இந்த காட்சியை காண 30 வருடங்கள் ஆனது! பஞ்சாப் மக்கள் மகிழ்ச்சி

மேலும் இந்நோயின் பரவலால் மக்கள் நடமாட்டம் குறைந்து காற்றுமாசுபாடு, ஒலிமாசுபாடு ஆகியவையும் குறைந்துள்ளது.

Coronavirus lockdown Himalayas visible from Jalandhar, Punjab
Coronavirus lockdown Himalayas visible from Jalandhar, Punjab

Coronavirus lockdown Himalayas visible from Jalandhar, Punjab : கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுபோக்குவரத்துகள் முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும், எங்கும் தொழிற்சாலைகள் முதற்கொண்டு எதுவும் இயங்கவில்லை என்பதாலும் காற்று மாசுபாடு குறைந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து 213 கி.மீ தொலைவுக்கு அப்பால் அமைந்துள்ளது இமயமலை. பல ஆண்டுகளாக தொடர் காற்று மாசுபாட்டால், பொதுமக்களால் இமயமலையை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

25 ஆண்டுகள் கழித்து மீண்டும் பஞ்சாப் மக்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளது இமயமலை. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

கொரோனா நோய்க்கு இதுவரை உலக அளவில் 12 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்நோயின் பரவலால் மக்கள் நடமாட்டம் குறைந்து காற்றுமாசுபாடு, ஒலிமாசுபாடு ஆகியவையும் குறைந்துள்ளது.

மேலும் படிக்க : டெல்லி வெளியேற்றம்: 1889 மற்றம் 1900 ஆண்டுகளிடம் இருந்து நாம் கற்க மறந்தது என்ன?

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus lockdown himalayas visible from jalandhar punjab

Next Story
Corona Updates : கொரோனா தடுப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனைCorona News, CM Edappadi Palaniswami
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express