Corona Updates: தமிழகத்தில் 911; இந்தியாவில் 6039; உலகளவில் 1,639,763 கொரோனா பாதிப்புகள்

Coronavirus Latest Updates: கொரோனா குறித்த தகவல்களை உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Covid-19 Cases Update: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் 95,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3.5 லட்சம் பேர் குணமடைந்திருப்பதால், மக்களிடையே நம்பிக்கை துளிர் விடுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வைரஸின் தன்மையைப் பொறுத்தே ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-ஆக உயர்ந்துள்ளது. சுமார் 60000 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ரஜினி படத்தில் லாரன்ஸ்: கொரோனாவுக்கு 3 கோடி நிவாரணம்!

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வெழுவது முக்கியம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,412-ஆக உயர்ந்துள்ளது. இதன் பாதிப்பு காரணமாக 199 பேர் உயிரிழந்துள்ளனர். 504 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவின் பாதிப்பை கருத்தில் கொண்டு ஒரிஷாவில், ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: மாவட்டங்களில் நிலைமை எப்படி?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Live Blog

Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.


22:30 (IST)10 Apr 2020

போதுமான அளவு சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு போதுமான அளவு உள்ளது; மக்கள் அதிகமாக புக் செய்யவேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

22:27 (IST)10 Apr 2020

வெளியே சுற்றிய வாலிபர்கள்

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வாலிபர்களின் பைக்கை பிடித்த காவலர், பைக்குடன் சேர்த்து தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.

22:16 (IST)10 Apr 2020

ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் பேட்டியளிக்கும், அலுவலக வளாகத்திலேயே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21:46 (IST)10 Apr 2020

உலகளவில் கொரோனா….

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை – 1,639,763

உயிரிழந்தோர் எண்ணிக்கை – 100,156

உடல் நலம் பெற்றோர் – 369,017

21:41 (IST)10 Apr 2020

சென்னையில் கொரோனா தொற்று – மண்டலம் வாரியாக

21:40 (IST)10 Apr 2020

பிடித்தமின்றி ஊதியம்

அனைத்து கல்லூரிகளும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை எவ்வித பிடித்தமுமின்றி முறையாக வழங்க வேண்டும் – ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவு

21:03 (IST)10 Apr 2020

70 பேருக்கு இன்று கொரோனா உறுதி

குஜராத்தில் புதிதாக 70 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. 19 உயிரிழப்புகள் உட்பட குஜராத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 378ஆக உயர்வு.

33 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல்.

21:02 (IST)10 Apr 2020

விற்பனைக் கூடங்கள் வழக்கம் போல் செயல்படும்

கடலூர் மாவட்டத்தில் ஏப்.15 ஆம் தேதி முதல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வழக்கம் போல் செயல்படும் – மாவட்ட நிர்வாகம்

* மணிலா, உளுந்து உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம் என அறிவிப்பு

21:02 (IST)10 Apr 2020

இறைச்சிக் கடைகள் செயல்படாது

‘சேலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்படாது’

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்படத் தடை

– நிர்வாகம்

21:02 (IST)10 Apr 2020

இழப்பு ஏற்பட்டால் நிவாரணமாக ரூ.10 லட்சம்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நோய்த்தொற்றினால் இழப்பு ஏற்பட்டால் நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாதிக்கப்படுவோருக்கு ரூ.2 முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் – முதலமைச்சர் நாரயணசாமி

20:24 (IST)10 Apr 2020

ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள்

ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு

* துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை, மிளகு சீரகம் உள்பட 19 வகை மளிகைப்பொருட்கள் ரூ. 500-க்கு விற்பனை

19:59 (IST)10 Apr 2020

காவல் உதவி ஆய்வாளர் தாக்கும் வீடியோ

ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவரை அப்பகுதி காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

19:30 (IST)10 Apr 2020

மாவட்டம் வாரியாக…

1000த்தை நெருங்கும் தமிழகம். 172 நோயாளிகளுடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. இன்று புதிதாக 77 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

19:27 (IST)10 Apr 2020

கோவையில் புதிதாக 26 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று அதிகளவாக கோவையில் 26 பேருக்கும், செங்கல்பட்டில் 12 பேருக்கும், ராணிப்பேட்டை, சென்னையில் தலா 9 பேருக்கும், திண்டுக்கல்லில் 8 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

19:06 (IST)10 Apr 2020

10 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு

மும்பையில் இன்று ஒரே நாளில் 10 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு.

