ஊரடங்கு உத்தரவெல்லாம் ஊருக்கு தான்... பாஜகவுக்கு இல்லை!

ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டு கிராமத்தில் கேக் வெட்டி, பிரியாணி வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ

ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டு கிராமத்தில் கேக் வெட்டி, பிரியாணி வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus BJP MLA Turuvekere M Jayaram today celebrated his birthday with villagers during lockdown

coronavirus BJP MLA Turuvekere M Jayaram today celebrated his birthday with villagers during lockdown

coronavirus BJP MLA Turuvekere M Jayaram today celebrated his birthday : கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற காரணத்தால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசின் அனைத்து உத்தரவுகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அரசு பள்ளி ஒன்றில் தொண்டர்கள் படை சூழ பிறந்த நாள் விழாவை கொண்டாடி உள்ளார் பாஜக எம்.எல்.ஏ.

Advertisment

கர்நாடகாவின் துருவேகெரே எம்.எல்.ஏ மசலே ஜெயராமன். இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால், குப்பி தாலுகா, தும்கூரில் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்களை அழைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இது மற்ற மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுள்ளனர். பங்கேற்றவர்களுக்கு பிரியாணி வழங்கியுள்ளார் அந்த எம்.எல்.ஏ.

மேலும் படிக்க : அக்கம் பக்கத்தில் சுற்றித்திரியும் தெரு விலங்குகளிடம் கருணை காட்டுங்கள் – பி.எஸ். எடியூரப்பா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Advertisment
Advertisements
Karnataka Bjp Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: