Corona Updates: கோவிட் -19 பாதிப்பு அதிகமுள்ள 6 மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து நபர்களுக்கும் கர்நாடக அரசு கட்டாய பரிசோதனை செய்து வருகிறது. இது மே 21 அன்று வெளியிடப்பட்ட மாநிலத்தின் புதிய சோதனைக் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
Advertisment
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து வரும் நபர்கள் அறிகுறியற்றவர்களாக இருந்தாலும் சோதனை செய்ய வேண்டியிருக்கும் என்று அரசாங்க உத்தரவு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நுழைவதை முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா மே 18 அன்று தடை செய்திருந்தார். இந்த முடிவின் விளைவாக கர்நாடகாவிற்குள் நுழைய இந்த 6 மாநிலங்களில் இருந்து வந்த 21,607 கோரிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய சோதனைக் கொள்கையின் கீழ், பிற மாநிலங்களிலிருந்து கர்நாடகாவுக்குத் திரும்பும் அனைத்து நபர்களும் பரிசோதிக்கப்படுகிறார்கள், மேலும் நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் COVID-19 க்கு பரிசோதிக்கப்பட்டு மருத்துவமனை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுகிறார்கள். அறிகுறியற்றவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி விடுவிக்கப்படுவதற்கு முன்பு சோதிக்கப்படுவார்கள்.
மே 8 முதல், பிற மாநிலங்களிலிருந்து மக்கள் திரும்பத் தொடங்கியபோது, கர்நாடகாவில் தினசரி வெளிவரும் சராசரி COVID-19 பாதிப்புகள், முந்தைய 20 உடன் ஒப்பிடும்போது 70 ஆக உயர்ந்தன, பெரும்பான்மையானவர்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள்.
இதற்கிடையில், இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நுழைவதை நிறுத்த கர்நாடக அரசு எடுத்த முடிவின்படி 21,607 கோரிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது. "குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாட்டிலிருந்து மே 31 வரை மக்களை அனுமதிக்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று முதல்வர் திங்களன்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் போது, கர்நாடகாவிற்குள் நுழைவதற்கு சுமார் 75 சதவீத ஒப்புதல்கள் - அரசு போர்டல் சேவா சிந்து மூலம் - மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கர்நாடக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 1 முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1.26 லட்சம் பேர் வருவதற்காக விண்ணப்பித்ததில், மகாராஷ்டிரா (67,518) மற்றும் தமிழ்நாடு (27,743) கோரிக்கைகளுக்கு என மே 18 வரை 95,261 ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. குஜராத்தில் இருந்து வந்த 2,157 கோரிக்கைகளும் க்ளீயர் செய்யப்பட்டன.
இப்போது, இந்த மாநிலங்களில் இருந்து வந்த 21,607 கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன என்று மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் மகாராஷ்டிராவிலிருந்து 10,568 கோரிக்கைகளும், தமிழகத்திலிருந்து 10,351 கோரிக்கைகளும் அடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil