Coronavirus live updates, Lockdown 5.0 news : கொரோனாவுக்கான போராட்டத்தில் நாடு வெற்றிப்பாதையில் பயணிக்க தொடங்கியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டாவது முறை பிரதமராக பொறுப்பேற்று, ஓராண்டை கடந்து இருக்கும் மோடி, நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நான்காவது பொது முடக்கம், நாளையுடன் நிறைவடைகிறது. இதனை நீடிப்பது குறித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை. தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து, மருத்துவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட ஆட்சியர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. இழப்புகள் எண்ணிக்கையில் சீனாவை முந்தியது இந்தியா. சென்னையில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆகையால் நகரில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள், என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Tamil News Today Live: ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் 1,25,000 பேருக்கு நிரந்தர வேலை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆன்லைன் சேவைகளை நாட ஆரம்பித்தனர். அதனால் அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக லட்சக்கணக்கான தற்காலிக ஊழியர்களை பணியமர்த்தியது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் அனைத்து விதமான பொருட்களும் ஆன்லைனில் விற்கப்படுகின்றன. அதனால் ஆன்லைன் விற்பனை சேவை அதிகரித்து வருகிறது.
Web Title:Coronavirus covid 19 lockdown extension latest updates tamil news today live
தமிழ்நாட்டில், தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகை, கரூர், சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் ஜுன் 1-ம் தேதி முதல் நீதிமன்றங்கள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற அறைக்குள் 5 வழக்கறிஞர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வழக்கு தொடர்ந்தவர்களை நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
மற்ற பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடுகையில், வயதான ஆண்கள் கொரோனா பெருந்தொற்றை பற்றி குறைவாகவே கவலைப்பட்டனர், மேலும், பொது முடக்க காலத்தில் தங்கள் நடத்தையில் குறைந்த எண்ணிக்கையிலான மாற்றங்களை மட்டுமே இவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
மேலும், வாசிக்க
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) 2020 ராஜீவ் காந்தி கெல் ரத்னா விருதுக்கு இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவை பரிந்துரைத்தது, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர் தீப்தி சர்மா ஆகியோர் அர்ஜுனா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஐந்தாவது பொது முடக்கநிலை காலத்தில் மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும் சென்றுவர இ - பாஸ் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் பரவலுக்கு முறையான மருந்து வெளிவந்த பிறகே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சை கட்டணங்களை நெறிமுறைப்படுத்தவும், தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக் கட்டணத்தைக் குறைக்கவும், தனியார் மருத்துவமனை பிரதிநிதிகளை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் காணொளி மூலம் சந்தித்தார்.
ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டண விகிதங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 82 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
Lockdown 5 news : பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம் என்று உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழலில் சென்னையில் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை தொடங்க வேண்டாம் என்றும், அவ்வாறு அனுமதித்தால் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவக் குழு முதல்வர்க்கு பரிந்துரைத்தாக ஆரியப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 687 பேர் குணமடைந்தனர்.மொத்தம் 12,000 பேர் குணம் அடைந்துள்ளனர்- 9,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை தெரிவித்துள்ளது .
ஊழியர்கள் முடிந்த வரை work from home செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பணியிடங்களில் முடிந்தளவுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவதை கடைபிடிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தல்.
இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது. திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது. முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம் என்றும் தெரிவித்தது.
நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை பொது முடக்கம் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், ஜூன் 8-ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதோடு, நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் உள்ள 4வது கட்ட பொது முடக்கம் மே 31-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், நாடு முழுவதும் ஜூன் 30 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமுடக்க நீட்டிப்பு அன்லாக் 1.O என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் உள்ள 4வத் கட்ட பொதுமுடக்கம் மே 31-ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநில அரசு அம்மாநிலத்தில் பொதுமுடக்கத்தை ஜூன் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா வைர தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக வேளாண்துறை செயலாளர் ககந்தீப்சிங் பேடி பேட்டி: பாலைவன வெட்டுக்கிளிகள் தென்னிந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. பாலைவன வெட்டுக்கிளிகள் ஜூலை வரை இருக்கும். ஆனால், அந்த தாக்குதல் ராஜஸ்தானில்தான் இருக்கும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். பீகார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது. கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த பிறகே வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்.
மே மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை போக்குவரத்து பணிமனைகள் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து , மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை அடுத்த 48 மணி நேரங்களில் தெற்கு ஓமன் - ஏமன் கடலோரப் பகுதிகளிலும், மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளிலும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென்கிழக்கு, அதையொட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் இரண்டாவது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு உள்ளதால், 31 மே 2020 முதல் மறுஅறிவிப்பு வரும் வரை, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்திய வானியல் ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்/ புயல் முன்னறிவிப்புப் பிரிவு வெளியிட்ட செய்துகுறிப்பில்: தெற்குக் கடலோர ஓமனிலும், அதையொட்டியுள்ள ஏமனிலும் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நிலையாக உள்ளது. 30 மே 2020 இன்று காலை எட்டரை மணி நிலவரப்படி அட்சரேகை 17.3°வடக்கு, தீர்க்கரேகை 54.2° கிழக்கில், சலாலாவிலிருந்து (ஓமன்) வடக்கு வடகிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், அல்காயிதாவிலிருந்து (ஏமன்) கிழக்கு வடகிழக்கு சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரங்களில் இது மேலும் தீவிரமடைந்து மிக ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அடுத்த 12 மணி நேரங்களில், இது மேற்கு வடமேற்கு திசையில் மெல்ல நகர்ந்து, அதன் பிறகு மேற்கு தென்மேற்கு திசையில் நகரக் கூடும்" என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணியின் போது இறந்த நர்ஸ் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கி தமிழக முதல்வர் உத்தரவு.
நான்கவாது போதுமுடக்கம் வரும் மே- 31ம் தேதியோடு முடிவடையும் நிலையில்,சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும்; பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அதிமுக அரசு செயல்படுத்திவருவதாகவும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். மேலும், விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
சேலம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் சுற்றுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பள்ளிகளைத் திறப்பது குறித்து முதலமைச்சர் தலைமையிலான குழுதான் முடிவு செய்யும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
40 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் தாமதமாகிவிட்டன. அதில் 1 ரயில் சேரும் இடத்தை இடத்தை அடைய 9 நாட்கள் ஆனது. இதுவரை, 80 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்திய ரயில்வே துறையில் இதுபோன்ற குழப்பங்களைப் நாங்கள் கேள்விப்பட்டதில்லை. திரு பியுஷ் கோயல் அவர்களுக்கு எந்த துறையும் வழங்காமல் அமைச்சர் பதிவியில் அனுமதிக்க பிரதமரை கேட்டுக்கொள்கிறேன் என்று அசோக் கெஹ்லோட் ட்வீட் செய்துள்ளார்.
100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளம் அடுத்த மூன்று மாதங்களுக்கு பணியாளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளம் இதுநாள் வரை பணியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக அனுப்பப்பட்டு வந்தது.
நீலகிரி, கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுவதை அடுத்து வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அதிகாரிகளுடன் மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்
தமிழகத்தில் நான்காவது பொதுமுடக்கம் நாளை இரவோடு முடிவடையும் நிலையில், முதல்வர் தற்போது 19 மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பின், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையெடுப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை என்று மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் எருக்கன் செடிகள், வாழை, பப்பாளி ஆகயவற்றை வெட்டுக்கிளிகள் அதிகளவில் உண்டதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து இணை இயக்குநர் கூறுகையில், வெட்டுக்கிளி கட்டுபடுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறோம். தற்போது, காணப்படுவது உள்ளூர் வெட்டுக்கிளி தான். பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை என்று தெரிவித்தார்.
வெட்டுக்கிளிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, தொலைவில் இருந்து இயக்கும் ஆளில்லாத விமான முறையைப் பயன்படுத்த, அரசு நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் விலக்கு’’ அளிக்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சில நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.
கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக முன் கள வீரர்களுக்காக நன்றி பறைசாற்று விதமாக இசைஞானி இளையராஜா பாரத பூமி என்ற இசை தொகுப்பை வெளியிட்டார்.
தமிழகத்தில் உயர் பதவிகளில் இருக்கும் பட்டியலின மக்களை தொடர்ந்து இழிவாக பேசிவரும் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களின் தரக்குறைவான பேச்சைக் கண்டிக்காத மு.க.ஸ்டாலின்னை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துகிறது.
சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய பெண் போலீசார் 12 பேர் உள்பட 62 ஆயுதப்படை போலீசாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பணிக்கு திரும்பிய 62 பேரை காவல் ஆணையர் விஸ்வநாதன் பூங்கொத்து, சான்றிதழ் வழங்கி வரவேற்றார்.
கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வரும் வாரத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர். திங்கள் அல்லது செவ்வாய் கிழமை நடைபெறும் ஆலோசனையில் உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
தமிழகத்தில் ரூ.8.84 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,53,543 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு. இதுவரை 4,33,101 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க உத்தரவை மீறியதாக 5,18,391 வழக்குகள் பதிவாகியுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
சின்னத்திரை படப்பிடிப்பில் நாளை முதல் நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் என 60 பேர் பணியாற்றலாம். சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் ஆட்சியரிடம் ஒருமுறை மட்டும் அனுமதி பெற்றால் போதும், என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்திய நாட்டின் ஒற்றுமை மேலும் உறுதி செய்யப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி ராமர் கோயில் வழக்கு விரைவாக நடத்தி முடிக்கப்பட்டது. முத்தலாக் போன்ற மோசமான நடைமுறை ஒழிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தேசிய அளவில் நடைபெற்ற போராட்டங்கள் இந்திய நாட்டின் பன்முகத் தன்மைக்கு ஒரு உதாரணம். கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் பரவியபோது, இந்த உலகத்திற்கு இந்தியா பிரச்சனையாக மாறும் என்று பலரும் பயந்தனர். ஆனால் இன்று நம்மை உலகம் பார்க்கும் விதத்தை மாற்றியுள்ளோம். உலகின் பணக்கார மற்றும் செழிப்பான நாடுகளை விடவும் நமது நாடு எதிலும் குறைந்ததில்லை என்பதை உங்களது அனைவரின் ஒற்றுமை மற்றும் பலம் மூலம் நிரூபித்து விட்டீர்கள். நோயை கட்டுப்படுத்துவதில் எப்படி முன்னுதாரணமாக மாறினோமோ, அதுபோல, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் உலகிற்கே நாம்தான் முன் உதாரணமாக மாறப்போகிறோம்.
எனது இந்த கடிதத்தின் வாயிலாக உங்கள் ஆசீர்வாதத்தை எதிர்பார்த்து இருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை கொடுத்து வருகிறோம். நிர்வாக சீர்கேடு மற்றும் சிவப்பு நாடா போன்ற மந்தமான பணிகளுக்கு இங்கு இடம் கிடையாது. இந்தியாவின் பெருமை குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி தீவிரவாத முகாம்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அழித்தோம். 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்கள் விமானப்படையால் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது எங்களை மறுபடியும் மக்கள் தேர்ந்தெடுத்தது அதே பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. புதிய உயரங்களைத் தொட வேண்டும் என்பதற்காகவும்தான்.
சுயசார்பு பொருளாதாரம் என்பதுதான் நமது இலக்கு. ஒரு பெரும் தொற்றுநோய் காரணமாக கண்டிப்பாக இது நெருக்கடியான காலம்தான். ஆனால் இந்தியர்களான நமக்கு இது ஒரு உறுதியான தீர்வு காணும் நேரம். 130 கோடி மக்களின் தற்போதைய மற்றும் எதிர்காலம் ஒரு துன்பகரமான சூழ்நிலையால் வழி நடத்தப்படாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் பொற்காலம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் துவங்கியது. பல தசாப்தங்களுக்கு பிறகு இந்த நாடு முழு அறுதி பெரும்பான்மையுடன் ஒரு கட்சியை மீண்டும் ஆட்சிக்கு தேர்ந்தெடுத்த நாள் இது. வழக்கமான நாட்களாக இருந்திருந்தால் நான் உங்களோடு இந்த நேரத்தில் இருந்து இருப்பேன். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலை அதற்கு அனுமதிக்கவில்லை.
இதுபோன்ற ஒரு மோசமான நோய் பாதிப்பு காலகட்டத்தில் எவரொருவரும் துன்பம் அடைய வில்லை என்று கூறிவிடமுடியாது. நமது தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு குறு தொழில் நடத்துவோர், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். அதே நேரம் இதுபோன்ற சிக்கல்கள், துன்பங்கள் போன்றவை பேரிடராக மாறிவிடாமல் தடுப்பதற்கான போதிய கவனத்தை அரசு செலுத்தி வருகிறது. நமது நாடு நிறைய சவால்கள் மற்றும் சிரமங்களை சந்தித்து வருகிறது. இதற்காகத்தான் நான் இரவு பகலாக உழைத்து வருகிறேன். என்னிடம் வேண்டுமானால் குறைபாடுகள் இருக்கக்கூடும். ஆனால் நமது நாட்டில், இல்லை என்று எதுவுமே இல்லை. நான் உங்களை நம்புகிறேன். உங்கள் பலம், உங்கள் சக்தி ஆகியவற்றை நான் ரொம்பவும் நம்புகிறேன். என்னை விடவும் உங்களை அதிகம் நம்புகிறேன்.
ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி-நாகர்கோவில், கோவை-காட்பாடி, மதுரை - விழுப்புரம், கோவை - மயிலாடுதுறை ஆகிய 4 ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
சென்னையில் RC, FC யூனிட்டில் உள்ள 50% பணியாளர்கள் பணிக்கு வர மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவு. பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகளை இயக்கும்போது சிரமம் ஏற்படாத வகையில், பேருந்துகள் பராமரிப்பு, பழுது நீக்கும் பணிக்கு தொழில்நுட்ப பணியாளர்கள் வர ஆணையிடப்பட்டுள்ளது. பணிக்கு வரும் ஊழியர்கள் மாஸ்க், கையுறை, சானிடைசர் கட்டாயம் பயன்படுத்த உத்தரவு.