Advertisment

தலைமையின்றி தடுமாறும் காங்கிரஸ்... மனம் உடையும் சல்மான் குர்ஷித்!

தலைவர் இல்லாததால் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வுகளை இன்னும் மேற்கொள்ளவில்லை - செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Congress party yet to analyze the Lok Sabha election defeat

Congress party yet to analyze the Lok Sabha election defeat

Manoj CG

Advertisment

Congress party yet to analyze the Lok Sabha election defeat : 2019 நாடாளுமன்ற தேர்தலில் படும்  தோல்வியை சந்தித்தது காங்கிரஸ். இதனால் கட்சிக்குள்ளும், கட்சியின் தொண்டர்களுக்கும் தடுமாற்றம் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. நிரந்தர தலைவர் இல்லாமல் இருக்கும் கட்சி இது நாள் வரையில் எதற்காக இந்த கட்சி தேர்தலில் தோல்வியுற்றது என்பதை ஆலோசனை செய்யாமலே இருக்கிறது. இது குறித்து அக்கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் மிகவும் மனம் உடைந்து பேசியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 மாதங்கள் ஆன பின்பும் தேர்தலில் ஏன் தோல்வியுற்றோம் என்பதை யோசித்து முடிவுகளை மேற்கொள்ள கட்சி தயாராகவில்லை என நேற்றைய (08/10/2019) அன்று சல்மான் குர்ஷித் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தற்போதைய இடைக்கால தலைமை என்ற காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை என்னால் ஏற்கமுடியவில்லை. அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் இந்த கட்சியின் தலைவராக நிலைத்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

மேலும் படிக்க : இரண்டு மாநிலங்களில் தேர்தல்; பிரசாரம் செய்யாமல் தாய்லாந்துக்கு சென்ற ராகுல் காந்தி

ஹரியானா மற்றும் மகாராஷ்ட்ரா தேர்வுகள் நெருங்கி வருகின்ற நேரத்தில் சவாலை சந்திக்க தயாராகி வருகிறது காங்கிரஸ். ஹரியானா மற்றும் இதர பகுதிகளில் கட்சிப் பணிகளையும் தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள ஆட்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

லோக்சாபாவின் தேர்தல் தோல்வி குறித்து இன்னும் ஏன் ஆலோசனைகள் செய்யவில்லை என்று அசோசியட்டேட் ப்ரெஸ் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய போது “அதற்கு நீங்கள் ஒரு தலைவரை கொண்டிருக்க வேண்டும். நாங்களோ துரதிர்ஷ்டமாக எங்கள் தலைவரை நாங்கள் இழந்துவிட்டோம். அவர் அந்த பதவியைவிட்டு விலகினாலும் நாங்கள் அவருடைய வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருக்கின்றோம். இரண்டு பெரும் தோல்விகளுக்கு பிறகும் நாங்கள் அவரைத் தான் தலைவராக நினைக்கின்றோம். மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தேர்தலின் தோல்வி குறித்து அனலைஸ் செய்ய எங்களால் இயலவில்லை என்று கூறியுள்ளார் அவர்.

இந்த செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க

இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. நாங்கள் ராகுலை இழந்திருக்க கூடாது. அவர் இந்த கட்சியின் தலைமையாக செயல்பட்டிருக்க வேண்டும். நாங்கள் அவரையே மீண்டும் தலைமையேற்க அழைக்கின்றோம். அவர் இல்லை. அவர் இல்லாத காரணத்தால் தேர்தல் தோல்விகள் குறித்து ஆலோசனை செய்ய என்னால் யாரையும் அழைக்க இயலாது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Rahul Gandhi All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment