Jammu Kashmir National Highway 44 civilian traffic ban lifted : பிப்ரவரி மாதம் 14ம் தேதி புல்வாமாவில் துணை ராணுவப்படையினர் வந்து கொண்டிருந்த வாகனங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 39 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதன் பின்பு காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் ஒன்று தான் ஸ்ரீநகரில் இருந்து உதம்பூர் வரை உள்ள ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 44ல் பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் தடை
பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தடை விதிக்கப்பட்டது என்றாலும், மக்களின் தேவைகளைப் பெற்றிட மிகவும் சிரமமான காலகட்டமாக இந்த இரண்டு நாட்களும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமையும் இனி மக்கள் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மே 23ம் தேதியில் இருந்து இந்த தடை நீக்கப்படுகிறது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ஒரே நாளுக்குள் இந்த முடிவினை வெளியிட்டுள்ளது ஜம்மு & காஷ்மீரின் உள்த்துறை அமைச்சகம்.
ஏப்ரல் மூன்றாம் தேதி உதம்பூர் மற்றும் பாராமுல்லாவிற்கு இடைப்பட்ட 270 கி.மீ தேசிய நெடுஞ்சாலையில் புதன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை 4 மணியில் இருந்து மதியம் 5 மணி வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஏப்ரல் 21ம் தேதி அந்த தடையினை ஞாயிறு கிழமைக்கு மட்டும் மாற்றி உத்தரவிடப்பட்டது.
பொதுமக்கள் மட்டுமன்றி, பாதுகாப்பு அதிகாரிகள், ராணுவ செயல்பாடுகள் போன்றவை இந்த செயல்பாடுகளால் பாதிப்பை சந்தித்ததால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க : புல்வாமா தாக்குதலின் போதும் போஸ் கொடுத்த மோடி… ப்ரைம் டைம் மினிஸ்டர் என ராகுல் விமர்சனம்