Corona in Tamil Nadu: கடந்த இரு தினங்களைக் காட்டிலும் நேற்று தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 228 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
Advertisment
தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisement
கொரோனா இன்றைய நிலவரம் குறித்த பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்,
இன்று வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் 28 ஆயிரத்து 934 பேர்.
இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இன்று 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் மொத்த எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளது.
அதிகமாக இருக்கும் முதல் 5 மாவட்டங்கள், சென்னை-228, கோவை -127, திருப்பூர் -80, ஈரோடு-70, திண்டுக்கல்- 66 .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”