Advertisment

Corona Updates : மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஏப்ரல் 20ம் தேதிக்கு மேல் எந்தெந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தளர்த்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி, இன்று ( ஏப்ரல் 16ம் தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

Covid-19 Cases Update: கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஏப்ரல் 20ம் தேதிக்கு மேல் எந்தெந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தளர்த்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி, இன்று ( ஏப்ரல் 16ம் தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisment

நாடு முழுதும், அமலில் இருக்கும் ஊரடங்கை, இரண்டாவது கட்டமாக, மே, 3 வரை நீட்டிப்பதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 'மத்திய அரசின், 2020- - 21 பட்ஜெட்டில், 30 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. நாட்டு மக்களுடைய இந்த பணத்தில், 65 ஆயிரம் கோடி ரூபாயை, மக்களின் பசியை போக்க பிரதமர் தரமாட்டாரா...' என, சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம், தர்மம், 21 நாட்களுக்கு பிறகும், பிரதமருக்கு புரியவில்லையா... மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை, எப்போது ஆற்றப் போகிறீர்கள் என்பது தான், நான் இன்று, உங்கள் முன் வைக்க விரும்பும் கேள்வி. இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொரோனா கோரத்திலும் ஜோராக நடக்கும் குழந்தை திருமணங்கள் - அதிர்ச்சித்தகவல்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

நாடு முழுதும், 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, ஊரடங்கை, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நீட்டிப்பதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், வரும், 20ம் தேதிக்குப் பின், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாகவும், பிரதமர் அறிவித்துள்ளார். ஊரடங்கில் பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் குறித்த விரிவான அறிக்கை, வெளியிடப்பட உள்ளது

ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்கு காங்கிரஸ் உதவும்; இந்தச் சிக்கலில் இருந்து, நாடு விரைவில் மீண்டு, வெற்றி பெறும்,'' என, காங்கிரஸ் தலைவர், சோனியா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்














Highlights

    22:19 (IST)15 Apr 2020

    காய்கறிகள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு வர வேண்டாம் - மார்க்கெட் நிர்வாகம் அறிவிப்பு

    சென்னை மக்கள், தனிநபர்கள் காய்கறிகள், பழங்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு நேரில் வர வேண்டாம் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், காய்கறிகள், பழங்கள் வாங்க நடமாடும் காய்கறி விற்பனை வாகன சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    21:02 (IST)15 Apr 2020

    சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

    கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    20:18 (IST)15 Apr 2020

    மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    முதல்வர் பழனிசாமி நாளை காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    18:22 (IST)15 Apr 2020

    தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரொனா உறுதி; மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்வு - விஜயபாஸ்கர்

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் கொரோனவில் இருந்து குணமடைந்துள்ளனர்.”என்று கூறினார்.

    17:24 (IST)15 Apr 2020

    170 மாவட்டங்கள், கோவிட்- 19 ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிப்பு

    நேற்று வரையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 170 மாவட்டங்கள் தொற்றுப் பரவல் அதிகம் உள்ள மாவட்டங்கள் ஆகவும், தொற்று உள்ளவர்கள் ஒரு சிலர் இருந்தபோதிலும் தொற்று அதிகமாக பரவாத மாவட்டங்களாக 270 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

    16:21 (IST)15 Apr 2020

    3-மாத குழந்தையை தாலாட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்களின்

    #WATCH Chhattisgarh: The nursing staff at AIIMS (All India Institute Of Medical Sciences) Raipur taking care of a 3-month-old daughter of a woman who has tested positive for COVID-19. (Video source: AIIMS Raipur) pic.twitter.com/d4K4LlVdpE— ANI (@ANI) April 15, 2020கோவிட்  -19 தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மூன்று மாத மகளை, ரெய்ப்பூரில்  எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் (அகில இந்திய மருத்துவ அறிவியல்) அன்பை பகிர்ந்து வரும் காட்சி.... 

    16:13 (IST)15 Apr 2020

    முதலமைச்சர் நிவாரண நிதிக்கு,134 கோடியே 63 லட்சம் ரூபாய் நன்கொடை

    கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை சுமார் 134 கோடியே 63 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது  

    15:41 (IST)15 Apr 2020

    அமெரிக்காவின் முடிவு வருத்தமளிக்கிறது: சீனா

    உலக சுகாதார அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முடிவு குறித்து "வருத்தமடைவதாக" சீனா தெரிவித்துள்ளது. இதுபோன்ற, ஒரு நெருக்கடி காலத்தில், அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றுமாறும்  வலியுறுத்தியுள்ளது.ஜெனீவாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலக சுகாதார அமைப்பு, தொற்றுநோயை "சரியாக  நிர்வகிக்கவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியதோடி ,அமைப்பிறகான நிதியை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தார். 

