ஆசையோடு கட்டிக் கொள்ள ஓடி வந்த குழந்தை… தடுத்து நிறுத்தி கண்ணீர் விடும் டாக்டர் அப்பா!

அவர் உடைந்து அழும் காட்சி அனைவரையும் உருக்கும் விதமாக உள்ளது.

coronavirus outbreak saudi doctor stops his son from hugging him
coronavirus outbreak saudi doctor stops his son from hugging him

coronavirus outbreak saudi doctor stops his son from hugging him : கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பல்வேறு சீரழிவுகளை உருவாக்கி வருகிறது. தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பெரும் போரையே கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளுக்கு எதிராக நடத்தி வருகின்றனர் மருத்துவர்கள். இந்த நோயால் கடுமையான மன உளைச்சலுக்கு இவர்கள் தான் ஆளாகின்றார்கள். தங்களின் மனைவி/கணவன், குழந்தைகள், குடும்பத்தினருடன் சரியாக நேரம் செலவிட முடியவில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் கிடைப்பதை உண்டுவிட்டு, இருக்கும் இடத்தில் தங்கி, அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மேலும் படிக்க  :  ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் என்னை போருக்கு அனுப்பாதீர்கள் – பிரதமருக்கு மருத்துவர் வேண்டுகோள்!

சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ ஒன்றில், சவுதி அரேபியால், வீட்டுக்கு வந்த தன் அப்பாவை கட்டிக் கொள்ள ஒரு குட்டிக் குழந்தை  ஆசையுடன் ஓடி வருகிறது. ஆனால் அந்த டாக்டர் அப்பாவோ, கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீடு வந்துள்ளார். அவரால் அந்த குழந்தையை அள்ளித் தூக்கி கொஞ்ச முடியவில்லை. அந்த குழந்தையை அருகிலேயே வர விடாமல் தடுத்து நிறுத்தி கண்ணீர் விட்டு அழுகிறார். அவர் உடைந்து அழும் காட்சி அனைவரையும் உருக்கும் விதமாக உள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றால் பீதியில் இருக்கும் மருத்துவர்கள் பலரும், தங்களின் முடிவை முன்பே அறிந்து கொண்ட மாதிரி, தங்களின் சொத்துகளை உயில் எழுத துவங்கியிருக்கின்றனர்.

மேலும் படிக்க : கொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு!

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus outbreak saudi doctor stops his son from hugging him

Next Story
அமெரிக்காவின் தேவையை உணர்ந்து களத்தில் இறங்கிய பிரபல கார் நிறுவனம்!Coronavirus outbreak ford motor is teaming up with General electric to produce ventilators
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com