Advertisment

மோடி எங்களை காப்பாற்றுங்கள்! கொரோனா பீதியில் கப்பலில் இருந்து கண்ணீர் விடும் இந்தியர்கள்!

உலக சுகாதார நிலையமான WHO, ஜப்பான் அரசிடம் அம்மக்களை காப்பாற்ற கோரிக்கை வைத்துள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus Indian crews SOS video from diamond princess ship

Coronavirus Indian crews SOS video from diamond princess ship : கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது வரையில் 1016 நபர்கள் சீனாவில் இந்த விசித்திர வியாதிக்கு உயிரிழந்துள்ளனர். சீனா மட்டுமில்லாமல் தொடர்ந்து பரவி வரும் இந்த நோயால் உலக நாடுகளும் பீதி அடைந்துள்ளது. மருத்துவர்கள் தங்களால் முடிந்த வரையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆராய்ச்சியாளர்களும் இந்த நோய்க்கான மருந்தினை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா வைரஸ் குறித்து முன்பே எச்சரிக்கை செய்த மருத்துவர் மரணம்… சோகத்தில் சீனா!

இந்நிலையில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் ஜப்பான் கடற்கரை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது சொகுசு கப்பல் ஒன்று. டையமண்ட் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் அந்த கப்பலில் உள்ளவர்களில் 66 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. மொத்தம் உள்ள 3700 நபர்களில் 160 இந்தியர்களும் உள்ளனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பினாய் குமார் சர்க்கார் சமூக வலைதளத்தில் தங்களை காப்பாற்றுமாறு இந்திய அரசுக்கு தாழ்மையான வேண்டுகோளை வைத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் “ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசு, இந்த கப்பலில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற உதவுமாறும், அவருடன் வேலை பார்க்கும் ஐந்து இந்தியர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை” என்றும் இந்தியில் பேசியுள்ளார்.

மேலும் பினய் “எவ்வளவு சீக்கிரம் எங்களை காப்பற்ற முடியுமோ தயவு செய்து காப்பாற்றுங்கள். எங்களுக்கு ஏதாவது ஆன பின்பு என்ன செய்ய முடியும். இந்திய அரசு தயவு செய்து எங்களை பத்திரமாக காப்பாற்றுங்கள் என்றும் மோடி எங்களுக்கு உதவுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பானின் யோகோஹாமாவில் இருந்து ஜனவரி மாதம் 20ம் தேதி தன்னுடைய பயணத்தை துவங்கியது. ஹாங்காங்கில் ஜனவரி 25ம் தேதி ஒரு பயணி தரையிரங்கினார். பிப்ரவரி 2ம் தேதி, ஹாங்காங்கில் தரையிரங்கிய பயணிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான தகவல்கள் கப்பலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 3700க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் உள்ளனர். கடந்த திங்கள் கிழமை யோகோஹாமா கடற்கரையில் நிறுத்தப்பட்ட அந்த கப்பலில் இதுவரை 356 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 130 நபர்களுக்கு இந்த கொரோனா தொற்று இருப்ப்பதாக ஜப்பானின் ஊடகங்களில் இருந்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிலையமான WHO, ஜப்பான் அரசிடம் அம்மக்களை காப்பாற்ற கோரிக்கை வைத்துள்ளது.

Japan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment