Advertisment

கொரோனா வார்டில் பணி : என் குழந்தைக்கு தாய்பாலும் தருவதில்லை - செவிலியர் உருக்கம்

அவள் சிரமத்திற்கு ஆளாகின்றாள் என்று தெரியும். ஆனாலும் அவளின் பாதுகாப்பு முக்கியம் என்று நான் நினைக்கின்றேன் - ரெஜி விஷ்ணு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus outbreak Kerala Nurse Reeja Vishnu stopped breast-feeding to her daughter

Coronavirus outbreak Kerala Nurse Reeja Vishnu stopped breast-feeding to her daughter

Coronavirus outbreak Kerala Nurse Reeja Vishnu stopped breast-feeding to her daughter : கொரோனாவுக்கு மக்கள் அதிகம் பாதிப்படைந்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை.

Advertisment

மேலும் படிக்க : ஆசையோடு கட்டிக் கொள்ள ஓடி வந்த குழந்தை… தடுத்து நிறுத்தி கண்ணீர் விடும் டாக்டர் அப்பா!

மேலும் உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் என யாருடனும் அவர்களால் ஒரு வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாத கடினமான காலத்தினை கொரோனா உருவாக்கியுள்ளது. கடந்த வாரம் கொரோனாவில் இருந்து மீண்ட செவிலியர் ரேஷ்மா மோகன் தாஸ், மீண்டு  வந்து கொரோனா வார்டிலேயே வேலை செய்ய விரும்புகிறேன் என்று உறுதி அளித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

மேலும் படிக்க : சிகிச்சை அளித்ததால் கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர்… மீண்டு வந்து அதே வார்டில் சேவை!

ரீஜா விஷ்ணு

கேரளாவின் கொச்சியில் இருக்கும் கலசமேரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் ரீஜா விஷ்ணு. கொரோனா வார்டில் பணியாற்றும் அவர் செய்துள்ள அர்பணிப்பிற்கு ஈடு ஏதும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான்கு மணி நேரம் மட்டும் தான் பணியாற்ற வேண்டும். ஆனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்தால் தான் ஹஸ்மட் சூட்டெல்லாம் போட முடியும். எங்களை பார்க்கும் நோயாளிகள் எங்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்பார்கள். அவர்களின் குடும்பங்கள் பற்றி விசாரிப்பார்கள். கொரோனா வார்டில் வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் எங்களிடம் அவர்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை மட்டுமே நாங்கள் கூறி வருகிறோம்.

நான்கு மணி நேரம் பாத்ரூம் கூட செல்ல முடியாது. கைகளில் எப்போதும் உறைகள் இருப்பதால் எந்த வேலையையும் சரியாக செய்ய இயலாது. உடல் வேறு வேர்த்து கொட்டிக்கொண்டே இருக்கும். வேலை முடியவும், குளித்துவிட்டு தான் வீட்டுக்கு செல்கிறேன். என்னால் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் வந்துவிட கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றேன். என்னுடைய இரண்டு வயது பெண் குழந்தைக்கு தாய்பால் குடுப்பதையும் நிறுத்திவிட்டேன். அவள் சிரமத்திற்கு ஆளாகின்றாள் என்று தெரியும். ஆனாலும் அவளின் பாதுகாப்பு முக்கியம் என்று நான் நினைக்கின்றேன் என அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment