Yeddyurappa diaries : கேரவன் பத்திரிக்கை, எடியூரப்பா முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கு பாஜக தலைவர்களுக்கு வழங்கிய பணம் தொடர்பான டைரி குறிப்பின் பிரதியை செய்தியாக வெளியிட்டுள்ளது.
Yeddyurappa diaries - குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு
இதனை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
2009ம் ஆண்டில், எடியூரப்பா யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார் டைரி ஒன்றில் எழுதி அதில் கையெழுத்தும் போட்டுள்ளார்.
அதில் பாஜக தலைவர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், கட்காரி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரின் பெயர்களை குறிப்பிட்டு எவ்வளவு பணம் அளித்துள்ளார் என்பதையும் அதில் எழுதியுள்ளார் எடியூரப்பா. ஒவ்வொருக்கும் கொடுத்த தொகையின் மொத்த மதிப்பு 1800 கோடியை தொடுகிறது.
அதில் தன்னை சவுகிதார்கள் என்றும் பாதுகாவலர்கள் என்றும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் பாஜகவினர் ஒவ்வொருவரும் இந்த விவகாரத்திற்கு உரிய பதில் அளிக்க வேண்டும்.
மேலும் கேரவன் வெளியிட்டிருக்கும் செய்திகளை உள்ளடக்கிய டைரி தொடர்பான உண்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.
இந்த டைரி பிரதி உண்மையோ பொய்யோ என்று தெரியாது. ஆனால் 2017ம் ஆண்டில் இருந்து வருமான வரித்துறையிடம் இருக்கும் இந்த டைரி குறித்து ஏன் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்.
பாஜக தரப்பில் இதற்கு மறுப்பு கூறப்பட்டதோடு, காங்கிரஸ் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.
மேலும் படிக்க : கோடி கோடியாக இலங்கையில் முதலீடு செய்தாரா அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்?