Advertisment

கொரோனா அதிகரிப்பு எதிரொலி; கண்காணிப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு எதிரொலி; அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தினசரி அடிப்படையில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அனைத்து மாதிரிகளையும் வரிசைப்படுத்த மத்திய அரசு உத்தரவு

author-image
WebDesk
New Update
covid

கொரோனா தொற்று

Anonna Dutt 

Advertisment

சீனா உட்பட பல நாடுகளில் கோவிட்-19 (கொரோனா) பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று எச்சரிக்கையை எழுப்பியது மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தினசரி அடிப்படையில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அனைத்து மாதிரிகளையும் வரிசைப்படுத்த உத்தரவிட்டது.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாட்டின் கோவிட் -19 நிலைமையை மறுஆய்வு செய்ய மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் புதன்கிழமை (இன்று) ஒரு சந்திப்பை நடத்தகிறார். இந்தியாவில் வாரத்திற்கு சுமார் 1,200 பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: தாஜ்மஹாலுக்கு நோட்டீஸ்.. காரணம் இதுதான்? ஓப்பனாக சொன்ன மாநகராட்சி!

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், “ஜப்பான், அமெரிக்கா, கொரியா குடியரசு, பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் திடீரென கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) நெட்வொர்க் மூலம் மாறுபாடுகளைக் கண்காணிக்க பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட மாதிரிகளின் முழு மரபணு வரிசைமுறையையும் உருவாக்குவது அவசியம். இத்தகைய செயல்முறையானது, நாட்டில் புழக்கத்தில் புதிய மாறுபாடுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை சரியான நேரத்தில் கண்டறிவதோடு, அதற்குத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

publive-image

“...அனைத்து மாநிலங்களும் முடிந்தவரை பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அனைத்து மாதிரிகளையும் தினசரி அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மேப் செய்யப்பட நியமிக்கப்பட்ட INSACOG ஜீனோம் சீக்வென்சிங் லேபரேட்டரிகளுக்கு (IGSLs) (மரபணு வரிசைமுறை ஆய்வகங்கள்) அனுப்பப்படுவதை உறுதிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

தற்போது, ​​நாடு முழுவதும் உள்ள 50 க்கும் மேற்பட்ட ஆய்வகங்களின் INSACOG நெட்வொர்க் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளை மட்டுமே வரிசைப்படுத்துகிறது, அதாவது சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 2% சர்வதேச பயணிகளிடையே சீரற்ற முறையில் சோதிக்கப்பட்ட உறுதிச்செய்யப்பட்ட பாதிப்புகள், நியமிக்கப்பட்ட சென்டினல் தளங்களிலிருந்து வரும் மாதிரிகள் மற்றும் சமூகத்தில் ஏதேனும் கிளஸ்டர் அல்லது திடீர் அதிகரிப்பின் மாதிரிகள் ஆகியவற்றை மட்டுமே வரிசைப்படுத்துகிறது. மேலும், இந்த ஆய்வகங்கள் கழிவுநீர் அமைப்பில் வைரஸ் ஆர்.என்.ஏ.வை பரிசோதித்து வருகின்றன.

அதிகரித்த கண்காணிப்பைத் தவிர, சர்வதேச பயணிகள் வருகைக்கான நெறிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாதம் திருத்தப்பட்ட நெறிமுறை, RT-PCR சோதனையில் கொரோனா இல்லை என்ற உறுதி அல்லது முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டதன் சான்றிதழின் தேவையை நீக்குகிறது. இந்தியா வரும் பயணிகள் "தங்கள் நாட்டில் கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியின் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை அட்டவணையின்படி முழுமையாக தடுப்பூசி போடுவது சிறந்தது" என்று நெறிமுறை கூறியது.

உலகளவில், கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் சுமார் 3.3 மில்லியனாக கிட்டத்தட்ட நிலையானதாக உள்ளது. இருப்பினும், டிசம்பர் 14 அன்று வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய நிலைமை அறிக்கையின்படி, இறப்புகளின் எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 10% அதிகரித்துள்ளது.

"புதிதாக அறிவிக்கப்பட்ட வாராந்திர இறப்புகளின் எண்ணிக்கை மூன்று WHO பிராந்தியங்களில் அதிகரித்துள்ளது: ஆப்பிரிக்க பிராந்தியம் (+975%; தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த தொகுதி அறிக்கையின் படி), அமெரிக்காவின் பிராந்தியம் (+37%) மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதி (+ 81%)" என்று அறிக்கை கூறுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் சீனா தனது “பூஜ்ஜிய கோவிட் -19” கொள்கையை தளர்த்தியதால், அந்நாட்டில் இருந்து பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் அதிகரிப்பு பற்றிய அறிக்கைகள் உள்ளன. விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கை அதிகரிப்பு, காய்ச்சல் மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு திரும்பின.

ஓமிக்ரான் துணை மாறுபாடு BF.7 இந்த எழுச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. BF.7, இது BA.5.2.1.7 க்கு ஒதுக்கப்பட்ட பெயரிடல் ஆகும், இது ஏற்கனவே இந்தியாவில் உள்ள INSACOG நெட்வொர்க்கால் கண்டறியப்பட்டுள்ளது, என்று இந்த விஷயத்தை பற்றி அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் தேசிய சார்ஸ்-கோவி-2 ஜீனோம் சீக்வென்சிங் நெட்வொர்க்கின் தரவுகளின்படி, நவம்பரில் 2.5% பாதிப்புகள் மட்டுமே BA.5 பரம்பரையாக இருந்தன (BF.7 என்பது BA.5 இன் ஒரு பகுதி). தற்போது, ​​ஒரு மறுசீரமைப்பு மாறுபாடு XBB என்பது இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் மாறுபாடாகும், இது நவம்பரில் 65.6% பாதிப்புகளைக் கொண்டிருந்தது.

INSACOG இன் முன்னாள் தலைவர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறுகையில், “ஏற்கனவே மற்ற நாடுகள் கண்ட ஓமிக்ரான் அலையை சீனா இப்போது அனுபவித்து வருகிறது. மற்ற நாடுகள் அவ்வப்போது பாதிப்புகள் அதிகரிப்பதாக தெரிவிக்கின்றன, ஆனால் இது அதிக எண்ணிக்கையிலான கடுமையான பாதிப்புகள் மற்றும் இறப்புகளுடன் இல்லை.” என்று கூறினார்.

மேலும், பயணக் கட்டுப்பாடுகள் இனி தேவையில்லை. குறிப்பாக இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, ஆனால் ஒரு எழுச்சியை அனுபவிக்கும் நாட்டிலிருந்து வரும் பயணிகளின் கண்காணிப்பு மற்றும் சோதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உதவக்கூடும், என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Corona Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment