கட்சியின் மாநில பிரிவு தலைவர்களை நியமிக்கவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) பிரதிநிதிகளை நியமிக்கவும் புதிய காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு (PCC) அனுமதி அளித்துள்ளதாக காங்கிரஸின் மத்திய தேர்தல் ஆணையம் (CEA) வியாழக்கிழமை தெரிவித்துள்ள நிலையில், இது கட்சியின் ஒரு பிரிவினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
இந்த தீர்மானங்கள் AICC தலைவர் பதவிக்கான தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று CEA தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார். தலைவர் பதவிக்கான ஒரு வார கால வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்குகிறது. இதனிடையே, சில G-23 தலைவர்கள், தேர்தல் நடக்கும்பட்சத்தில் "வரவிருக்கின்ற" காங்கிரஸ் தலைவர் AICC உறுப்பினர்களை நியமனம் செய்ய அனுமதிக்கும் முடிவு, காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC)க்கான தேர்தலைத் தடுக்கும் என்று கூறியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: கோவா கட்சித் தாவல், 8 எம்எல்ஏக்களுக்கு தலா 30-40 கோடி ரூபாய் கொடுத்த பாஜக: காங்கிரஸ்
இந்தத் தலைவர்கள் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு உண்மையான தேர்தல்களைக் கோருகின்றனர், அது வெறுமனே கட்சித் தலைவரின் விசுவாசிகளால் நிரப்பப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறது.
காங்கிரஸின் அரசியலமைப்பின் படி, 9,000-க்கும் மேற்பட்ட மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் கட்சியின் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் கல்லூரியை உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இந்த மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளில் எட்டில் ஒரு பங்கு AICC பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அவர்கள் காங்கிரஸ் தலைவர் தேர்தலை பின்னர் ஒரு AICC அமர்வில் அங்கீகரித்து 12 CWC உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
கட்சியின் அரசியலமைப்பின் படி, “அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியில்: (அ) ஒற்றை மாற்றத்தக்க வாக்கு முறையின்படி விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எட்டில் ஒரு பங்கு இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை ஐந்துக்கும் குறையாமல் இருக்க வேண்டும்; சண்டிகர், அந்தமான் நிக்கோபார், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் & டையூ மற்றும் லட்சத்தீவுகளில் இருந்து தலா நான்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கட்சித் தலைவர் ஒருவர், “12 காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வாக்களிக்கும் அகில இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகளை நியமிக்க புதிய (கட்சி) தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டால்.. பிறகு எப்படி காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை எதிர்பார்க்க முடியும்? தேர்தல் கல்லூரி (காங்கிரஸ்) தலைவரால் உருவாக்கப்பட்டது எனில், கட்சிக்கு புத்துயிர் ஊட்டக்கூடிய இந்த செயல்முறை ஒரு ஏமாற்று வேலையாக மாற்றப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.