Advertisment

"அவித்த முட்டை, மீன் வறுவல்” - கொரோனா நோயாளிகளுக்கு கேரள அரசு வழங்கும் உணவுகள் என்ன?

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு வகைகள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona outbreak Kerala government provides healthy foods to COVID19 patients

Corona outbreak Kerala government provides healthy foods to COVID19 patients

Corona outbreak Kerala government provides healthy foods to COVID19 patients, check the menu here : கேரளாவில் தான் முதன்முதலில் கொரோனா வைரஸின் பாதிப்பால் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அம்மாநிலம் மிகவும் திறமையான, சிறப்பான பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா வைரஸில் இருந்து அம்மாநில மக்களை காக்க பெரும் முயற்சிகளை செய்கிறது. இது அம்மாநில மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது.

Advertisment

மேலும் படிக்க : குவாரண்டைன் வந்தால் அவர் வீட்டுல விட்றுங்க… மனுசன் நல்லா சமைப்பாரு – டேல் ஸ்டெய்ன்!

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு வகைகள். கேரள அரசு வழங்கும் உணவு குறித்து கேரளாவின் எர்ணாக்குளம் மாவட்ட ஆட்சியரின் சமூக வலைதள பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு இரண்டு விதமான உணவுகள் வழங்கப்படுகிறது செய்தித்தாள்களுடன்.

உள்ளூர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் :

காலை 7.30க்கு வழங்கப்படும் உணவில் தோசை, சாம்பார், 2 அவித்த முட்டைகள், 2 ஆரஞ்சுகள், 1 டீ மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர்

10:30 அளவில் அவர்களுக்கு பழச்சாறு வழங்கப்படுகிறது

மதியம் 12 மணிக்கு வழங்கப்படும் மதிய சாப்பாட்டில் 2 சப்பாத்தி, சாதம், மீன் வறுவல், தொரான், குழம்பு, தயிர், 1 லிட்டர் தண்ணீர் என பாரம்பரிய கேரள உணவு வழங்கப்படுகிறது

மதியம் 03:30 மணி அளவில்

டீயுடன் பிஸ்கட்டுகள், பழம்பொரி, அல்லது வடை வழங்கப்படுகிறது

7 மணிக்கு வழங்கப்படும் இரவு உணவில்

அப்பம், காய்கறி கூட்டு, 2 வாழைப்பழம் மாற்றும் 1 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் உணவுகள்

காலை உணவாக சூப், பழங்கள் (பச்சை வெள்ளரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம்), 2 அவித்த முட்டைகள்

11 மணி அளவில் அன்னாச்சிப்பழச்சாறு

12 மணி அளவில் டோஸ்ட் செய்த ப்ரட், சீஸ் (தேவைப்பட்டால்), பழங்கள்

4 மணிக்கு மீண்டும் பழச்சாறு

இரவு உணவாக டோஸ்டட் ப்ரெட், ஸ்க்ராம்ப்ள்ட் எக், பழங்கள்

குழந்தைகளுக்கு பால் ஆகியவை உணவாக வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க : கொரோனா தீவிரம் : எல்லாத்துக்கும் கேரளா முன்னோடி தான்… ”மாஸ்க்” தயாரிக்கும் கைதிகள்!

Coronavirus Corona Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment