ராகுல் காந்தியை சந்தித்த சந்திரபாபு நாயுடு! ஆலோசனைக்கான காரணம் என்ன?

அதே போல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் & கர்நாடக முதல்வரான எச்.டி.குமாரசாமியை போனில் அழைத்து பேசியுள்ளார் கே.சி.ஆர்.

Congress Chief Rahul Gandhi met TDP chief Chandrababu Naidu
Congress Chief Rahul Gandhi met TDP chief Chandrababu Naidu

Congress Chief Rahul Gandhi met TDP chief Chandrababu Naidu : சந்திரபாபு நாயுடு தற்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசி வருகிறார்.  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்சியில் அதி தீவிரம் காட்டி வரும் காரணத்தால் இந்த சந்திப்புகள் நிகழலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் திங்கள் கிழமையன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். 13ம் தேதி ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக தரப்பில் இருந்து பின்னர் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

மூன்றாம் அணியை உருவாக்கும் கே.சி.ஆர்

அதே போல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் மற்றும் கர்நாடக முதல்வரான எச்.டி.குமாரசாமியை போனில் அழைத்து பேசியுள்ளார் கே.சி.ஆர். கேசிஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாம் தலைமையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து இன்று இரண்டு தலைவர்களின் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது. காங்கிரஸ் தலைமை மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை மத்தியில் நடந்த விவாதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க : பொதுமக்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்… இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர் சாலைகள்

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Congress chief rahul gandhi met tdp chief chandrababu naidu

Next Story
பொதுமக்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்… இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர் சாலைகள்Jammu Kashmir National Highway 44 civilian traffic ban lifted
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express