Advertisment

அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் செயல்படும் - அதிரடி காட்டிய ஜெகன்

இன்று காலை 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் மொத்தம் 40 நபர்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
COVID19 Andhra Pradesh Government takes control of all private medical colleges and hospitals

COVID19 Andhra Pradesh Government takes control of all private medical colleges and hospitals

COVID19 Andhra Pradesh Government takes control of all private medical colleges and hospitals : கொரோனா நோயை ஒழிக்கவும், அதன் சமூக பரவலை முற்றிலுமாக தடுக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்து தருவதற்கு முனைப்புடன் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், காவல்துறையினர், மருத்துவ ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அம்மாநில அரசு மேற்பார்வையின் கீழ் செயல்படும் இருப்பதாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இதற்கான அரசாணையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க : உதவி மையத்துக்கு போன் செய்து சமோசாவா கேட்பது? சாக்கடையை அள்ளவிட்ட மாவட்ட நிர்வாகம்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

திங்கள் கிழமை நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் உரையாடிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், அனைத்து தனியார் மருத்துவமனைகளும், கொரோனா சிகிச்சைக்கு தேவையான வார்டுகள் மற்றும் மருத்துவர்களை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்பதையும் ஜெகன்மோகன் உறுதி செய்துள்ளார்.

பிப்ரவரி மாதம் 4ம் தேதி 1897ம் ஆண்டு இயற்றப்பட்டது கொள்ளைநோய்கள் தடுப்புச் சட்டம். பிளேக் நோயால் ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்து போவதை உணர்ந்து இச்சட்டம் இயற்றப்பட்டது. காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, மாநில அரசுகளுக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்களை இச்சட்டம் அளித்துள்ளது. இச்சட்டத்தின் படி தேவை ஏற்படும் போது, மக்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனையின் முழு கட்டுப்பாட்டையும் அரசு எடுத்துக் கொள்ளலாம். இந்த சிறப்புப் பிரிவின் படி தற்போது இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார் ஜெகன்மோகன்.   இன்று காலை 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் மட்டும் மொத்தம் 40 நபர்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் படிக்க : டெல்லி மாநாடு சென்று திரும்பிய 1500 பேர் கண்காணிப்பு: தமிழக அரசு அறிக்கைக்கு எஸ்டிபிஐ எதிர்ப்பு

Coronavirus Andhra Pradesh Jegan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment