/tamil-ie/media/media_files/uploads/2020/03/a113.jpg)
corona virus indian includes in COVID-19 European Vaccine Research Team
COVID-19 Updates: கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 129 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றைத் தடுப்பதற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவில் இந்தியா் ஒருவா் இடம்பெற்றுள்ளார்.
10 பக்க அளவிற்கு மரண அறிவிப்புகள் : இத்தாலியை கலங்கடித்த கொரோனா
கா்நாடகாவின், ஹசன் மாவட்டத்தில் உள்ள அரகலாகுட் நகரைச் சோ்ந்த மகாதேஷ் பிரசாத், தற்போது பெல்ஜியத்தில் உள்ள லூவென் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தாக்குதலைத் தடுப்பதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக, ஐரோப்பிய ஆராய்ச்சியாளா்கள் குழுவை உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ளது. 10 ஆராய்ச்சியாளா்களைக் கொண்ட அந்தக் குழுவில் மகாதேஷ் பிரசாத்தும் இடம்பெற்றுள்ளாா். இந்தக் குழுவினா் கரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.