218 பேருக்கு கொரோனா பாதிப்பு; இதுவரை மும்பையில் 993 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது.

18:47 (IST)10 Apr 2020

5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா பரவி உள்ளது

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியான 77 பேரும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இதனால் அவர்கள் மூலம் வேறு யாருக்கும் பரவ வாய்ப்பில்லை – தலைமை செயலாளர் சண்முகம்

18:27 (IST)10 Apr 2020

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது – தலைமை செயலாளர்

18:13 (IST)10 Apr 2020

496 ஐடி ஊழியர்கள் பணி நீக்கம்?

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் பெங்களூரில் 496 ஐடி ஊழியர்களை சில நிறுவனங்கள் வேலையைவிட்டு நீக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது

18:02 (IST)10 Apr 2020

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

தூத்துக்குடியில் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி

தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

17:46 (IST)10 Apr 2020

2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவு

கொரோனா ஊரடங்கின் போது தெருவில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து

* 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

17:26 (IST)10 Apr 2020

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு முதலியார் தெருவில் மாநகர துப்பரவு பணியாளர்கள் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை பாராட்டும் விதமாக, அப்பகுதி மக்கள், தாம்பூலத் தட்டில் பூ, பழம், பணம் வைத்து அவர்களை வரவேற்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

17:15 (IST)10 Apr 2020

மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு

பஞ்சாப் மாநிலத்தில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

* முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவிப்பு

* பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 101 பேருக்கு கொரோனா பாதிப்பு, 8 பேர் பலி

* ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது

17:14 (IST)10 Apr 2020

அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே…

திருப்பத்தூர்: ஆம்பூரில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க ஆட்சியர் ஆணை.

ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை

17:03 (IST)10 Apr 2020

தேர்வுகள் ஒத்திவைப்பு

மதுரை காமராஜர் பல்கலை. மற்றும் 97 உறுப்பு கல்லூரிகளிலும் தேதி குறிப்பிடப்படாமல் தேர்வுகள் ஒத்திவைப்பு – பல்கலை. நிர்வாகம்

17:02 (IST)10 Apr 2020

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் கொரோனா

பீகார் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16:43 (IST)10 Apr 2020

பெரியார் பல்கலை., தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக சேலம் பெரியார் பல்கலை. பருவத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு – துணைவேந்தர் குழந்தைவேலு

16:42 (IST)10 Apr 2020

3.28 கோடி மாத்திரைகள்

இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன. 16002 ரத்த மாதிரி சோதனைகளில், 0.2 சதவீதத்தினருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது

– மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

16:41 (IST)10 Apr 2020

திருவிழாக்களுக்கு அனுமதி இல்லை

ஊர்வலங்கள், திருவிழாக்கள் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

16:41 (IST)10 Apr 2020

1,973 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் இதுவரை 1,973 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி

கொரோனா அறிகுறிகளுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்

– மாநகராட்சி

16:22 (IST)10 Apr 2020

24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 33 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. 

