கேட்டதோ 4 லட்சம்… கிடைத்ததோ 24,000 ரேபிட் கிட்கள்… தமிழகத்திற்கு இது போதுமா?

இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் வெறும் 1 மணிநேரத்திலேயே கொரோனா நோய் இருப்பதை கண்டறிந்துவிட முடியும்

Tamil Nadu, corona updates live, rapid test kit

Tamil Nadu received 24000 corona rapid testing kits  : கொரோனா வைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை என எதிர்கட்சிகள் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. தமிழகத்திற்கு 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொண்டுவரப்பட்டு விரைவில் கொரோனா பரிசோதனை, பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் முதல்வர் கூறியிருந்தார்.

மேலும் படிக்க : மலேரியாவை குணப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா பாதிப்பிற்கு பயன்படுத்தலாமா?

1.5 லட்சம் ரேபிட் கருவிகள் முதலில் ஆர்டர் செய்யப்பட்டது. பிறகு 4 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனால் அந்த கருவிகள் அனைத்தும் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 24 ஆயிரம் கருவிகள் வந்துள்ளாதாக முதல்வர் ட்வீட் செய்திருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

இன்று சென்னை வந்தடைந்துள்ள 24 ஆயிரம் கருவிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் வெறும் 1 மணிநேரத்திலேயே கொரோனா நோய் இருப்பதை கண்டறிந்துவிட முடியும். இதன் மூலம் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய நிலையும், இந்த குறிப்பிட்ட கால நேரத்தில் நோயாளிகள் வெளியே சுற்றும் நிலையும் முற்றிலுமாக தவிர்க்கப்படும். ஆனாலும் 4 லட்சம் எங்கே, 24,000 எங்கே என்று பலரும் தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க : ஒன்றரை வருட வெள்ளாமை… வாங்க ஆளில்லை: வீடியோவில் கதறும் வாழை விவசாயி!

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu received 24000 corona rapid testing kits

Next Story
ஒன்றரை வருட வெள்ளாமை… வாங்க ஆளில்லை: வீடியோவில் கதறும் வாழை விவசாயி!Covid 19 plantain cultivator talks about his loss during lockdown viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com