர் ஆசியா பிபி (தெய்வ நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்) பற்றிய குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளும் அவரது உரையில் இருந்தது.

வங்கதேசத்தில், இஸ்லாமிய போராளிகளால் நாத்திகர்கள் கொல்லப்பட்ட வழக்குகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஷேக் முஜிபுர் ரஹ்மான் மறைவுக்குப் பிறகு துன்புறுத்தல் பரவலாக இருப்பதாக ஷா கூறினார். எந்த மத துன்புறுத்தாலும்  தற்போது வங்கதேசத்தில் நடைபெறவில்லை என்று அதன் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஏ. கே அப்துல் மோமன் அமித் ஷாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் அல்லாத மதங்களை துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்று பாராளுமன்றத்தில் ஷா குறிப்பிட்டிருந்தாலும், சட்டம் அதன் உரையில் துன்புறுத்தல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறது.

சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் இந்த சட்டம் குறித்த விவாதம் என்ன ?

இது அரசியலமைப்பின் அடிதளைத்தை மீறுவதாக சட்ட வல்லுநர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் வாதிடுகின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் (அல்லது) சட்டங்களானது சம பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற அரசியலமைப்பு விதி 14-ஐ இந்த குடியுரிமை சட்டம் மீறுவதாக நாடாளுமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.  நீதிமன்றங்கள் பரிந்துரைத்த சட்ட சோதனையின்படி, முதலில் அந்த சட்டம் “நியாயமான வர்க்கத்தை” உருவாக்க வேண்டும் (உதரணமாக பட்டியல் இனம், பெண்கள், பட்டியல் பழங்குடியினர், ).

இரண்டாவதாக,  ஒரு பகுத்தறிவான உறவால், சட்டத்தின் நோக்கமும், அதன் செயல்பாடுகளும் பின்னப்படிருக்க வேண்டும். மக்களுக்குள்ளன வகைப்பாடு நியாயமானதாக இருந்தாலும், அந்த வகையில் வரும் எந்தவொரு நபரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும். உதாரணமாக,  துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரைப் பாதுகாப்பது சட்டத்தின் நோக்கமாக இருந்தால், குறிப்பிட்ட நாடுகளில் உள்ள ஒரு சிருபன்பையினரை விலக்குவது, மதத்தை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்துவது தவறானதாகிவிடும்

மேலும், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது.  இந்தியா மதச்சார்பின்மை பாராளுமன்றத்தால் கூட  மாற்ற முடியாத அரசியலமைப்பின் அடிப்படையான கட்டமைப்பு என்று உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகம்.

“பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்றிலும் அரசு மதம் இஸ்லாமாக  உள்ளதால் அங்கு சிறுபான்மையினரை துன்புறுத்தப்படுகின்றனர். இதனால் இது நியாமான வகைப்பாடு, விதி 14ஐ மீறவில்லை  என்று கூறினார்.

இந்த பிற பிரிவுகள் யாவை?

மியான்மர் (ரோஹிங்கியா முஸ்லிம்கள்) மற்றும் இலங்கையில் (தமிழர்கள்) துன்புறுத்தப்படுபவர்களுக்கு இந்த சட்டம் நீட்டிக்கப்படாது. ஒரு ரோஹிங்கியா முஸ்லீம் கூட இந்தியாவில் அனுமதிக்கப்பட மாட்டார் என்று ஷா பலமுறை அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் ஷியா மற்றும் அஹ்மதியா முஸ்லிம்களையோ அல்லது ஆப்கானிஸ்தானின் தலிபான்களால் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வரும்  ஹஸராஸ், தஜிக்ஸ், உஸ்பெக் போன்றவர்களை அனுமதிக்காததன் மூலம், இந்த சட்டம் 14 வது பிரிவை மீறுவதாக கருதப்படுகிறது. பாராளுமன்றத்தில், ஷா இஸ்லாமிய நாடுகளில் ஒருபோதும் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படமாட்டார்கள் என்று வாதிட்டார்.