16:07 (IST)10 Apr 2020

எஸ்மா சட்டம்

கொரோனா பரவலை திறம்பட கையாளும் வகையில் திரிபுரா மாநிலத்தில் அத்தியாவசிய சேவைகள் மேலாண்மை சட்டம் (எஸ்மா) அமல்படுத்தப்பட்டுள்ளது

16:06 (IST)10 Apr 2020

கால அவகாசம் நீட்டிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

15:53 (IST)10 Apr 2020

கொரோனாவை தடுக்க இன்னும் 3 வாரங்கள் தேவை

கொரோனாவை தவிர்க்க இன்னும் 3 வாரங்கள் தேவை என்று மாநிலங்களிடமிருந்து தகவல் வந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

15:15 (IST)10 Apr 2020

காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை. ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய – மாநில அரசுகள் மீது உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

14:59 (IST)10 Apr 2020

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது

13:55 (IST)10 Apr 2020

சென்னையிலிருந்து பறந்த 3 சிறப்பு விமானங்கள்

சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் சிங்கப்பூருக்கு 498 பயணிகளுடன் 3 சிறப்பு விமானங்கள் புறப்பட்டது. இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள் மீண்டும் அவர்களது நாட்டிற்கு இதன்மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 

13:30 (IST)10 Apr 2020

கொரோனாவை வென்ற ஈரோட்டு இளைஞர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த இளைஞர் குணமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளைஞர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

13:04 (IST)10 Apr 2020

சீனாவில் மீண்டும் கொரோனா?

வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில், சீனாவில் 63 பேருக்கு புதிதாக  கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

12:38 (IST)10 Apr 2020

முதல்வர் ஆலோசனை

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

12:10 (IST)10 Apr 2020

ஹெச்.ராஜா ட்வீட்

12:01 (IST)10 Apr 2020

தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் வழக்குகள்

தமிழகம் முழுவதும் தடை உத்தரவை மீறியதாக இதுவரை 1.25 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 45 லட்சத்து 13 ஆயிரத்து 544 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

11:45 (IST)10 Apr 2020

புதுச்சேரியில் மேலும் இருவருக்கு கொரோனா

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5-லிருந்து 8-ஆக உயர்ந்துள்ளது. குழுவாக ஓரிடத்துக்கு சென்று புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

11:29 (IST)10 Apr 2020

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்

கொரோனா நோய் தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

11:00 (IST)10 Apr 2020

வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவுரை

தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான அறையை ஒதுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். வீட்டில் குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமை படுத்தப்பட்டவருக்கு பராமரிப்பு பணி செய்ய வேண்டும். தனிமை படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. 

10:40 (IST)10 Apr 2020

மளிகைக்கடைக்காரருக்கு கொரோனா தொற்று

சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடைக்காரர் ஒருவர் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கடைக்கு சென்றவர்கள் குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

10:23 (IST)10 Apr 2020

கொரோனாவுக்கு அதிக உயிர்களை பலி கொடுத்த நாடுகளின் விபரம்

இத்தாலி: 18,279

யுஎஸ்: 16,374

ஸ்பெயின்: 15,238

பிரான்ஸ்: 12,210

யுகே: 7,978

ஈரான்: 4,110

சீனா: 3,335

பெல்ஜியம்: 2,523

ஜெர்மனி: 2,451

10:18 (IST)10 Apr 2020

தாராவியில் மேலும் இருவருக்கு கொரோனா

மகாராஷ்டிரா, தாராவி பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதில் 2 பேர் குழுவாக ஓரிடத்துக்கு சென்றவர்கள். இதன் மூலம் தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. 

10:07 (IST)10 Apr 2020

12 மணி நேர நிலவரம்

இந்தியா முழுவதும் 12 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 3 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர். 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது – அதில் 50 ஆயிரம் கருவிகள் இன்று வந்துவிடும். 3,370 செயற்கை சுவாச கருவிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு 137 தனியார் மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus live updates covid 19 in india tamil nadu social distancing

Next Story
டிரம்ப் இப்போ பேசுகிறார்: இந்தியா ஓசையின்றி ஒதுக்கி வைத்த WHO ஆலோசனைகள்delhi coronavirus, coronavirus migrant crisis, kanpur plague 1990, ganjam 1989, kapur riots 1990, coronavirus india lockdown, coronavirus regualtions, indian express news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com