Coronavirus Outbreak American doctors are writing their wills : நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சீனாவில் இந்த நோய் உருவாகியிருந்தாலும் அதிக அளவு உயிர்களை இழந்துள்ளது இத்தாலி நாடு. சீனாவைக் காட்டிலும் அதிக அளவு மக்கள் அமெரிக்காவில் நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
அனைத்து மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு அரசுகள் அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் நோய்களை எதிர்த்து போராடும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதும் கூட பெரும் பிரச்சனையாகி வருகிறது. நாளுக்கு நாள் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிக்க, மருத்துவமனை வளாகங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள்.
மேலும் படிக்க :வீட்டுக்குள் இருந்தால் நோய் தொற்று குறையுமா? WHO இயக்குநர் எச்சரிக்கை
பொதுவாக தொடர்ந்து இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு எந்த தருணத்திலும் நோயின் தாக்குதல் ஏற்படலாம். அதனால் அவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்களின் சொத்துகளை யார் யாருக்கு அளிக்க வேண்டும் என்பதை வீட்டில் சென்று உயில் எழுதி வைக்கும் வேதனையான நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. சிலர் முழுக்க முழுக்க மருத்துவமனையிலேயே இருக்கின்றனர்.
சிலர் தங்களின் குழந்தைகள் மற்றும் துணை, குடும்ப உறுப்பினர்களை சந்திக்காமல் தனிமையில் இருக்கின்றனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்களை, தங்கள் வீட்டின் பேஸ்மெண்ட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. என்ன ஆகுமோ என்ற பயத்தில் பலரும் தங்களின் சொத்துகளை தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளது மேலும் வேதனையை அளிக்கிறது.
மேலும் படிக்க : 5 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை … அசத்திய அமெரிக்கா!
இந்திய மருத்துவர்களுக்கு ரூ. 50 லட்சம் மருத்துவ காப்பீடு
இந்தியாவில் சுகாதாரத்துறை, துப்புரவுத்துறை போன்றவைகளில் தற்போது கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு “பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜானா” திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டினை உறுதி செய்து அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.