பாகிஸ்தானில் இருந்து ஷியாக்கள் மற்றும் அஹ்மதியாக்களை இந்த சட்டத்தில் விளக்கியதை ஆதரித்து பேசிய பாஜக எம்.பி. சுப்பிரமணியம் சுவாமி, துன்புறுத்தப்பட்ட ஷியாக்கள்  இந்தியாவுக்கு வருவதை விட ஈரானுக்கு தான் செல்வார்கள்  என்று கூறினார். இலங்கை மற்றும் பூட்டான் அரசை பேசிய அமித் ஷா, இஸ்லாத்தை இந்த இரண்டு நாடுகளும் அரச மதமாக கொண்டிருக்கவில்லை என்று  கூறினார். எவ்வாரயினும், பூட்டான், இலங்கை ஆகிய இரண்டு நாடுகளின் அரசியலமைப்பு அரசு மதமான புத்தத்திற்கு ஆதரவு அளிக்கின்றது.

இவர்கள் துன்புறத்தப்பட்ட குழுக்களா ? பாகிஸ்தானில் இரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் அஹ்மதிகளை “முஸ்லிமல்லாதவர்கள்” என்று அறிவித்தது. அஹ்மதிகல  தங்களை முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டால், தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படுகிறது. மேலும் வாக்களிக்கும் உரிமையை மறுப்பது போன்ற பல சமூக கட்டுப்பாடுகளும் அவர்கள் மேல் விதிக்கப்படுகிறது.

மத சுதந்திரத்தை கடுமையாக மீறியதற்காக 2016 ம் ஆண்டில், சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பாகிஸ்தானை மத உரிமைகளை கடுமையாக மீறும் நாடாக (நிலை- 1 ) அறிவிக்க பரிந்துரைத்தது.  இந்த ஆண்டு ஆகஸ்டில், அமெரிக்கா, இங்கிலாந்து கனடா ஆகிய நாடுகள் சீனாவிலும் பாகிஸ்தானிலும் மத ஒடுக்குமுறை குறித்த தங்களது  கவலைகளையும்  வெளிப்படுத்தியிருந்தன.

இந்த சட்டம் இந்தியரல்லாத முஸ்லிம்களை மட்டுமே விலக்குகிறது என்பதால், அது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என்று ஏன் கூறப்படுகிறது?

மேலோட்டமாக பார்த்தால், இந்த சட்ட திருத்தம் எந்த குறிப்பட்ட  இந்திய குடிமக்களையும் விலக்கவில்லை. இருப்பினும், அசாமின் என்.ஆர்.சி செயல்முறை மற்றும் சமீபத்திய குடியுரிமைச் சட்டத்தை துண்டிக்க முடியாது.

அசாமின் இறுதி என்.ஆர்.சி 19 லட்சம் பேரை விடுவித்தது. இந்த புதிய சட்டம், அந்த விடப்பட்ட பட்டியலில் இருக்கும் வங்காள இந்துக்களுக்கு குடியுரிமை பெரும் ஒரு புதிய வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், இந்த சட்டத்தால் அதே நன்மை ஒரு இஸ்லாமுக்கு கிடைக்காது. இந்தியாவில் சுதந்திர வாழ்கையை வாழ, அவர்கள் சட்டப் போரில் ஈடுபட வேண்டியிருக்கும்.

அசாமின் என்.ஆர்.சி செயல்முறை நாட்டின் பிற பகுதிகளிலும் பிரதிபலிக்கும் என்று ஷா மற்றும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருவதால்,அது இந்திய முஸ்லிம்களிடையே அச்சத்தைத் தூண்டிவருகிறது. என்.ஆர்.சி உடன் பிணைக்கப்பட்டால்,புதிய சட்டம் திருத்தத்தில்  குறிப்பிடப்படாத அந்த மதத்தில் இருக்கும் ஒரு நபரின் அனைத்து உரிமைகளையும், அடையாளங்களையும் பறிக்க  நேரிடும்

அரசியல் ரீதியாக, இந்த சட்டம் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டும் 2021ல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கின்றன.

