இந்தியாவில், கடந்த திங்கள்கிழமை வரை கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1200-ஐ தாண்டியுள்ளது. கேரளாவில் அதிகமான கொரோனா தொற்று எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டாலும், தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்கள் அனைவராலும் உற்றுக் கவனிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 67 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட், கொரோனா வைரஸ் சோதனை செய்யும் சிறிய வடிவிலான போர்டபிள் சாதனத்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ) ஒப்புதலைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், குறைந்தது ஐந்து நிமிடங்களில் கொவிட்-19 குறித்த சோதனையை செய்ய முடியும்.
உலகெங்கிலும் உள்ள அதிகமான இடங்களில் வாழும் மக்களுக்கு இந்த டெஸ்ட் சாதனத்தை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும்" அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் எட்டு பேர் உயிர் இழந்துள்ளனர். ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச இறப்பு இதுவாகும். இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 151 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 1,024 ஐத் தொட்டுள்ளது.
இந்தியாவில், மார்ச் 27-ம் தேதி வரை எற்பட்ட 19 இறப்புகளில்,14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதில் 12 பேருக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஆஸ்துமா போன்ற நோயுற்ற நிலைமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதில், ஏழு பேருக்கு வெளிநாட்டு பயண வரலாறு இருந்தது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை நிர்வகிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய அரசாங்கம் 11 அதிகாரம் பெற்ற குழுக்களை அமைத்துள்ளது. மருத்துவ அவசரநிலை மேலாண்மை, மருத்துவமனைகள் , தனிமைப்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், முக்கியமான மருத்துவ உபகரணங்கள், மனித வள மேலாண்மை, தனியார் துறையுடன் ஒருங்கிணைப்பு, பொருளாதார நடவடிக்கைகள், தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், 21 எல்லை பூட்டுதல் குறித்த குறைகள் கேட்டறிதல், மூலோபாய சிக்கல்கள் போன்றவைகள் இதில் அடங்கும்.
Live Blog
Coronavirus Updates: கொரோனா வைரஸ் தொற்று குறித்த அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். 1,500 பேரில் 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிப்பு. அதில் 16 பேருக்கு கொரோனா உறுதி
அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Zone 11 - வளசரவாக்கம், ஆர்காட் ரோடு, மதுரவாயல், நெர்குன்றம், போரூர்
அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Zone 11 - வளசரவாக்கம், ஆர்காட் ரோடு, மதுரவாயல், நெர்குன்றம், போரூர்#COVID19 | #Chennai | @chennaicorp pic.twitter.com/Qc3u0kQobv
— Thanthi TV (@ThanthiTV) March 30, 2020
கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கி இருக்கும் நிலையில், இது தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்ற ஒரு கலைஞனின் கற்பனை ஓவியம், ரசிக்கும் வகையில் இருந்தாலும்,அது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அணு குண்டை விட மிக வேகமாக பரவி வரும் தொற்று வியாதியான கொரோனா வைரஸ்சால், பேரண்டத்தை கட்டியாண்ட மனிதன் இன்று அச்சத்தில் உறைந்திருக்கிறான். உலகையே, விஞ்ஞான வளர்ச்சியால் அடக்கி, தனது உள்ளங்கையில் வைத்திருந்த மனிதனை, வீட்டை விட்டு வெளியேற வரமுடியாமல் முடக்கி போட்டிருக்கிறது கொரோனா வைரஸ்
மனிதர்களுக்கு பின் உலகம் - கற்பனை ஓவியம்#COVID19https://t.co/1qjZQFcvL7
— Thanthi TV (@ThanthiTV) March 30, 2020
'ஒரே நாடு ஒரே ரேசன்' திட்ட அமலாக்கம் ஒத்தி வைக்கப்படுவதாக, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்படுவதாக இருந்தது. இதற்காக, முதல்கட்டமாக, பரிசோதனை முயற்சியும் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இந்த திட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக, திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் பணியாற்றிய பெண்ணிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சொந்த ஊரான அரியலூருக்கு சென்ற அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது மருத்துவமனையின் ஊழியர்களையும் வைத்துக் ஒகண்டு அவர் செய்த டிக்டாக் வீடியோவால் ஏற்கனவே மூன்று பேருக்கு வேலை பறிபோனது. இந்த நிலையிலும் மீண்டும் கொரோனா பாதித்த பெண் டிக்-டாக் வீடியோவை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
"ரணகளத்திலும் கிளுகிளுப்பு" கொரோனாவால் பாதித்த பெண்ணின் டிக்டாக் வீடியோவால் பரபரப்பு#COVID19 | #TIKTOKhttps://t.co/0Xnl78bO49
— Thanthi TV (@ThanthiTV) March 30, 2020
"அவசியமின்றி வெளியே வந்தால் நீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய முடியாது. மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். கடைக்கோடி மனிதனும் இந்த தடை உத்தரவால் பாதிக்கப்படக் கூடாது" என்று காவல்துறை கடுமையாக நடந்து கொள்வதாக தொடரப்பட்ட வழக்கில், வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கிருமி நாசினி மூலம் வீட்டின் தரைகளை சுத்தமாக்க சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டின் தரை, கதவு தாழ்ப்பாள், டிவி, ரிமோட், செல்போன் மற்றும் வாகன கைப்பிடியை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் கிருமி நாசினியால் வீட்டை சுத்தப்படுத்தினால் கொரோனா பரவலை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா : மக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள்#COVID19 | #StayHome | #coronavirus pic.twitter.com/Btv5k36oL0
