மெல்ல மெல்ல கிளைகளை பரப்பும் கொரோனா – இந்தியாவின் இன்றைய நிலை என்ன?

மகாராஷ்டிராவில் திங்களன்று குறைந்தது 82 பேர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது, இது மாநிலத்தின் எண்ணிக்கையை 2,064 ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

By: April 13, 2020, 7:43:54 PM

COVID-19 in India Updates: கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் 9,000 தாண்டி 9,152 ஆக உள்ளது. இதுவரை 856 பேர் குணமடைந்துள்ளனர்.


மகாராஷ்டிரா தொடர்ந்து 149 இறப்புகளுடன் முதலிடத்திலும், மத்தியப் பிரதேசம் 36, குஜராத் 25, டெல்லி 24 ஆகவும் உள்ளன. பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு தலா 11 இறப்புகளைப் பதிவு செய்துள்ளன, தெலுங்கானா ஒன்பது உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது.

2.4 சதுர கி.மீ, 8.5 லட்சம் மக்கள் : மும்பை தாராவியில் சமூக விலகல் சாத்தியமா?

எபோலாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்து COVID-19 வைரஸின் பெருக்கத்தை பாதிக்கலாம்

ஐபிஎம்ஆரின் மருத்துவர் ஆர் ஆர் கங்ககேத்கர் கூறுகையில், எபோலாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து மூலம் கோவிட் -19 வைரஸின் பெருக்கம் பாதிக்கலாம். கோவிட் -19 க்கு இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், 6 வாரங்களுக்கு சோதனைகளை மேற்கொள்ள போதுமான அளவு அவர்களிடம் இருப்பு உள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் 14 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

கடந்த 14 நாட்களில் நாட்டின் 14 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கோண்டியா, ராஜ் நந்த் காவ்ன், துர்க், சத்தீஸ்கரில் பிலாஸ்பூர், தாவாங்கிரி, கோடகு, தும்குரு, கர்நாடகாவில் உடுப்பி, கோவாவின் தென் கோவா, வயநாடு, கோட்டயம், மணிப்பூரில் மேற்கு இம்பால், ஜே & கே மிஸ், ராஜோரி , புதுச்சேரியில் மகே, பஞ்சாபில் எஸ்.பி.எஸ் நகர், பாட்னா, பீகாரில் நாலந்தா & முங்கர், ராஜஸ்தானில் பிரதாப்கர், பானிபட், ரோஹ்தக், ஹரியானாவில் சிர்சா, உத்தராகண்டில் பௌரி கர்வால், தெலுங்கானாவில் பத்ரதரி கோத்தகுடம் ஆகிய மாவட்டங்களில் தொற்று காணப்படவில்லை.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 796 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக 35 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார்.

ஏப்ரல் 30 வரை தமிழகம் லாக் டவுன் நீட்டிக்கிறது

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 30 வரை லாக் டவுன் நீட்டிப்பதாக தமிழகம் திங்கள்கிழமை அறிவித்தது. இதன் மூலம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு பிறகு தமிழகம் ஏழாவது மாநிலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

COVID-19 காரணமாக சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினரின் விசா, இ-விசா ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கோவிட் -19 காரணமாக இந்தியாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினரின் வழக்கமான விசா மற்றும் இ-விசாவை ஏப்ரல் 30 வரை இலவசமாக அரசாங்கம் நீட்டித்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத் தடுக்க மார்ச் 24 அன்று அறிவிக்கப்பட்ட 21 நாள் லாக் டவுன் காரணமாக வெளிநாட்டினர் இந்தியாவில் சிக்கித் தவிக்கின்றனர்.

இலவச COVID-19 சோதனை தொடர்பான மனுவை தள்ளுபடி செய்யுமாறு ஐ.சி.எம்.ஆர் கோரிக்கை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) திங்களன்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தது. அதில், தனியார் ஆய்வகங்களில் COVID-19 க்கு இலவச சோதனைக்கு உத்தரவிட்ட மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியது.

மகாராஷ்டிரா 2,000 எண்ணிக்கையை தாண்டியது

மகாராஷ்டிராவில் திங்களன்று குறைந்தது 82 பேர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது, இது மாநிலத்தின் எண்ணிக்கையை 2,064 ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய பாதிப்புகளில், மும்பை நகரத்திலிருந்து 59 பேரும், நாசிக் மாவட்டத்தில் மாலேகான் தெஹ்ஸிலில் இருந்து 12 பேரும் பதிவாகியுள்ளனர். தவிர, தானேவிலிருந்து ஐந்து, புனேவில் மூன்று பேர், பால்கரிலிருந்து இரண்டு பேர், மற்றும் வசாய்-விரார் டவுனில் இருந்து ஒருவருக்கும் என 82 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மும்பையின் தாராவியில் நான்கு புதிய கோவிட் -19 பாதிப்புகள், ஒரு இறப்பு

மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்றான தாராவி, திங்களன்று மற்றொரு மரணத்தையும் மேலும் நான்கு கோவிட் -19 பாதிப்புகளையும் பதிவு செய்துள்ளதாக மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம், தாராவியில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை ஐந்து ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

குஜராத்தில் மேலும் 22 கோவிட் -19 பாதிப்புகள்; மொத்தம் 538

குஜராத்தில் திங்களன்று இருபத்தி இரண்டு புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, இதன் மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு இறப்புகள் பதிவாக, மொத்தம் இறப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

22-நாள் கைக் குழந்தையுடன் பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ் அதிகாரி

ராஜஸ்தானில் கொரோனா வைரஸின் 11 புதிய பாதிப்புகள்

மேற்கு மாநிலத்தில் திங்களன்று மேலும் 11 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதன் மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 815 ஆக உயர்ந்துள்ளது என்று ஒரு அதிகாரி கூறினார். தொற்று காரணமாக இதுவரை 11 பேர் இறந்துள்ளனர்.

ஜார்க்கண்டில் 2 புதிய கோவிட் -19 பாதிப்புகள்

போகாரோ மாவட்டத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஜார்க்கண்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus india updates april 13 covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X