    15:33 (IST)15 Apr 2020

    ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு – பிசிசிஐ

    இந்தியாவில் நாடு தழுவிய பொது முடக்கம்  மே 3 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கோவிட்- 19 பரவல் காரணமாக ஏப்ரல் 15 (இன்று  வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பதுவதாக அறிவிக்கப்பட்டது   

    14:10 (IST)15 Apr 2020

    வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: உள்துறை அமைச்சகம் கடிதம்

    பொது முடக்க காலத்தில், திருத்தி அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

    14:06 (IST)15 Apr 2020

    தென்மேற்கு பருவமழை வழக்கம்போல இருக்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கம்போல இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    13:25 (IST)15 Apr 2020

    பாகிஸ்தானிலும் ஊரடங்கு நீட்டிப்பு

    அண்டை நாடான பாகிஸ்தானிலும் ஊரடங்கு உத்தரவு, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

    13:01 (IST)15 Apr 2020

    டாடா நிறுவனம் உதவி

    தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் கருவிகளை  டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.  ரூ.8 கோடி மதிப்பிலான 40,032 கருவிகள் தமிழக அரசிடம் வழங்கப்பட்டன . கொரோனா தொற்றை கண்டுபிடிக்க பிசிஆர் கிட் கருவிகள் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

    12:46 (IST)15 Apr 2020

    முக கவசம் இன்றி செல்லும் பாதசாரிகளுக்கும் அபராதம்

    சென்னையில் மக்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும் பாதசாரிகளுக்கு 100 ரூபாய் அபராதம். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்  என  சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    12:07 (IST)15 Apr 2020

    வீட்டிலேயே தொழுகை

    மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்று ஜமா அத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.

    11:44 (IST)15 Apr 2020

    கொரோனா - தாராவி பகுதியில் 60 பேர் பாதிப்பு

    தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவி குடிசைப்பகுதியில்,  கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. .. இதுவரை 7 பேர் பலியடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

    11:24 (IST)15 Apr 2020

    டிஜிபி திரிபாதி பாராட்டு

    கரோனா பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை டிஜிபி ஜே.கே.திரிபாதி பாராட்டியுள்ளார். கரோனா நோய் தொற்றை தடுக்கும் பணியில் காவல்துறையின் பணியின் வடிவம் முற்றிலும் மாறிவிட்டது. கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தின நாம், தற்போது கூட்டம் கூடாமல் தடுக்கவும், போக்குவரத்தை சரிசெய்த நாம், தற்போது போக்குவரத்து நடக்காதவகையிலும் பணி செய்து வருகிறோம்.தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் வருவாய் துறை, உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து காவலர்கள் பணிபுரிய வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சத்தை காவல்துறையினர் சரிசெய்ய வேண்டும். மன அழுத்தம், குடும்ப வன்முறை, தற்கொலை வழக்குகள் குறித்து கவனமுடன் உடனடியாக செயல்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    10:55 (IST)15 Apr 2020

    கொரோனா பாதிப்பு: உலகளவில் 20 லட்சத்தை தாண்டியது

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பால் 1.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4.84 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்

    10:37 (IST)15 Apr 2020

    எதற்கு அனுமதி

    நகரங்களுக்கு வெளியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள், மீன் இறைச்சிக்கடைகள் உள்ளிட்டவைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    10:13 (IST)15 Apr 2020

    ஊரடங்கு நீட்டிப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்ட்டுள்ள நிலையில், புதிய  வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்  மே 3 வரை அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து மக்கள் கூடும் அனைத்து இடங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்க மே 3 வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    09:48 (IST)15 Apr 2020

    உலக சுகாதார மையத்திற்கு தற்காலிமாக நிதி நிறுத்தம் – டிரம்ப் அதிரடி

    உலக சுகாதார மையத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளும் நிதியுதவி அளித்து வருகின்றன. அமெரிக்கா மட்டும் கடந்த ஆண்டில் 400 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி வழங்கி உள்ளது.  இந்நிலையில் உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் நிதி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்

    09:30 (IST)15 Apr 2020

    மகாராஷ்டிராவில் 2,687 பேருக்கு கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிராவில் 2,687 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 178 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 259 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    09:23 (IST)15 Apr 2020

    சர்வதேச அளவில் கொரோனாவின் தாண்டவம்

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை

    அமெரிக்கா - 25,350

    இத்தாலி - 21,067

    ஸ்பெயின் -18,056

    பிரான்ஸ் - 15,729

    பிரிட்டன் - 12,107

    ஈரான் -4,683

    பெல்ஜியம் - 4,157

    சீனா -3,341

    09:13 (IST)15 Apr 2020

    கொரோனா பாதிப்பு 11,439 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 10,815லிருந்து 11,439ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 353லிருந்து 377ஆக அதிகரித்து்ளது.  குணமடைந்தோர் எண்ணிக்கை 1,190லிருந்து 1,306ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Corona latest news updates : நாட்டில் தடை மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து,17.81 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல், பொருளாதார இழப்பு நேரிடும் என, பிரிட்டனைச் சேர்ந்த தரகு நிறுவனமான, பார்க்லேஸ் தெரிவித்து உள்ளது. மேலும், நடப்பு, 2020ம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி, பூஜ்ஜியமாக இருக்கும். நிதியாண்டு கணக்கின்படி பார்த்தால், வளர்ச்சி, 0.8 சதவீதமாக, 2021ல் இருக்கும்.இதற்கு முன், 2020ம் ஆண்டில், வளர்ச்சி, 2.5 சதவீதமாக இருக்கும் என்றும், நடப்பு நிதியாண்டில், 3.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது.ஆனால், தற்போதைய நிலவரப்படி, 2020ல், பூஜ்ஜியமாகவும், நடப்பு நிதியாண்டில், 0.8 சதவீதமாகவும் இருக்கும்.இவ்வாறு, பார்க்லேஸ் தெரிவித்துள்ளது.

    கொரோனா பரவலை தடுக்க, வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும், முகக் கவசம் அணிய வேண்டும்; மீறினால், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்' என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை நகரில், முகக் கவசம் அணியாதவர்கள் மீது, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இது, முகக் கவசம் அணியாமல் நடந்து செல்பவர்களுக்கும் பொருந்தும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Tamil Nadu Corona Virus Narendra Modi Lockdown
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment