scorecardresearch

கொரோனாவை விட கொடிய ‘கிருமி’கள்… அமித்ஷாவிடம் எய்ம்ஸ் டாக்டர்கள் புகார்

இது போன்று செயல்பாடுகளில் ஈடுபடும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

coronavirus outbreak AIIMS doctors, nurses, medical staffs are asked to vacate homes
coronavirus outbreak AIIMS doctors, nurses, medical staffs are asked to vacate homes

coronavirus outbreak AIIMS doctors, nurses, medical staffs are asked to vacate homes : இந்தியாவில் நாளுக்கு நாள், கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகின்ற நிலையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் இளம் டாக்டர்கள் தங்களின் வாடகை வீடுகளை காலி செய்துவிட்டு செல்லும்மாறு வீட்டின் உரிமையாளர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் வாடகை வீட்டில் குடியிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பிற மருத்துவ ஊழியர்களை, கொரோனா நோய் அச்சத்தின் காரணமாக வீடுகளை காலி செய்யக் கோரி வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துகின்றார்கள். மருத்துவர்கள் பலரும் வீடுகள் இன்றி நடுத்தெருவில் உள்ளனர். இந்த நிகழ்வினை உங்களின் பார்வைக்கு கொண்டு வருவதற்காகவே இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றோம் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் என்னை போருக்கு அனுப்பாதீர்கள் – பிரதமருக்கு மருத்துவர் வேண்டுகோள்!

coronavirus outbreak AIIMS doctors, nurses, medical staffs are asked to vacate homes : 

அமித் ஷாவுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கும் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமித் ஷா, டெல்லி காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தாவிற்கு அழைப்பு விடுத்து, இது போன்று செயல்பாடுகளில் ஈடுபடும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மருத்துவர்களுக்கு எதிரான இந்த மோசமான செயல்களை நாங்கள் கண்டிக்கின்றோம். நாடு முழுவதும் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ ஊழியர்கள் மருத்துவமனைக்கு வருவது பெரும் சிரமமாக உள்ளது. எனவே அவர்களுக்கான மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

மருத்துவர்களின் தேவைகள் குறித்து தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்து வருகிறார் எய்ம்ஸ் மருத்துவ சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராஜ்குமார். உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உடனடி நடவடிக்கைகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

நம் கண் முன்னே இருக்கும் மிகப்பெரிய சவால்களை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவோம். மக்களாக ஒருங்கிணைந்து இந்த பிரச்சனையை எதிர்கொள்வோம். மருத்துவர்களுக்கு எதிராக நடத்தப்படும் இது போன்ற பிரச்சனைகள் கண்டிக்கத்தக்கது என்று பலரும் தங்களின் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : டாக்டர்களின் தீவிர முயற்சி : ஒரு வழியாக இத்தாலியில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா!

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Coronavirus outbreak aiims doctors nurses medical staffs are asked to vacate homes