ஆனால் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட நாடு தழுவிய என்.ஆர்.சி உண்மையில் நடந்தால், பல இந்துக்களும் விலக்கப்படுவார்கள் தானே?

என்.ஆர்.சி செயல்முறையில் இந்துக்களை விலக்குவதற்கும்  ஒரு வாய்ப்பு உண்டு. இருப்பினும், பல இந்துக்களை இந்த  குடியுரிமைச் சட்டத்தால் காப்பாற்ற முடியும். குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரிடம் எந்த ஆவணங்களும் ( அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கான ஆதாரங்கள் ) கூட  கேட்கப்படாது என்று நாடாளுமன்றத்தில்  உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் மாநிலங்களவையில் அசாமின்  என்.ஆர்.சி குறித்து தனது கருத்தை பின்வருமாறு கூறியிருந்தார், “என்.ஆர்.சி செயல்பாட்டில், ஒரு நபர் அவர் ஒரு இந்தியர் என்று ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருப்பார், ஆனால் இந்த புதிய சட்டத்தின் கீழ் அதே நபர் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து தப்பி இந்தியாவிற்குள் வந்தாக கூற வேண்டும், என்.ஆர்.சி விடுபட்ட ஒருவர் இந்த புதிய சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் அது மிகப்பெரிய  முரண்பாடாக இருக்கும்”  என்றார்.

எவவாராயினும், என்.ஆர்.சி போன்ற ஒரு பயிற்சி, அசாமில் மட்டும் சுமார் 12,000 கோடி ரூபாய் செலவானது. அளவு மற்றும் செலவு அடிப்படையில் இந்தியா முழுவதம் அதை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணமே வியப்பானது.  என்.ஆர்.சி வேண்டும் என்று அசாமில் ஒருமித்த கருத்து இருந்ததை போலவே , இந்தியா முழுவதும் என்.ஆர்.சி நடைமுறையை செயல்படுத்த பல்வேறு கட்சிகளாலும், அரசாங்கங்களாலும், குழுக்களாலும் எதிர்க்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த புதிய சட்டத்தை கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மறுத்துவிட்டன. அவர்களால் முடியுமா?

இந்த மாநிலங்களில் பாஜக அல்லாத ஆளும் கட்சிகள் ஒரு அரசியல் கருத்தை முன்வைக்கின்றன. குடியுரிமை, எதிரிநாட்டவர் ஆகியவை ஏழாவது அட்டவணையின் லிஸ்ட் ஒன்றில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் உள்ள சாரம்சங்களில் பாராளுமன்றம்  மட்டும் சட்டம் போட முடியும் .

இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான   பழங்குடிப் பகுதிகளில் இன்னர் லைன் பெர்மிட் (அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் தற்போது மணிப்பூருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது) மற்றும் ஆறாவது அட்டவணையின்  கீழ் சொல்லப்பட்டிருக்கும் பகுதிகள் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுளது.

மேலும் விவரங்களுக்கு,  இங்கே கிளிக் செய்யவும்

அசாமில் மாநிலத்தில் எவ்வளவு விலக்கு?

மாநிலத்தில் மூன்று தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் உள்ளன. அவற்றில் (கப்ரி அங்லோங், டிமா ஹசோ) இரண்டு புவியியல் ரீதியாக தொடர்ச்சியானவை.  இந்த மூன்று  மாவட்ட கவுன்சில்கள் குடியுரிமை சட்டத் திருத்ததில் இருந்து   பாதுகாக்கப்பட்டாலும், அசாமின் பற்ற பகுதிகளில் இந்த சட்டம் அமல்படுத்தப்படும்.

அஸ்ஸாம் உடன்படிக்கையின் பிரிவு 5.8 இன் கீழ், “மார்ச் 25, 1971 அன்று அல்லது அதற்குப் பிறகு அசாம் மாநிலத்திற்கு வந்த வெளிநாட்டவர்கள் தொடர்ந்து கண்டறியப்படுவார்கள், நீக்கப்படுவார்கள். அத்தகைய வெளிநாட்டினரை வெளியேற்ற நடைமுறை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படவேண்டும்.” என்றுள்ளது.

