Advertisment

கொரோனா : ஒரு மாதத்திற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை... எல்லைகளும் மூடப்படுகிறது!

பிப்ரவரி 15ஆம்  தேதிக்கு பின்பு இந்தியா திரும்பிய அனைத்து இந்தியர்களும் 14 நாட்களுக்கு குவாரண்டின் செய்யப்படுவார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா : ஒரு மாதத்திற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை... எல்லைகளும் மூடப்படுகிறது!

Coronavirus outbreak : கொரானா வைரஸ் நோய் உலக சுகாதார மையம் உலகம் தழுவிய கொள்ளைநோய் என்று நேற்று இரவு அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு முக்கிய முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அனைத்து விசாக்களும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாத காலத்திற்கு இந்தியாவின் எல்லைகள் மூடப்படுகிறது. ஏப்ரல் 15ஆம் தேதி வரை இந்தியாவிற்குள் வெளிநாட்டினர்  நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கொள்ளை நோய்கள்  சட்டம் 1897-இன் (Epidemic Diseases Act, 1897)  கீழ் முக்கிய முடிவுகளை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிற்கு பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமைப்புகளின் உறுப்ப்பினர்கள், முக்கிய தலைவர்களின் வருகையைத் தவிர, வேலை மற்றும் ப்ராஜெக்ட் விசாக்களுக்கு நாளை அதிகாலை 12 மணி முதல் (13/03/2020) தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாக்கள் இல்லாமல் இந்தியாவிற்கு வருகை புரியும் ஓசிஐ (Overseas Citizenship of India) அட்டைகளைக் கொண்டு உள்ளார் இந்தியர்களின் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தடையும் 13 மார்ச் அதிகாலை 12:00  மணி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.  வெளிநாட்டினர் யாரேனும் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு வர விரும்பினால் அருகிலுள்ள இந்தியன் கமிஷனை தொடர்பு கொள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனா பாதிப்பினை குறைப்பது, சிகிச்சை மற்றும் கண்காணிப்புக் குறித்து அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  நாளையிலிருந்து ஒரு மாத காலத்திற்கு வெளிநாட்டினர் யாரும் இந்தியாவிற்குள் நுழைய இயலாது. இந்திய பொருளாதாரம் ஏற்கனவே மோசமாக இருக்கின்ற நிலையில் இது கூடுதல் அழுத்தத்தைப் தருகின்றது. இந்த மாதத்தில் துவங்க இருக்கும் ஐபிஎல் மற்றும் இந்தியன் ஓபன் பேட்மிட்டன் போன்ற விளையாட்டு நிகழ்வுகளும் கொரொனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், சீனா, இத்தாலி, கொரியா, ஸ்பெயின், ஈரான் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று பிப்ரவரி 15ஆம்  தேதிக்கு பின்பு இந்தியா திரும்பிய அனைத்து இந்தியர்களும் 14 நாட்களுக்கு குவாரண்டின் செய்யப்படுவார்கள் என்று அவர் அறிவித்தார். இந்த நடைமுறையும் நாளை அதிகாலை 12 மணியிலிருந்து செயல்பாட்டுக்கு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.

To read this article in English

தேவையற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்விக்க வேண்டும் என்றும், சர்வதேச எல்லைகள் வழியாக நாட்டுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் ஸ்க்ரீனிங் பெசிலிட்டியும் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேபினட் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய துறைகளில் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பெரும் கொள்ளை நோய் சட்டம் 1897 2-ம் பிரிவினை செயல்படுத்த வேண்டுமென்றும், அதன் மூலம், சுகாதாரத்துறை எடுக்கும் முக்கிய ஆலோசனைகள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : கேரளாவில் தீவிரம் காட்டும் கொரோனா : மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, திரையங்குகள் மூடல்!

 

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment