Covid-19 Cases Update: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் 95,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3.5 லட்சம் பேர் குணமடைந்திருப்பதால், மக்களிடையே நம்பிக்கை துளிர் விடுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வைரஸின் தன்மையைப் பொறுத்தே ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-ஆக உயர்ந்துள்ளது. சுமார் 60000 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ரஜினி படத்தில் லாரன்ஸ்: கொரோனாவுக்கு 3 கோடி நிவாரணம்!
பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வெழுவது முக்கியம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,412-ஆக உயர்ந்துள்ளது. இதன் பாதிப்பு காரணமாக 199 பேர் உயிரிழந்துள்ளனர். 504 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவின் பாதிப்பை கருத்தில் கொண்டு ஒரிஷாவில், ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: மாவட்டங்களில் நிலைமை எப்படி?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.
Live Blog
Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
சென்னையில் கொரோனா தொற்று - மண்டலம் வாரியாக #CoronaVirus | #Covid19 | #CoronaUpdates | #Chennai | #StayHomeStaySafe pic.twitter.com/Dba3phk3zB
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 10, 2020
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நோய்த்தொற்றினால் இழப்பு ஏற்பட்டால் நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாதிக்கப்படுவோருக்கு ரூ.2 முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் - முதலமைச்சர் நாரயணசாமி
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு முதலியார் தெருவில் மாநகர துப்பரவு பணியாளர்கள் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை பாராட்டும் விதமாக, அப்பகுதி மக்கள், தாம்பூலத் தட்டில் பூ, பழம், பணம் வைத்து அவர்களை வரவேற்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 33 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில், சீனாவில் 63 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளி கண்டறியப்பட்டது ஜனவரி 31. ஆனால் இது குறித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சக கூட்டம் கூட்டப்பட்டது ஜனவரி 8.
— H Raja (@HRajaBJP) April 10, 2020
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5-லிருந்து 8-ஆக உயர்ந்துள்ளது. குழுவாக ஓரிடத்துக்கு சென்று புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான அறையை ஒதுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். வீட்டில் குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமை படுத்தப்பட்டவருக்கு பராமரிப்பு பணி செய்ய வேண்டும். தனிமை படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights