குவாரண்டைன் வந்தால் அவர் வீட்டுல விட்றுங்க… மனுசன் நல்லா சமைப்பாரு – டேல் ஸ்டெய்ன்!

விளையாட்டினை மட்டும் எடுத்துவிட்டால் நமக்கு நம் வாழ்வில் என்ன இருக்கிறது?

By: Updated: March 20, 2020, 11:38:23 AM

Coronavirus outbreak Dale Steyn wants to be with Quinton de Kock in his quarantine : பாகிஸ்தானில் நடைபெற்று வந்த அந்த நாட்டின் ப்ரீமியர் லீக் போட்டிகள், கொரோனா நோய் தொற்றின் காரணமாக ரத்து செய்யபப்ட்டது. அரையிறுதி சுற்றுகள் முழுமையாக நடைபெறாத நிலையில், அங்கிருந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்களின் தாயகத்திற்கு பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர். தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் யுனைடட் இஸ்லமபாத் அணிக்காக விளையாடி வந்தார்.

மேலும் படிக்க  : குழந்தைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது எப்படி? விளக்குகிறார் சமீரா!

”ஒரு வேளை கொரோனாவிற்காக என்னை குவாரண்டைன் செய்ய கூறினால், என்னை குவின்டன் டி காக்குடன் இருக்க விடுங்கள்” என்று கூறுவேன் என்று இ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ (ESPNCricinfo) நடத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளார். இதற்கு காரணம் என்ன என்று கேட்டால் சிரித்துவிடுவீர்கள். “எனக்கு சமையல் செய்யவே சுத்தமாக பிடிக்காது. ஆனால் டி காக் மிகவும் அருமையாக சமையக்கும் முறையான சமையற்கலைஞர். அவருடன் இருந்தால் நல்ல சுவையான உணவு கிடைக்கும். அவர் மீன் பிடிக்க சென்றால் அவருடன் நானும் சென்றுவிடுவேன். அவர் நிறைய குக்கிங் ஷோக்களை பார்ப்பார். அவர் முறையான சமையற்கலைஞர். எனவே நிச்சயமாக அவருடன் நேரத்தை செலவிடவே விரும்புவேன்” என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

விளையாட்டு நிறுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய போது “ கொரோனாவால் விளையாட்டு போட்டிகள் ரத்தானது மிகவும் கவலைக்குரியது. தென் ஆப்பிரிக்கா போன்ற நாட்டில் ஏற்கனவே எங்களின் கலாச்சாரம், மதம், இன ரீதியான நிறைய பிரச்சனைகள் உள்ளது. விளையாட்டு மட்டுமே எங்கள் அனைவரும் ஒன்றாக இணைக்கும் புள்ளியாக இருக்கிறது என்று அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். விளையாட்டினை மட்டும் எடுத்துவிட்டால் நமக்கு என்ன இருக்கிறது ? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க : கொரோனா குறித்து சந்தேகமா? வாட்ஸ்ஆப்பில் பதில் அளிக்கிறது WHO!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus outbreak dale steyn wants to be with quinton de kock in his quarantine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X