அசாம் ஒப்பந்தம் என்றால் என்ன, அது என்.ஆர்.சிக்கு எவ்வாறு வழிவகுத்தது?

ஆகஸ்ட் 15, 1985 அன்று இந்திய அரசு, அசாம் மாநில அரசு , அசாம் மாணவர் சங்கம் மற்றும் அசாம் கண சங்கரம் பரிஷத் ஆகியவற்றால் அசாம் ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் (வங்கதேசம்  இருந்து சட்டவிரோதமாக குடியேறுவதற்கு எதிராக மாணவர்கள் தலைமையிலான ஆறு ஆண்டு வெகுஜன இயக்கத்தின் முடிவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் (தீர்ப்பாயங்களால் தீர்மானித்தல்) சட்டத்தின் மூலம் அசாமில் வெளிநாட்டவர்களை அடையாளம் காண்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இந்த விதிமுறை அசாம் மாநிலத்திற்கு மட்டும் பொருந்தகூடியது. இந்த விதிமுறைகளை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் 2005ம் ஆண்டு ரத்து செய்தது. மனுதாரர், சர்பானந்தா சோனோவால் (தற்போதைய அசாம் முதலமைச்சர்), சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக இருப்பதால்,’ சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து நாடுகடத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது’ என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.

2013 இல் தொடங்கிய இந்த அசாம் என்.ஆர்.சி , உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் இந்த ஆண்டு முடிவடைந்தது. இதில் 19 லட்சம் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாம் உடன்படிக்கையின் 6 வது பிரிவின் கீழ் அசாமின் கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்தார். அது எதைப்பற்றி?

இது ஒரு சமநிலைப்படுத்தும் காரணியாக அசாம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. இந்திய நாட்டின் பிற பகுதிகளில், பாகிஸ்தானில் இருந்து குடியேறியவருக்கான குடியுரிமை கட் ஆப் தேதி 1948ம் ஆண்டும் ஜூலை 19 தேதியாகும். அசாம் ஒப்பந்தம், அசாம் மாநிலத்திற்கு கட் ஆப் தேதியை மார்ச் 24, 1971ல் அமைக்கிறது.

வங்கதேசத்தில் இருந்து கூடுதல் இடம்பெயர்வு காரணமாக, பிரிவு 6ல் “அரசியலமைப்பு, சட்டம், நிர்வாகம் போன்றவைகளால் அசாமிய மக்களின் கலாச்சாரம், சமூக, மொழியியல் அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பொருத்தமான உதவிகள் வழங்கப்படும்.”

இந்த அசாம் ஒப்பந்த பிரிவு 6, குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ- ன் கீழ் பாதுக்கப்படுகிறது. குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ-ன் கீழ்  “அஸ்ஸாம் உடன்படிக்கையின் கீழ் வரும் நபர்களின் குடியுரிமை குறித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்  என்று கூறப்பட்டுள்ளது.

பிரிவு 6 ஏவின் அரசியலமைப்பு முறையில் செல்லுபடியாகுமா?  என்ற கேள்வியும் உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ளது.

“அசாமிய மக்கள்” யார் என்பது இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. வம்சாவளியாக ஆயிரம் ஆண்டுகளாக ஆசாமில் 1951க்கு வாழ்ந்த மக்களை ‘அசாமிய மக்கள்’ என்ற கருத்து பரவலாகி பேசப்பட்டுவருகிறது. 1951-1971 ஆண்டுகளில் குடிபுகுந்த மக்கள் அசாமிய மக்கள் இல்லை என்ற கருத்தும் அந்த மக்களிடையே  உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழு, இன்னும் தனது பரிந்துரைகளை வழங்கவில்லை.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: What is citizenship amendment bill what is cab bill