Coronavirus News updates : கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் குறித்து தில்லி, அரியானா, கேரளா, ராஜஸ்தான், தெலங்கானா, உ.பி.,தமிழ்நாடு, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர்கள், லடாக், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகலை விரைந்து செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவிற்கு பிறகு கொரோனா வைரசால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் ஒன்று இத்தாலி.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அங்கு மேலும் 168 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிகபட்ச மக்கள் இத்தாலியில் இறந்துள்ளனர் .கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பதற்கான முயற்சிகளை இத்தாலிய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற பல முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
Coronavirus Latest news in tamil : காய்ச்சல், கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, மணிப்பூர் அரசின் உள்துறை, தென்கொபால் மாவட்டத்தில் உள்ள மோரே எல்லை நகரத்தில் இந்தோ-மியான்மர் கேட் எண் ஒன்று மற்றும் இரண்டு மூடி சீல் வைத்துள்ளது. மேலதிக உத்தரவு வரும் வரை எல்லை வாசல் சீல் வைக்கப்படும். சீனாவின் உடனடி அண்டை நாடான மியான்மருடன் மணிப்பூர் 398 கி.மீ. எல்லையை பகிர்ந்துகொள்கிறது. மணிப்பூர் மியான்மரிலிருந்து சீனத் தயாரிப்புகள் உட்பட மோரே எல்லை வழியாக ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்கிறது, அவை இந்தியாவின் முக்கிய இடங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
Web Title:Corona virus in tamil nadu latest news live updates175874
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே: புனேவில் 8 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் கண்டறியப்பட்டது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று 10 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.
கொரோனா எதிரொலியால் காஷ்மீரில் உள்ள ஜம்மு, சம்பா, கத்துவா, ரியசி, உதம்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக மார்ச் 31ஆம் தேதி வரை சினிமா தியேட்டர்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு எதிரொலி: அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய சிவில் சர்விஸ் குரூப் A அதிகாரிகள் தங்கள் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை கொரொனோ வைரஸ் தொற்று காரணமாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.
* பிரிட்டன் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ்,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் .
* சீனா-வில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று கூடியுள்ளது.
* தென் கொரியா- வில் கொரொனோ வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.
* ஸ்பெயின் நாட்டில் 1,200 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனைத்து பள்ளிகளையும் மூட அந்நாடு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு 52 ஆய்வுக் கூடங்கள் உள்ளன.
தமிழ்நாடு & புதுச்சேரியில் உள்ள ஆய்வகங்கள்
1. கிங்ஸ் தடுப்பு மருந்து & ஆராய்ச்சி மையம், சென்னை
2. அரசு மருத்துவக் கல்லூரி, தேனி
3. ஜிப்மர், புதுச்சேரி
இந்தியாவில், இதுவரை 52 மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளா (17), ராஜஸ்தான்(17) போன்ற மாநிலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜே & கே- 1 லடாக்- 2 ராஜஸ்தான்- 17 டெல்லி- 4 மகாராஷ்டிரா- 5 உ.பி.- 8 கர்நாடகா- 4 கேரளா- 17 தமிழ்நாடு- 1 தெலுங்கானா- 1
குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் இல்லை. பெரும்பாலும், அறிகுறிக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றது. உதாரணமாக, காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால், சில சமயங்களில் வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு தேவைப்படும் மருந்துகள், உடலுக்கு தேவைப்படும் நீர்ச்சத்து போன்றவற்றை உறுதி செய்கின்றனர்.
https://tamil.indianexpress.com/explained/india-second-line-hiv-medications-to-fight-the-novel-coronavirus/
கொரோனா வைரசை எதிர்த்துப் போராட ‘இரண்டு’ இரண்டாம் வரிசை எச்.ஐ.வி மருந்துகளை பயன்படுத்த “பொது சுகாதார அவசரநிலை” கீழ் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அனுமதி கொடுத்துள்ளது .
கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கருத்தில் கொண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல் போட்டிகளை நடத்த (பிசிசிஐ) அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.போட்டிகளைத் தடை செய்ய மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் தனது ட்விட்டரில், சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இத்தாலியில் தமிழக மாணவர்களுக்கு, ‘கொரோனா பாதிப்பு இல்லை’ என்ற சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் தாயகம் திரும்ப முடியாததற்கு காரணமாகும். உடனடியாக அவர்களுக்கு மருத்துவ ஆய்வு நடத்தி சான்றிதழ் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்! என்று தெரிவித்துளார்.