Advertisment

உணவு கொடுத்த கிராமம் : நன்றிக் கடனாய் பள்ளிகளுக்கு வெள்ளை அடித்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை அக்கிராம மக்கள் அந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus outbreak Migrant labor whitewashed entire school

Coronavirus outbreak Migrant labor whitewashed entire school

Coronavirus outbreak Migrant labor whitewashed entire school :  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் லட்ச கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. பலரும் அரசு அறிவித்திருக்கும் இடங்களில் தங்கி வருகின்றனர்.

Advertisment

ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் மாவட்டத்தில் உள்ள பல்சானா கிராமத்தில் இருக்கும் இரண்டு அரசு பள்ளிகளில் 54 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் அவ்வூர் மக்கள் செய்து வருகின்றனர். உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை அக்கிராம மக்கள் அந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மேலும் படிக்க : இணையத்தில் வெளியாகும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள்?

இந்த நன்றிக்கடனை மறவாத மக்கள் தங்களால் இயன்ற உதவியை அவர்களுக்கு திருப்பி செய்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த 2 பள்ளிகளுக்கு முழுமையாக வெள்ளை அடித்து கொடுத்துள்ளனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரிகளிடம் பேசிவிட்டு களத்தில் இறங்கிய வெளிமாநில தொழிலாளர்களின் கைவண்ணத்தால் அப்பள்ளிகள் தற்போது புது பொழிவு பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment