கொரோனா வைரஸுக்கு எதிராக ‘போர்’: உத்தவ் தாக்கரே

அடுத்த 2-4 வாரங்களுக்கு அனைத்து நகரங்களையும் உடனடியாக பூட்டுமாறு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Coronavirus news in tamil, latest Coronavirus Updates

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 166 ஆக உயர்ந்தது. சத்தீஸ்கர் மாநிலம் தனது முதல் கொரோனா வைரஸ் வழக்கை பதிவு செய்தது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மேலும் புதிய வழக்குகள் பதிவாகின.

கொரோனா வைரஸ் நெருக்கடி தொடங்கிய பின்னர் , சீனாவில் இன்று முதல் முறையாக ஒரு கொரோனா வைரஸ் வழக்குகள் கூட பதிவாகவில்லை.

உலகளவில், கொரோனா வைரஸ் 2.18 லட்சத்துக்கு அதிகமான மக்களை பாதித்துள்ளது. 8,800 க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் உரை: கொவிட்-19 மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்பான விஷயங்கள் பற்றி இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.

ப.சிதம்பரம் கோரிக்கை: கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அடுத்த 2-4 வாரங்களுக்கு அனைத்து நகரங்களையும் உடனடியாக பூட்டுமாறு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதமபரம் இன்று தனது ட்விட்டரில், “ஐசிஎம்ஆர் நடத்திய மாதிரி சோதனையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் சமூக அளவிலான பரவுதல் இல்லை (நிலை 3) என்று தெரியவந்துள்ளது. எனவே, இந்த நிலையில் (நிலை -2) வைத்தே கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுபடுத்த வேண்டும். உலக சுகாதார மைய தலைமை இயக்குனரின் நேற்றைய அறிக்கைக்குப் பிறகு, அனைத்து நகரங்களையும் குறைந்தது 2-4 வாரங்களுக்கு உடனடியாக பூட்டுமாறு உத்தரவிட அரசு தயங்கக்கூடாது” என்று பதிவு செய்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களில் 50% பேர் வீட்டில் இருந்து வேலை: மத்திய அரசின் குரூப் B மற்றும் C ஊழியர்கள் 50 சதவீதம் பேரை, ரோஸ்டர் முறையில் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது. கூட்டத்தைத் தவிர்ப்பதற்கும் அலுவலக நேரங்களும் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை, காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை, காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை அலுவலகத்தில் கலந்து கொள்வார்கள்.

அத்தியாவசிய (அ) அவசரகால சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கும், கொரோனா வைரஸ்  பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில் நேரடியாக ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.


 

மத்திய அமைச்சரின் யோசனை: நாட்டில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி சவுபே, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்துவதர்கான சில தனித்துவமான ஆலோசனைகளை இன்று வழங்கியுள்ளார்.

ஏஎன்ஐ என்ற செய்து நிறுவனத்திடம் பேசிய அவர் “காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சூரியன் வெப்பமாக இருக்கும். 15 நிமிடங்கள் உட்கார்ந்தால், நமது வைட்டமின் டி அளவு மேம்படும். இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்களையும் கொல்லும்” என்று கூறினார்.

 

பஞ்சாப்பில் பொது போக்குவரத்த்துக்கு தடை : நாளை நள்ளிரவு முதல் பேருந்து, ஆட்டோ ரிக்‌ஷாக், டெம்போ உள்ளிட்ட மாநிலத்தில் இயங்கும் பொது போக்குவரத்துக்கு பஞ்சாப் அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளது. பஞ்சாப் அரசு நடத்தும் பள்ளிகளில் அனைத்து தேர்வுகளையும் மார்ச் 31 வரை ஒத்திவைக்க அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது. புதிய தேர்வு அட்டவணை ஏப்ரல் 1 ஆம் தேதி அறிவிக்கப்படும். ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்  வேண்டுகோள்:

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ட்விட்டரில், ” தமிழகத்தில் கொரோனா  வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இனைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம் என்று தெரிவித்துள்ளார், மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித் தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேகாலயா சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது: மேகாலயா மாநிலத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும், மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. இது ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஷில்லாங் மற்றும் மேகாலயாவின் மற்ற இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அனைத்து சுற்றுலாப்பயணிகளும், இதற்கு ஏற்றவாறு தங்களது பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு, மேகாலயா மாநில அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கேட்டுக்கொண்டுள்ளார்.

168 ரயில் சேவைகள் ரத்து : கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக ரயில்களில் மக்களின் வருகை கணிசமாக குறைந்தது. மேலும், பயனர்கள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்த வண்ணம் இருந்தனர். எனவே,மக்கள் வருகை இல்லாத 168 ரயில் சேவைகளை ரத்து, நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே வாரியம் எடுத்து வரும் நடவடிக்கைகள்:  தொடர்ச்சியான கண்காணிப்புக்கென கீழ்கண்ட கூடுதல் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று ரயில்வேத்துறை அமைச்சர் அறிவித்தார்.

  1. அமைச்சகத்தின் அதிகாரிகள், மண்டல ரயில்வே அதிகாரிகள் ஒருங்கிணைப்புக்கான ஆன் லைன் கண்காணிப்புப் பலகை அமைத்தல்,
  2. கொவிட்-19 விரைவு பதிலடிக் குழுவை, ரயில்வே வாரியத்தின 6 நிர்வாக இயக்குனர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அமைத்தல் ,
  3. அத்தியாவசியமற்ற ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு ஆலோசனை கூறுதல்.

 

கொரோனா வைரஸுக்கு எதிராக ‘போர்’ –  உத்தவ் தாக்கரே: இது வைரஸுக்கு எதிரான போர். அரசாங்கம் வழங்கிய வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  வெளிநாட்டிலிருந்து வரும் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்டிப்பாக தனிமைபடுத்த சொல்லுங்கள்,” என்று தெரிவித்துள்ளார். நாட்டிலேயே அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் 47 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீசி எறியப்பட்ட கோழிகள் : திருபத்தூர் அடுத்த உடையாமுத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிராயிலர் கோழிகளை உயிருடன் வீசிச் சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொடருக்கும், கோழி இறைச்சிக்கும், கொரோனா வைரஸ் தொடருக்கும் சம்பந்தம் இருப்பதாக வந்த வதந்தியால் இந்தியாவில் கோழி விற்பனை சரிந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பு: கோழி கறி சாப்பிடுவது பாதுகாப்பானதா? ஆம், இது முற்றிலும் பாதுகாப்பானது. எந்தவொரு விலங்கு அல்லது பறவையின் இறைச்சியை உட்கொள்வதற்கும், தொற்றுநோய் உண்டாவதற்கும் இடையே எந்த தொடர்பும் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை

கொரோனா முன்னெச்சரிக்கையாக ‘சர்ச்’களில் பொது வழிபாடுகள் ரத்து: சென்னை மயிலை பேராயம் அறிவிப்பு : கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மக்கள் கூடுவதைத் தவிர்க்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் அனைத்து தேவாலயங்களிலும் திட்டமிடப்பட்ட அனைத்து பொது வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் மார்ச் 31 வரை ரத்து செய்து அறிவித்துள்ளார்.

 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus in tamilnadu coronavirus news latest corona news updates

Next Story
WHO பிரதிநிதி டாக்டர் ஹென்க் பெக்கெடம் – ‘இந்தியா கொரோனா சோதனையை முடுக்கிவிட வேண்டும்’coronavirus in india, icmr test, who, india coronavirus test, covid-19 test india, கொரோனா வைரஸ், உலக சுகாதார அகைப்பு, டாக்டர் ஹென்க் பெகேடம், india us covid-19 test, WHO’s representative Dr Henk Bekedam, இந்தியாவில் கொரோனா வைரஸ், ‘India does need to step up testing,coronavirus covid-19, tamil indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com