ஒன்றரை வருட வெள்ளாமை… வாங்க ஆளில்லை: வீடியோவில் கதறும் வாழை விவசாயி!

9944907421 இது தான் என் நம்பரு. யாரு வந்து கேட்டாலும் ரூ. 15க்கு வெட்டி கொடுக்க தயாரா இருக்கேன் என உருக்கம்.

Covid 19 plantain cultivator talks about his loss during lockdown viral video
Covid 19 plantain cultivator talks about his loss during lockdown viral video

Covid 19 plantain cultivator talks about his loss during lockdown viral video : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற காரணத்தால் இந்தியா முழுவதும் 40 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை, பொதுபோக்குவரத்து, டாஸ்மாக் ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகள் பற்றி மட்டுமே தொடர்ந்து விவாதம் செய்து வருகிறோம். ஆனால் மிகவும் மோசமான அளவில் இதனால் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் தான். பதப்படுத்த இயலாத உணவுப் பொருட்கள் அனைத்தும் வீணாக மண்ணோடு மண்ணாக மக்கிப் போவதை விவசாயிகளால் தாங்கிக் கொள்ள இயல்வதில்லை.

மேலும் படிக்க : கொரோனா இல்லாத முதல் மாநிலம் கோவா… 7 நபர்களில் 6 பேர் முற்றிலும் குணம்!

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் பி.எஸ். சாமிக்கண்ணு. கடந்த ஒன்றரை வருடங்களாக செவ்வாழை விவசாயம் செய்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக வாழைகளை ஏற்றிச் சென்று மார்க்கெட்டில் விற்பனை செய்ய வியாபாரிகள் முன் வருவதில்லை என்று கூறுகிறார். அவர்களிடம் போன் செய்து கேட்டால் வண்டிகளை ஓட்ட காவல்துறையினர் மறுப்பு தெரிவிக்கின்றனர் என்று கூறுவதாக அவர் கூறினார். மேலும் “கவர்மெண்ட்டோ உணவு பொருளுக்கு தடையில்லை எடுத்துச் செல்லலாம்னு சொல்லுது. நல்ல விலைக்கு வச்சா ஒரு கிலோ ரூ. 40 வரை செல்லும். இப்போ நான் 15 ரூபாய்க்கு விக்கிறேன்னு சொல்றேன். ஆனாலும் ஒருத்தரும் வாங்க வரமாட்டேன்னு சொல்றாங்க… ரூ. 10, ரூ. 8-க்கு தான் போகுதுன்னு சொல்றாங்க…


மேலும் படிக்க : ”நீங்கள் தான் உதாரணம்” – நெல்லை துணை ஆணையர் அர்ஜூன் சரவணனை பாராட்டிய முதல்வர்!

மார்க்கெட்டுல போய் கேட்டாக்கா ஒரு பழம் ரூ. 15க்கு கொறையாம விக்குது. இத நான் எப்படி சமாளிக்குறதுன்னு தெரியல. தயவு செஞ்சு யாராவது ரூ. 15க்கு இந்த பழத்தை எடுக்குறதா இருந்த எங்கிட்ட வரச்சொல்லுங்க… 4000 கன்னு வச்சுருக்கேன். எல்லாம் பழுத்து வெடிக்கிற நெலைக்கு வந்துரும் போல இருக்கும். ஒன்னும் சமாளிக்க முடியல. 9944907421 இது தான் என் நம்பரு. யாரு வந்து கேட்டாலும் ரூ. 15க்கு வெட்டி கொடுக்க தயாரா இருக்கேன்”. என வருத்தத்துடன் அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid 19 plantain cultivator talks about his loss during lockdown viral video

Next Story
நிவாரண உதவிகளை வழங்க தடையை எதிர்த்து வழக்கு – வைகோ நேரில் ஆஜர்chennai high court, corona virus, india lockdown, help, vaiko, case, tamilnadu government, ban, case, mdmk, volunteers, ngos,tamilnadu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com