"எனக்கு சுவாச பிரச்சினைகள் உள்ளன. எனது அறிகுறிகள் அனைத்தும் கொரோனாவுடன் ஒத்துப் போகின்றன. நான் 100% கொரோனா பாஸிட்டிவாக இருப்பேன்” என்று டாக்டர் அபிஷேக் பயானா (26) தனது மூத்த சகோதரர் அமனிடம் (31) வியாழக்கிழமை காலை கூறினார். சில மணிநேரங்களில் அவர் மரணமடைந்தார்.
திமுக எம்.எல்.ஏ குறித்து முகநூல் பதிவு: போலீசாரால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்
கோவிட் -19 பரிசோதனையில் இரண்டு முறை நெகட்டிவ் ரிசல்ட்டைப் பெற்றிருந்தார் அபிஷேக். டெல்லியின் மெளலானா ஆசாத் இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சயின்ஸில் (MAIDS) ஜூனியர் ரெசிடென்ட் டாக்டராக பணிபுரிந்த அபிஷேக், பல் நிறுவனத்தின் வாய்வழி அறுவை சிகிச்சை துறையில் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
எய்ம்ஸ் எம்.டி.எஸ் தேர்வில் 21-வது இடத்தைப் பெற்றார் அபிஷேக். அதோடு ஜூன் 26-ம் தேதியன்று ஆலோசனைக்காக ரோஹ்தக் சென்று வந்தார். அபிஷேக்கின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது இறுதி சடங்குகளைச் செய்தனர்.
அவரது நண்பர்களும் சகாக்களும் அவரை ஒப்பிடமுடியாத பாஸிட்டிவ் எனெர்ஜி கொண்ட மருத்துவராக நினைவில் வைத்திருக்கிறார்கள்.
“அவர் விடாமுயற்சி கொண்ட கடின உழைப்பாளி மருத்துவர். கொரோனா வைரஸின் அனைத்து அறிகுறிகளும் இருந்தபோதிலும், அவரது சோதனை நேர்மறையாக வரவில்லை. அவர் மாரடைப்பால் இறந்தார்” என MAIDS-ன் மூத்த மருத்துவர் ஒருவர் கூறினார்.
தனது சகோதரருடன் கழித்த கடைசி இரவை நினைவு கூர்ந்த அமன், “வியாழக்கிழமை காலை அவருக்கு மயக்கம் வர ஆரம்பித்தது. அதற்கு முன், அவர் நன்றாக இருந்தார். அவருக்கு எதுவும் நடக்காது என்று நான் அவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்… அவர் எங்களுடன் இல்லை என்று எங்களால் இன்னும் நம்ப முடியவில்லை. எங்கள் பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்” என்றார்.
அபிஷேக் ஜூலை 22 அன்று 27 வயதை எட்டவிருந்தார்.
குடும்பத்தின் கூற்றுப்படி, அவர் சுமார் 10 நாட்களுக்கு முன்பே கொரோனா வைரஸ் அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கினார். தொண்டை வலி மற்றும் இருமல் குறித்து புகார் அளித்துள்ளார்.
“நாங்கள் அவரை ஒரு மார்பு நிபுணரிடம் அழைத்துச் சென்றோம். அங்கு எக்ஸ்ரே செய்யப்பட்டது, அவருக்கு மார்பு தொற்று இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இது வைரஸ் காய்ச்சலைத் தவிர வேறில்லை என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால் மூச்சுத் திணறல் இருப்பதால், இந்த அறிகுறிகள் மார்பு தொற்று இல்லை என்று அவர் தொடர்ந்து கூறினார்” என அவரது சகோதரர் கூறினார்.
’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி
வியாழக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
“அவர் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார். எதிர்மறையான முடிவு வேறு பல காரணங்களால் வரக்கூடும். அவரது கடைசி மூச்சு வரை, கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார் அபிஷேக். அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு ஆக்ஸிஜனை வழங்கத் தொடங்கினர். ஆனால் அதற்குள் தாமதமாகிவிட்டது” என்றார் அமன்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”