Advertisment

மே 3-க்கு பிறகு புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை என்ன? மாநில முதல்வர்கள் கேள்வி

மே 3க்குப் பிறகு ஏதேனும் ஒரு வழியில் ஊரடங்கை நீட்டிப்பதையே மாநிலங்கள் விரும்புகின்றன. இந்த விசயத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மே 3-க்கு பிறகு புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை என்ன? மாநில முதல்வர்கள் கேள்வி

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று சூழ்நிலையில் மாறி வரும் சூழ்நிலைகள் பற்றியும், சூழ்நிலையைக் கையாள்வது பற்றியும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.  கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதவர்கள், வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி  எடுத்துக் கூறினர்.

Advertisment

சில கட்டுப்பாடுகளை முன் அறிவிப்பின்றி தளர்த்துவதன் மூலம், குழப்பமான சூழலை உருவாக்குவதாக மேற்கு வங்கம் குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான  புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் பீகார், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்கள், மக்களின் நடமாட்டம் குறித்து  தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டன.

பொருளாதார மீட்பு நிதியுதவி குறித்த குறிப்பிட்ட கேள்விக்கு  பிரதமர் பதிலளிக்கவில்லை என்று ஒரு மாநிலத்தின் முதல்வர் தெரிவித்தார்.

நேற்றைய கலந்துரையாடலில், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை  நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டதாக புதுவை முதல்வர் வி. நாராயணசாமி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பிரச்சினையை சிறப்பாக கையாண்டதற்கு,  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்டை மோடி பாராட்டியதாகவும்  தெரிவித்தார்.

ராஜஸ்தான் கோட்டா நகர் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையில் மத்திய அரசின் அறிவுரைகளை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நாடினார். மத்திய அரசின் நெறிமுறையின்றி கோட்டாவில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்பது, பொது முடக்கத்தை மீறுவதாக அமைந்துவிடும் என்று தெரிவித்தார்.

 

மே 3ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப் படவேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த நிதிஷ் குமார், " நிபுணர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். மத்திய அரசின்  முடிவுகளை பீகார் மாநிலம் பின்பற்றும். மாநிலத்திற்குள் மக்கள் நுழையும் முன்பு தீவிர செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சர்வதேச எல்லைகளில் தீவிர கண்காணிப்பு இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பொருளாதார சவால்களை முறியடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது குறித்தும், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் மாநில முதல்வர்கள் கோரினார்.

மாநிலத்தில் பதினொன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாட் ஸ்போட் அல்லாத பகுதிகளில் ஊரடங்கை தொடர இருப்பதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்தார்.

பொருளாதார சவால்களை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க, அனைத்து மாநில பிரதிநிதிகளை உள்ளடிக்கிய  பொருளாதார மீட்பு பணிக்குழு விரைவில் அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கையை 7,500-ல் இருந்து 10,000 - மாக உயர்த்த தேவையான ஆர்.டி. பி.சி.ஆர் சாதனங்களை தமிழக முதல்வர் கே. எடப்பாடி.பழனிசாமி கோரினார். எவ்வாறாயினும், பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்த நிலைப்பாடு தமிழகத்தில் தெளிவாக இல்லை.

முடக்க நிலைகளில் தளர்வு பற்றி  பேசும் ஒரு சில மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்றாகும். அம்மாநில முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், மாநிலத்தின் 80% பகுதிகள் தொற்று பரவல்  இல்லாத பசுமை மண்டலமாக கருதப்படலாம் என்று தெரிவித்தார். பின்னர் தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய அவர், தடுப்பு மருந்துக்கு ஒரு ஆண்டு தேவைப்படுவதால், ஹெர்ட் நோயெதிர்ப்பை உருவாக்குவது தான்  ஒரே வழி"என்றும் தெரிவித்தார். எவ்வாறாயினும், மே-3 க்கு பிறகு  கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்பதை இன்னும் அவர் ஜெகன் தெளிவப்படுத்தவில்லை.

60% மக்களுக்கு கொரோனாவை அனுமதிக்க வேண்டுமா? ஹெர்ட் இம்யூனிட்டி சொல்வது என்ன?

மே 3-க்கு பிந்தைய செயல்பாடுகள் தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலை காத்திருப்பதாக மத்திய பிரதேசம் தெரிவித்தது. கையில் இருக்கும் ஒரே ஆயுதம் சமூக விலகல் என்பதால், சூழ்நிலைக்கு ஏற்ப பொது முடக்கத்தை நீட்டிப்பது அவசியம் என்று  தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

சுமார் 10-15 லட்சம் மக்களை தனிமைப்படுத்துதலுக்கான வசதிகளை உருவாக்குமாறு திங்களன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டபோதும், பிந்தைய  முடக்கநிலை தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்களை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  இதுவரை தெரிவிக்கவில்லை.  பிரயாகராஜில் சிக்கித் தவிக்கும் சுமார் 10,000 மாணவர்களை மீட்பதற்கான ஏற்பாடுகளையும் அம்மாநில அரசு தீவிரப்பட்டுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கிதவிக்கும் தனது மக்களை  அழைத்து வரும் நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலம் இல்லை என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றியதற்காக நாங்கள் தண்டிக்கப்படுகிறோம்.  சிக்கித் தவிக்கும் மாணவர்கள் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களை திரும்ப அழைத்து வருவதற்கான எங்களது விருப்பத்தை தொடர்ந்து வெளிபடுத்தி வந்தோம். இருப்பினும், மே 3 வரை மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை தடை செய்வதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. பிற மாநிலங்கள் உத்தரவுகளை மீறுகின்றன, நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம், ”என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடைகள் திறந்திருப்பது குறித்த உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு குறித்து பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி," ஒருபுறம்  கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சகம் பேசி வருகிறது,மறுபுறம்  நகர்ப்புறங்களில் அனைத்து தனித்து இயங்கிவரும் கடைகளும், குடியிருப்புகளுக்கு அருகிலிருக்கும் கடைகளும், குடியிருப்பு வளாகத்தில் உள்ள கடைகளும் திறந்து கொள்ள அனுமதியளிக்கிறது. கடைகள் திறக்கப்பட்டால் ஊரடங்கை எப்படி அமல்படுத்த முடியும். குழப்பமான சூழ்நிலையை  தவிர்ப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவித்தார்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment