Corona Updates in Tamil Nadu: ஊரடங்கு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவில் கொரோனா தொற்று இரட்டிப்பாகும் அவகாசம் 6.2 நாட்களாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நோயின் தாக்கம் ஏற்படுத்தும் வேகம் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது:
17, 2020India’s doubling rate was about 3 days, before the #lockdown. For the past 7 days, the doubling rate is 6.2 Days. 19 states show a higher doubling rate better than the national average - @MoHFW_INDIA #IndiaFightsCorona pic.twitter.com/KD73utiIFf
— PIB India ???????? #StayHome #StaySafe (@PIB_India)
India’s doubling rate was about 3 days, before the #lockdown. For the past 7 days, the doubling rate is 6.2 Days. 19 states show a higher doubling rate better than the national average - @MoHFW_INDIA #IndiaFightsCorona pic.twitter.com/KD73utiIFf
— PIB India (@PIB_India) April 17, 2020
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் அகர்வால் கூறியதாவது:
ஊரடங்கு அமலுக்கு முன்பு இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகும் அவகாசம் 3 நாட்களாக இருந்தது. கடந்த ஏழு நாட்களில், நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் அவகாசம் 6.2 நாட்களாக மாறியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 1323-ஆக உயர்வு
19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கேரளா, உத்தரகாண்ட், ஹரியாணா, லடாக், இமாச்சலப் பிரதேசம், சண்டீகர், புதுவை, பிகார், ஒடிசா, தெலங்கானா, தமிழகம், ஆந்திரப்பிரதேசம், டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம், திரிபுரா நோய் பாதிப்பு இரட்டிப்புக்கான அவகாசம் அதிகரித்து வருகிறது. தேசிய சராசரியைவிட இது அதிகமாக உள்ளது. அதாவது, நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலைமை ஓரளவுக்கு குறைந்துள்ளது.
நோய் பாதிப்பு விகிதாச்சாரம் 2020 ஏப்ரல் 1 தேதியின்படி 1.2 என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய காலத்தில் (மார்ச் 15 முதல் மார்ச் 31 வரையில்) அது 2.1 என்று இருந்தது. அதாவது நோய் பரவும் விகித வளர்ச்சியில் 40 சதவீதம் குறைந்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.