இந்தியாவில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா நோய் தொற்று… 26 புதிய கேஸ்கள் பதிவு

இந்தியாவில் 42,000 பேர் இதுபோன்ற நேரடி மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருக்கின்றனர்.

Coronavirus scare Highest single-day jump in new cases in India
Coronavirus scare Highest single-day jump in new cases in India

Abantika Ghosh

Coronavirus scare Highest single-day jump in new cases in India : ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்தியாவில் புதிதாக 26 கொரொனா கேஸ்கள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் இந்த நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. அதில் 17 வெளிநாட்டவர்கள் அடங்குவார்கள். இதுவரையில் 13 நபர்கள் நோய் தொற்றிலிருந்து முழுமையாக வெளிவந்துள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர். புதிதாக பதிவான கேஸ்களில் 18 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள். கேரளாவைச் சேர்ந்தவர்கள் 3 நபர்கள்.ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.

இதுநாள் வரை அதிக அளவு நோய்த்தொற்று உள்ள மாநிலமாக இருந்த கேரளா (22 கேஸ்கள்) இருந்தது. தற்போது 32 நபர்களுடன் மகாராஷ்டிரா முன்னிலை பெற்றுள்ளது. 71 வயதான மகாராஷ்டிராவை சேர்ந்த முதியவர் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தார். புல்தானாவைச் சேர்ந்த அவருக்கு கொரொனா நோய்த்தொற்று இல்லை என சுகாதாரத்துறை உறுதிசெய்துள்ளது. அவருக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார மையம் கொரொனா வைரஸை உலகளாவிய பெரும் கொள்ளை நோய் என்று அறிவித்ததில் இருந்து இந்நோய் தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்த நான்காயிரம் பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது மத்திய அரசு. இந்தியாவில் 42,000 பேர் இதுபோன்ற நேரடி மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருக்கின்றனர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க : 

இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த 450 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் வந்து சேர்ந்தனர். சீனாவிற்கு அடுத்தபடியாக வைரஸால் அதிகளவு பாதிப்பினை சந்தித்த நாடுகள் இவையாகும். இத்தாலியின் மிலானில் இருந்து இந்தியா வந்தா 218 நபர்களில் பெரும்பான்மையோர் மாணவர்கள்.அவர்கள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையால் (ITBP) டெல்லியின் சாவ்லா பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஈரானில் இருந்து வந்த 234 இந்தியர்கள் ஜெய்சல்மரில் உள்ள இந்திய ராணுவம் அமைத்திருக்கும் (Indian Army Wellness Centre ) முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க : கொரோனா வைரஸ் பற்றிய மெக்ஸிகன் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி : வீடியோ வைரல்

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளிதரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”மிலானில் இருந்து 218 இந்தியர்கள் டெல்லியை வந்தடைந்தனர். அவர்கள் 14 நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுவார்கள். இந்திய அரசாங்கம் இந்தியர்கள் எங்கே சிக்கிக் கொண்டாலும் அவர்களை பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது. இத்தாலி அரசின் ஆதரவுக்கு மிக்க நன்றி. மிலானில் இருந்து இந்தியா வந்தவர்கள் சாவல்லாவில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர்” என்று ட்வீட் செய்திருந்தார். ”ஈரானில் இருந்து 113 மாணவர்கள் மற்றும் 103 புனித பயணம் மேற்கொண்டவர்கள் இந்தியாவை வந்தடைந்தனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்” தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து இவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு நோய் தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்த பிறகே விமானங்களில் ஏற்றப்பட்டனர். பொது வெளியில் மக்கள் கூடுதலை தவிர்க்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் நிறைய மாநிலங்களில் பள்ளிகள் திரையரங்குகள் மால்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை ஞாயிற்றுக்கிழமையன்று ஆய்வு செய்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.

எல்லைப் புறங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கர்தார்பூர் ஷாஹிப் குருத்வாராவிற்கு செல்வதற்கான பதிவுகள் அனைத்தும் “க்ளோஸ்” செய்யப்பட்டது. இந்தோ-பங்களா, இந்தோ-நேபாள், இந்தோ-பூடான், இந்தோ-மியான்மர் போன்ற எல்லைப் பகுதிகள் வழியாக இந்தியா வருவதற்கு மார்ச் 15ம் தேதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.  துணை ராணுவம், ஆயுதமேந்திய மத்திய காவல்படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, மற்றும் எல்லை பாதுகாப்புப் படை ராணுவ வீரர்களுக்கு “குவாரண்டைன்” கேம்புகள் அமைக்க தயார் நிலையில் இருக்கும்படி மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

மும்பையில் சுற்றுலா கெய்ட்கள் வெளிநாட்டினருக்கு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்ய மார்ச் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கிராமப்புற, நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் 6 வார காலங்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus scare highest single day jump in new cases in india

Next Story
கொரோனா : பக்ரைனில் இருந்து விமானத்தில் வந்த 47 தமிழர்கள் மீது கண்காணிப்புcorona virus, corona virus in India , covid-19 corona virus cases in India, chennai, chennai airport, international terminal, arrival, domestic flights, ghost flights, iata
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com