உதவி மையத்துக்கு போன் செய்து சமோசாவா கேட்பது? சாக்கடையை அள்ளவிட்ட மாவட்ட நிர்வாகம்!

இன்றைய சூழல் என்ன என்று தெரியாமல் அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற தொல்லை தந்த இவருக்கு இது தேவை தான்

coronavirus outbreak : Rampur man asked samosas through helpline made to clean drains : நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகின்றது. மக்களை கட்டுக்குள் வைப்பது எப்படி என்று தெரியாமல் அரசு திணறி வருகின்றன. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக இடைவெளியை பின்பற்ற அனைவருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அமெரிக்காவின் தேவையை உணர்ந்து களத்தில் இறங்கிய பிரபல கார் நிறுவனம்!

மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசாங்கம் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை உடனே அறிந்து அதனை பூர்த்தி செய்ய தங்களால் முடிந்த அளவிற்கு முயன்று வருகிறது இந்திய அரசு. உதவி மையங்கள் மூலமாக மக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது இந்திய அரசு.

 

இந்நிலையில் உத்திரப்பிரதேசம் மாவட்டத்திலிருக்கும் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அம்மாநில உதவி மையத்திற்கு போன் செய்து அவருடைய வீட்டிற்கு சூடாக சமோசா வேண்டும் என கேட்டிருக்கிறார். ஒரு தடவை மட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் அவர் கேட்டுக் கொண்டிருந்ததால் உதவி மைய ஊழியர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

அவரின் தொடர் அழைப்புகளால் எரிச்சல் அடைந்த ராம்பூர் மாவட்ட ஆட்சியர் அவருக்கு நல்ல பாடம் ஒன்றை கற்றுத் தர முயன்றார். அடுத்த முறை போன் செய்த போது “அவருக்கு சமோசா தருகின்றோம்” என்று கூறி முகவரியை கேட்டு அறிந்துள்ளனர். அவருக்கு சமோசா அளிக்கப்பட்டது. பின்னர் உள்ளூர் நிர்வாகம் அவர் கையில் துப்புரவு செய்வதற்கு தேவையான பொருட்களை கையில் கொடுத்து சாக்கடையை சுத்தம் செய்ய விட்டுள்ளனர். இன்றைய சூழல் என்ன என்று தெரியாமல் அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற தொல்லை தந்த இவருக்கு இது தேவை தான் என்று பலரும் தங்களின் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close