— Thanthi TV (@ThanthiTV) March 30, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். தமது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்தாக அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ”வைரஸ் பாதிப்பு அச்சத்தை விட வெளிமாநில தொழிலாளர்கள், மனதில் ஏற்பட்ட அச்சம் அதிகமாக உள்ளது” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கோவாவின் மாலிம் ஜெட்டி பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 200 கூலி தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். தமிழக அரசு தலையிட்டு தங்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? என நடிகர் கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 30, 2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லிருந்து 67 ஆக உயர்ந்துள்ளது.ஒருவர் மட்டுமே இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.பாதிப்படைந்த 5 பேர் இதுவரை குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் 43,537 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சோதனை செய்யப்பட்ட 121 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்காக பிரத்யேகமாக 25 இலட்சம் என்-95 முக்கவசங்கள் வாங்க பட உள்ளது. தமிழகத்தில் மேலும் 3 கொரோனா ஆய்வு மையங்கள் செயல்பட மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும். 2500 வென்டிலேட்டர்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் யாரும் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த எண்ணிக்கை 67-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில்,சமூக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அரசும், பொது மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
#WATCH West Bengal Minister Swapan Debnath wearing protective gear urges citizens to stay at home during lockdown to prevent the spread of #Coronavirus, at Lord Curzon Gate area of Burdwan (29.03) pic.twitter.com/FGPu9u8jmg
— ANI (@ANI) March 30, 2020
கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கும் நடவடிக்கையாக , இந்த 21 நாட்கள் ஊரடங்கின் போது, மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்குமாறு மேற்கு வங்க அமைச்சர் ஸ்வபன் டெப்நாத்,நூதன முறையில் கேட்டுக் கொண்டார்.
During yesterday’s #MannKiBaat, someone asked me about my fitness routine during this time. Hence, thought of sharing these Yoga videos. I hope you also begin practising Yoga regularly. https://t.co/Ptzxb7R8dN
— Narendra Modi (@narendramodi) March 30, 2020
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ' தான் யோகா செய்யும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டார். மேலும், இந்த 21 நாட்கள் எல்லைப் பூட்டுதலின் போது யோகா பயற்சியை மேற்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தினார். மக்கள் பின்தொடரவும் எளிதாக பயிற்சி செய்யவும்,வீடியோக்கள் இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் கிடைக்கின்றன.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்களின் திருமணம், எதிர்பாராத மரணம் உள்ளிட்ட அவசர நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் செல்வதற்காக, சென்னை காவல்துறை, சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்தது இந்நிலையில், இந்த அவசர பயணத்துக்கு வந்த 8 ஆயிரம் வின்னபங்களில்,111பேருக்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
1.நீங்கள் குடியிருக்கும் வீட்டின்/கட்டிடத்தின் உரிமையாளர் உங்களை வெளியேற்ற முயற்சி செய்தால், உள்ளூர் பஞ்சாயத்தில்/முனிசிப்பாலிடியில் புகார் தெரிவிக்கலாம். கொரானா பாதிப்பு முடியும் வரையில், அவர்களால் உங்களை வெளியேற்ற முடியாது.
2.உணவு பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் உங்கள் உள்ளூர் பஞ்சாயத்தில், மக்கள் உணவகங்கள் மூலம் 20 ரூபாய்க்கு உணவு தயார் செய்து தரப்படுகிறது. உங்கள் பகுதி வார்டு மெம்பரை தொடர்பு கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார்.
3. அங்கே உணவு வாங்க பணம் இல்லையென்றாலும் உங்கள் வார்டு மெம்பரை தொடர்பு கொள்ளுங்கள், அவர் உங்களுக்கு உணவை/உணவு பொருட்களை இலவசமாக பெற்றுத்தருவார்.
கேரளாவில் மதுப்பழக்கம் தீவிரமாக உள்ளவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி தினசரி மதுபானம் தர கேரளா முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக மது விற்பனையை முழவதுமாக தடை செய்தது. இதனால், பலர் தற்கொலை முயற்சிக்கு தூண்டப்படுவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .
கேரளாவில் மது விற்பணை அடியோடு தடை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் எட்டு பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் எட்டு பேர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி பாரத பிரதமர் அறிவித்த 21 நாட்கள் லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என்ற தகவலை இந்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா மறுத்துள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனிமைப்படுத்தல் குறித்த அறிவுரையை ஏப்ரல் மாத இறுதி வரை நீட்டித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 100,000 க்கும் மேற்பட்ட இறக்கலாம் என்று அந்நாட்டின் மருத்துவ நிபுணர் அந்தோணி ஃபாசி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவல் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2000க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்
ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் தெலுங்கான மாநிலம் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலாமாகும் என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். அந்த மாநிலத்தில் இதுநாள் வரையில் 70 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறப்பு எண்ணிக்கை- இத்தாலி:10,023 ஸ்பெயின்:5,982 சீனா:3,295; ஈரான்: 2,517; பிரான்ஸ்: 2,314; அமெரிக்கா :2,227; இங்கிலாந்து: 1,028
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்கா :124,697; இத்தாலி: 92,472; சீனா: 81,439; ஸ்பெயின்: 78,797; ஜெர்மனி: 58,137; பிரான்ஸ்: 37,611; ஈரான்: 35,408; இங்கிலாந்து : 17,136; சுவிட்சர்லாந்து: 14,352
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 4 பேர் ஒரே குடும்ப உறுப்பினர்கள். ஈரோட்டை சேர்ந்த இவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டில் இருந்து திரும்பிய 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights